Saturday, April 14, 2012

ஆனாலும் நீ கொஞ்சம் தாராளம் தான்!

என்னருமை ஏப்ரல் மாதமே! உன்னைச் சொல்லிக் குற்றமில்லை! முதல் நாளே முட்டாளாக்கப் பிறந்தவள் தானே நீ? அதனால் தான் என்னவோ, ஏப்ரல் என்றாலே எல்லாருக்கும் ஒரு......... அதை என்னவென்று சொல்வது? நல்ல வேளை ஞாயிறன்று பிறந்ததால்.... அகத்தில் மட்டுமே அனைவரும் முட்டாளானோம்? இந்த மாதம் தான், புனித வெள்ளி, மஹா வீர் ஜெயந்தி, தமிழ் வருட பிறப்பு, அம்பேத்கார் தினம்.. என்று வ ரி சை யா ய் விழாக்கள்... அதனால், நாங்கள் விழுந்து விட்டோம்... அதுவும் தொடர்ச்சியாய் சனி, ஞாயிறு தினங்கள் அருகில்... அரசு ஊழியர்கள் பாடு படு ஜாலி! வெளியூர்க் கார அரசு ஊழியர்கள் கூட, இரண்டு நாட்கள்...முதல் வாரம்..இரண்டாம் வாரம் லீவ் போட்டால் போதும்! வள்ளிசாக அந்த 14 நாட்களுக்கு, இரண்டு நாட்கள் ஆஃபீஸ் வந்தால் போறும்! எங்களைப் பாரேன்.... பொது ஜனங்கள் எவ்வளவு தவிக்க வேண்டியுள்ளது? ஒரு பேங்குக்கு போக... அரசு அலுவலகத்தை நாட... பென்ஷன் க்ளாரிபிகேஷன்... ரேஷன் காடு மாற்ற.. என்று எதற்கெல்லாம் அரசை நாட வேண்டியுள்ளதோ... அதற்கெல்லாம் போக முடியாமல், நாங்கள் தவிக்கிறோமே... இந்த மாதம் மட்டும் இவ்வளவு நாட்களா லீவ்? விட்டால் ‘கம் செப்டம்பர்’ போல் கம் ஏப்ரல்’ என்று அரசு ஊழியர்கள் பாட்டு பாடப் போகிறார்கள்... ஹூம்... அவர்களாவது எஞ்சாய் பண்ணட்டும் சும்மா சொல்லக் கூடாது....... ஆனாலும்,
நீ கொஞ்சம் தாராளம் தான்!

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் ஆதங்கம் மிகவும் நியாயமானதே.

அந்த முட்டாளை அடித்துத் துவைத்துத் தலைகீழாகத் தொங்கவிட்டு, கிளிப் போட்டுக் கொடியில் மாட்டியுள்ள, படத்தேர்வு அருமையாக உள்ளது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எந்த அலுவலகத்திற்கும் எந்த நாளும் விடுமுறை அளிக்காமல் 365 நாட்களும் அனைத்து அலுவலகமும் இயங்க வேண்டும்.

தேவைப்படுவோர் மட்டும் லீவில் செல்லலாம் என மாற்றப்பட வேண்டும்.

இதற்காக உபரி ஆட்களை நியமித்து, உபரிச்சம்பளம் கொடுத்தால் கூட,
உற்பத்தி அதிகரிக்கும்;

வளரும் நாடு என்ற பெயர் மாறி வளர்ந்த நாடு என்று ஆகிவிடும்.

யாருக்கும் எந்தத்தொல்லையும் இருக்காது.

நாம் ஏப்ரில் மாதத்தில் சொல்வதை யார் கேட்கப்போகிறார்கள்.

நம்மையும் கொடியில் தலைகீழாகத் தொங்கவிட்டு, கிளிப் போட்டு விடுவார்கள், ஸ்வாமி.

அதனால் நான் எஸ்கேப்.

இராஜராஜேஸ்வரி said...

கம் ஏப்ரல்’

வளரும் நாடு என்ற பெயர் மாறி வளர்ந்த நாடு என்று ஆகிவிடும்.

பூனைக்கு யார் மணிகட்டுகிறார்கள் பார்ப்போம்..

வெங்கட் நாகராஜ் said...

ம்...

தொடர்ந்து வேலை செய்யணும்னு சொல்றீங்க! ரைட்டு :)

ரிஷபன் said...

3 நாளும் ஆபீஸ் போன எனக்கு பத்திகிட்டு வருது !

அப்பாதுரை said...

ஆச்சரியம்.. ஏப்ரல் மாத லீவ் நாட்கள் விவரம்.

ரிஷபன் :)