Tuesday, April 3, 2012

கவிஞனின் மனைவி அமைவதெல்லாம்.....


பொதுவாக பிரபல கவிஞர்களின் மனைவிகளைப் பற்றி நம்மில் யாருக்காவது தெரியுமா? குறைந்த பட்சம் அவர்கள் பெயராவது தெரியுமா? (ஒன்றிரண்டு பெயர்கள் தவிர.).
சாய்ந்த கதவருகில், ஒருக்களித்து..,கணவன் இடும் ஏவலை நிறைவேற்றக் காத்துக் கொண்டு இருக்கும்..மனதில் ஆசையின்றி ஏதோ ’இவரகத்தில் வந்து வாக்கப் பட்டு விட்டோம், யார் மனமும் கோணாமல், நம் செயல்கள் இருக்க வேண்டும் என்கிற ஜாக்கிரதை உண்ர்வுடன்..
எந்த வித விருப்பும், வெறுப்பும் இன்றி, ஸ்திதப்பிரக்ஞர்கள் போல்..மொத்தத்தில் ஒரு ரோபோ நடந்து கொள்வது போல்...
அந்த கவிஞனுக்கு அப்போது தான் பீறிட்டுக் கிளம்பும்..” அடியே, இவாளுக்கு காஃபி கொண்டு வா..அப்படியே கொறிக்க ஏதாவது கொண்டு வா..” இருக்கும் கால் லிட்டர் பாலில் அத்தனை பேருக்கும் காஃபி..இருக்கும் எண்ணையில் பொறித்த வடாம்.....தட்டை கைமுறுக்கு....இப்படி ஏதாவது ஒன்று.. எல்லாவற்றையும் தின்று விட்டு கவிஞனின் கவிதையைப் பாராட்டும் கும்பல்...
வீட்டு வேலை முடித்து அயர்ந்து போய் இருக்கும் அருமனைவியிடம் சண்டைக்குப் போகிறான் ஒரு கவிஞன்! அவன் பெண்மையின் மாண்பு பற்றி எழுதிய கவிதையை அவள் அப்போது பாராட்டவில்லையாம்!
வீட்டில் பத்திரப் படுத்தி வைத்த மணி அரிசிகளை காக்கை, குருவிகளுக்கு விசிறி எறிந்து விட்டு,’காக்கை, குருவி எங்கள் ஜாதி’ என்று பாடினான், ஒரு கவிஞன்..விதியே என்று கேட்டுக் கொண்டு இருப்பது கூட குந்தகமோ என்ற கவலையில் அவன் மனைவி!

..சிந்து நதி மிசை நிலவினிலே, சேர நன்னாட்டிளம் பெண்களுடனே.
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,தோணிகள் ஓட்டி விளையாடிடுவோம்..
என்ன ஆகும்?
ஜில்லென்ற காற்று உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் போய், ஜலதோஷம் .. மூக்கடைப்பு..என்று கடைசியில் அது ஒரு காய்ச்சலிலோ..ஜன்னியிலோ.. ஒற்றைத் தலைவலியிலோ தான் போய் முடியும்..
அப்பவும் அந்த கவிஞனுக்கு, பற்றற்ற அவன் மனைவி தான் பற்று போட வேண்டும்!
கவிஞர்களை குழந்தைகள் என்று சொல்வதா..காட்டு மிராண்டிகள் என்று சொல்வதா...ஊரோடு ஒத்துப் போகாதவர்கள் என்று சொல்வதா? போதாத குறைக்கு, வறுமை வேறு ’சயாமிய இரட்டையர்’ போன்று அவனுடன் கூடவே வர..
பாவம் அந்த மாதரசிகள்!
அகழ்வாரைத் தாங்கும் நிலம் கூட சமயத்தில் வெகுண்டு எழும்..பூகம்பமாய் வெடிக்கும்..சுனாமியாய் கடலிலிருந்து ஆர்ப்பரிக்கும்..
பொறுமையே பூஷணமாய் அணிந்த அந்த மாபெரும் கவிஞர்களின் மாதுகுல சிரோன்மணிகள் அதனினும் பொறுமை மிக்கவர்கள்....
உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.தாயே
நம் பாரத மாதா அருகில், தங்களுக்கான இருக்கைகள் போடப் பட்டுள்ளன..வாருங்கள்..
வந்து அமர வேண்டும் நீங்கள்...

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

யாருமே யோசிக்காத ஒன்று.....

கவிஞர்கள் பற்றியே எல்லாரும் பேசிக்கொண்டு இருக்க, அவர்களின் மனைவி படும் பாடு பற்றி யோசித்து எழுதியது நன்று....

ஒரு சின்ன சந்தேகம்! நீங்க கூட அடிக்கடி கவிதை எழுதுவீங்களே! :))))

மனோ சாமிநாதன் said...

கவிஞர்களுக்கு அவர்களின் மனைவியரின் வலிகளை உணர இயலாவிட்டாலும் ரசிகரான நீங்கள் அந்த வலிகளை உணர்ந்து எழுதிய விதம் அருமை!!‌

CS. Mohan Kumar said...

//கவிஞர்களை குழந்தைகள் என்று சொல்வதா..காட்டு மிராண்டிகள் என்று சொல்வதா...ஊரோடு ஒத்துப் போகாதவர்கள் என்று சொல்வதா? போதாத குறைக்கு, வறுமை வேறு//

அருமையான பதிவு சார். கவிஞர்கள் வெற்றிக்கு பின் இருக்கும் அவர்கள் துணைவியாருக்கு வந்தனங்கள் !!

CS. Mohan Kumar said...

ஆமா நாம ப்ளாக் எழுதினா மட்டும் வீட்டில் அடி விழுதே ஏன்?

ஸ்ரீராம். said...

இவர்கள் கவிதை எழுதிய உடன் முகவாய்க் கட்டையை தோளில் ஒரு இடி இடித்துக் கொண்டிருப்பார்களோ...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

I like this kind of your writing very much. Very true & practical. ;)))))

ADHI VENKAT said...

வித்தியாசமா தான் யோசிச்சிருக்கீங்க சார்.
எத்தனையோ பேர் இப்படி இருந்திருப்பார்கள் பாவம்.....

Unknown said...

அருமையான சிந்தனை

ரிஷபன் said...

பொறுமையே பூஷணமாய் அணிந்த அந்த மாபெரும் கவிஞர்களின் மாதுகுல சிரோன்மணிகள் அதனினும் பொறுமை மிக்கவர்கள்....
உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.தாயே

Super

vasan said...

இல‌க்குவ‌ன் ம‌ணைவியும், புத்த‌னின் ஆத்துக்காரியும் ம‌ன‌தில் நிலாடுகிறார்க‌ள் ஆர்3