Tuesday, March 27, 2012

கிணறு..!!!


பேருந்திலிருந்து
இறங்கியவுடன்
பொடி நடை நடந்தால்,
தெரு வந்து விடும்..
வீட்டிற்குப் போவதற்கு முன்,
அந்த கிணற்றுப் பக்கவாட்டுச்
சுவற்றில் நண்பர்கள்..
“ கோட்டைலேர்ந்து வரே..
என்ன வாங்கிண்டு வந்துருக்கே?”
பையில் உள்ள வேர்க்கடலை..
வெள்ளரிப் பிஞ்சு, பஜ்ஜிப்
பொட்டலங்கள் அபேஸ்!
கொஞ்சம் சினிமா..கொஞ்சம் அரசியல்..
அழகாகப் போகும் மாலை நேரங்கள்!
ஆனால், இப்போது..
இருபது வருடம் கழித்து,
சென்றால்...
தொலந்து விட்டது எங்கள் ஊர்..
நண்பர்கள் டி.வி.பெட்டிகளில்
புதைந்து கொள்ள,
கிரிக்கெட் விளையாடிய தோப்பு,
கைக்கெட்டா விலை நிலங்களாய்
உருமாற,
எங்கே ஓடிப் போய் ஒளிந்து கொண்டதோ,
எங்கள் அக்ரஹாரக் கிணறு!

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எங்கே ஓடிப் போய் ஒளிந்து கொண்டதோ,
எங்கள் அக்ரஹாரக் கிணறு!//

அந்தக்கிணற்றை மூடி, அஸ்திவாரமாக்கி அதன் மேல் அடுக்கு மாடிக் கட்டடங்கள் பல எழுப்பியிருப்பார்கள்.

எனறாவது பல நூற்றாண்டுகளுக்குப்பின் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கக் கூடும்.

கவலைப்பட வேண்டாம், ஸ்வாமீ!

கே. பி. ஜனா... said...

ஆமாம் அந்த நாட்கள் தொலைந்து விட்டன எங்கோ!

ஸ்ரீராம். said...

"விலை நிலங்களாய்" -- நல்ல வார்த்தை. நடைமுறைப் புரிந்தாலும் இந்த ஏக்கம் எல்லோரிடமும் இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

இப்படித்தான் ஒவ்வொன்றாய் தொலைத்துக் கொண்டு இருக்கிறோம்.....

நல்ல கவிதை சார்.

middleclassmadhavi said...

Kinatraik kaanum!

ADHI VENKAT said...

கால மாற்றத்தில் கிணறு கூட காணாமல் போய் விட்டதா....

சிறு வயதில் அத்தை வீட்டின் கிணத்தடியில் தோய்த்து, குளித்து, இரவு நேரங்களில் கிணத்தடியில் எல்லோரும் உட்கார்ந்து பேசுவது விளையாடுவது என்று இனிமையான நாட்கள்.

ரிஷபன் said...

missing everything..

raji said...

கிணற்றுக்குள் நல்ல சூழல்களையும் சேர்த்து புதைத்து எல்லாவற்றையும் தொலைத்திருக்கிறோம்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கிடைத்ததையெல்லாம் இழக்கத் தயாரென்றால் இழந்ததெல்லாம் கிடைத்துவிடும்.

இழந்ததை விடக் கிடைத்தது சொகுசானது. இழந்தது கிடைக்கக் கஷ்டப் படவேண்டும்.

அதனால் நாம் மனதுக்குள் புலம்புவதோடு நிறுத்திக்கொள்வோம். கஷ்டப்பட மனமோ உடம்போ இடங்கொடுக்காது.

மனோ சாமிநாதன் said...

அந்த நாள் அருமைகள் எல்லாமே நிகழ்கால அவசர இயந்திர கதியில் மறைந்து போனாலும் அசைக்க முடியாத பொக்கிஷங்களாய் மனதில் சிம்மாசனம் போட்டுக்கொன்டு இருக்கின்றன!