Thursday, December 29, 2011

குழந்தையும்,பொம்மையும்!


#
பள்ளிக்கூடத்திற்கு கூட்டிக்
கொண்டு போவேன் என்று
அடம் பிடித்த குழந்தையின்
முதுகில் லொட்டன்று
வைத்து அம்மா
இழுத்துக் கொண்டு போக
ஏக்கத்துடன் பார்த்தது,
பொம்மை!
##
இரண்டு குழந்தைகள்
ஒரு பொம்மைக்காக,
சண்டை போட்டன..
குஷி தாங்காமல்,
காற்றில் பறந்தது
பொம்மை!
###
பொம்மை சாப்பிட்டால்
தான் சாப்பிடுவேன்..
அடம் பிடித்தாள்
குழந்தை..
பொம்மையின் வாயில்
அம்மா ஓட்டை போட,
கண்ணீர் தளும்பியது
குழந்தைக்கு!
####
பொம்மை பெண்டாட்டியாம்..
காலால் எட்டி
உதைத்தான் குழந்தை..
மாலையில்..
காலையில் அம்மா
அப்பாவை திட்டியது
ஞாபகம் வர...

6 comments:

ரிஷபன் said...

குஷி தாங்காமல்,
காற்றில் பறந்தது
பொம்மை!

பொம்மையை வைத்து நிஜக் கவிதைகள்

அப்பாதுரை said...

நறுக்கருமை.

[புத்தாண்டு வாழ்த்துக்கள்]

aarvie88 said...

Loved the last two!!!!

சிவகுமாரன் said...

படிக்கும் போது, குழந்தையாகவும் , சமயங்களில் பொம்மையாகவும் ஆகிவிடுகிறேன்.
அருமையான கவிதை,

சிவகுமாரன் said...

தங்கள் திருவரங்கத்து பெருமானுக்கு , ஒரு பாமாலை இயற்றியிருக்கிறேன்.
படித்துப் பார்த்து கருத்திட வேண்டுகிறேன்.
www.arutkavi.blogspot.com
www.sivakumarankavithaikal.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

பள்ளிக்கூடத்திற்கு கூட்டிக்
கொண்டு போவேன் என்று
அடம் பிடித்த குழந்தையின்
முதுகில் லொட்டன்று
வைத்து அம்மா
இழுத்துக் கொண்டு போக
ஏக்கத்துடன் பார்த்தது,
பொம்மை!

சிறுவயது பொம்மைகள்
ஆனந்த மலரும் நினைவுகள் தந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..