Friday, October 21, 2011

செய்வினையும்,செயப்பாட்டு வினையும்...

எலுமிச்சை வியாபாரி ஏழுமலைக்கு கோபம் வந்தது.
”...எவனெவனோ, எதுஎதுவோ வாங்கறானுவ...எவனும் எளுமிச்சம் பளத்தை ஏறெடுத்தும் பாக்க மாட்டேங்கிறானே...”
எல்லாவற்றுக்கும்
எல்லார் மீதும்..எரிச்சலாய் வந்தது..
திடீரென ஒரு ஐடியா!
செயலாக்க, சைக்கிளை ஓங்கி மிதித்தார்.
”...என்னங்க, கேள்வி பட்டீயளா, சேதியை.. நம்ம செருதூர் செல்லாண்டி அம்மன் கண்ணில
ரத்தம் வருதாம்..”
செருதூர் செல்லாண்டி அம்மன் கண்ணில ரத்தம்!!!
காட்டுத் தீயாய் செய்தி பரவியது..
“ என்ன குத்தம் செஞ்சோமோ?”
” நா அப்பவே சொன்னேன்..தெய்வத்துக்கே அடுக்கல..”
“ எதனாலயாம்?”
“ கலி முத்திப் போச்சு”
ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள்.
“ வூட்ல, தலைச்சன் புள்ள இருந்தா, அவனுக்கு ஆகாதாமே இது?”
“ அப்படியா?”
“ என்ன செய்யறது...”
“ ஒண்ணும் கவலைப் பட வேண்டாம் மாமா..வெள்ளிக் கிழமை துர்க்கைக்கு ராகு கால அர்ச்சனை செய்து, ஒரு எலுமிச்சம் பள மாலை ஒண்ணு சாத்துங்க..வந்த துன்பம்..வர துன்பமெல்லாம்
ஓடியே போயிடும்”
எலுமிச்சம்பழ வியாபாரம் பிச்சுக்கிட்டுப் போக, ஏழுமலைக்கு ஏக குஷி!
சீட்டியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
“என்னாங்க, உங்களத் தானே?”
“ சொல்லு கண்ணு?”
“ கேள்விபட்டீயளா, நம்ம செருதூர் செல்லாண்டி அம்மன் கண்ணுல ரத்தம் வருதாம்..அதனால, தலைச்சன் புள்ளைக்கு ஆகாதாமில்ல.. நீங்க தலைச்சன் புள்ள தானே..பரிகாரம் செஞ்சேன்..”
“ என்ன புள்ள பரிகாரம்?” ஏதும் தெரியாதது போல் கேட்டார், ஏழுமலை..
” வூட்டு சொந்தக்கார பொண்டு புள்ள சனஙகளுக்கு, சேப்பு புடவையும், சேப்பு லவிக்கையும் வாங்கித் தரணுமாமில்ல.. நம்ம குடும்பத்துல தான் உங்க சொந்தம்..எங்க வூட்டு சொந்தம்னு ஒரு பதினைந்து டிக்கட் இருக்கே..அத்தனைக்கும் புடவை வாங்கிட்டேன்..”
ஹா..........ஹா.............
எலுமிச்சம் பழம் ஒன்று தடுக்கி விடவே, எக்கச் சக்கமாய் விழுந்த ஏழுமலை, அதன் பிறகு எழுந்திருக்கவேயில்லை!

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எலுமிச்சம் பழம் ஒன்று தடுக்கி விடவே, எக்கச் சக்கமாய் விழுந்த ஏழுமலை, அதன் பிறகு எழுந்திருக்கவேயில்லை! //

ஏழுமலை மட்டுமா! அவருடைய சாமர்த்தியமான வியாபார டெக்னிக்கைப் பாராட்டியபடியே படித்து வந்த நானும் தான், ஸ்வாமி. நல்ல பகிர்வு. பாராட்டுக்கள். vgk

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா..... நல்ல சிறுகதை...

RAMA RAVI (RAMVI) said...

அருமையான கதை.

ஸ்வர்ணரேக்கா said...

எலுமிச்சம் பழ மாலை சேப்பு புடவையாவும் ரவிக்கையும் மாறிடுச்சா... அதுவும் 15 பேருக்கு...

ஹா.. ஹா.. தன்வினை தன்னையே சுட்டு விட்டதே!!!

அருமை...

ரிஷபன் said...

இப்படி ஏதோ ஒரு நம்பிக்கை இருப்பதால்தான் அவரவர் வாழ்க்கை சக்கரம் ஓடுகிறது..