
இப்பொழுதெல்லாம்,
எந்த குழந்தையும்,
RAIN RAIN GO AWAY
COME AGAIN ANOTHER DAY,
LITTLE TOMMY WANTS TO PLAY,
RAIN RAIN GO AWAY...
என்று பாடுவதில்லை,
மழையும் எதிர்ப்பு
இல்லாத நிலையில்,
வஞ்சனையின்றி,
பெய்கிறது!
*
யார் காட்டிலோ மழை!
*
கத்திக் கப்பல் செய்யக்
கற்றுக் கொண்ட நாளில்,
வானம் பார்த்தது பூமி!
இப்போது ஊரே,
வெள்ளக் காடு - ஆனால்,
கப்பல் செய்வது
மட்டும்,
மறந்து விட்டது!
*
மழை நீரும்,
சாக்கடையும்,
ஒன்றாகக் கலந்தன,
‘சமத்துவபுர’த்தில்!
*
12 comments:
மழை பற்றிய அருமையான கவிதைகள்...
கத்திக் கப்பல் செய்ய மறந்து போச்சா... அடுத்த தடவை திருச்சி வரும்போது சொல்லித்தரேன்... :))
கவிதை மழையில் நனைந்தேன்..
எவ்வளவு கப்பல் செய்யணும்! என்னிடம் வாருங்கள்.
ரிஷபன் சார், அழகாகச் சொல்லிவிட்டார். அவருடன் நானும் நனைந்துள்ளேன். தலைதவிட்ட புது டர்க்கி டவலும் குடையும் கொடுத்தனுப்புங்கள். கடைசி பாரா கடைசி வார்த்தையின் தான் ஆரண்யநிவாஸ் நிற்கிறார். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அருமையான கவிதை. உங்கள் கவிதைக்காட்டில் இப்போது மழை பெய்கிறது! ))))
அருமையான சிந்தனை
இது மழைக்கு மட்டுமா பொருந்துகிறது ?
குறைந்த வரியில் நிறையச் சொல்லிப் போகும்
தங்கள் கவிதை அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
அருமையாக இருக்கிறது மழை கவிதை.
//கத்திக் கப்பல் செய்யக்
கற்றுக் கொண்ட நாளில்,
வானம் பார்த்தது பூமி!
இப்போது ஊரே,
வெள்ளக் காடு - ஆனால்,
கப்பல் செய்வது
மட்டும்,
மறந்து விட்டது!//
அருமையான வரிகள்!
எதுவுமே இல்லாதபோது ரசனை உணர்ச்சி அதிகமாக இருக்கும்.
எல்லாமே இருக்கும்போது ரசிக்கக்கூட நேரமில்லாமல் போகும்!
புகைப்படமும் உங்கள் கவிதையும் சின்னஞ்சிறு வயது மழைக்கால நினைவுகளை மீன்டும் கொண்டு வந்து விட்டது!
//கத்திக் கப்பல் செய்யக்
கற்றுக் கொண்ட நாளில்,
வானம் பார்த்தது பூமி!//
பிரமாதம்!
மிக அருமை ஆர் ஆர் ஆர். கவிதை மழை வெள்ளம்..:)
"அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா" என வேண்டுகோள் விடுத்து
பதிவிட்டுள்ளேன்.வருகை தந்து எனது கருத்துக்கு வலுவூட்டும்படி அன்போடு அழைக்கிறேன்.
சார்..இதோ வருகிறேன்....
கலக்கல் மழை .
அடடா குடை எடுத்து வர மறந்துட்டேனே
Post a Comment