Thursday, October 13, 2011

ரேஷன் கடை துரைக்கண்ணு!!


இப்ப எல்லாம் நம்ம துரைக்கண்ணு அனாவசியமான ஏன்..அவசியமான வம்பு தும்புக்கும் போறதுல்ல..தான் உண்டு..தம் வேலை உண்டு என்று கம்முனு இருக்கிறான்.
“ஏல... துரைக்கண்ணு என்னம்மா கண்ணு ஆச்சு?” என்று மேலத்தெரு சம்முகம் கேட்கும் போதும் ஒரு நமட்டு சிரிப்பு தான் அவனிடமிருந்து பதிலாக வரும்..
முன்னல்லாம் இவன் பேரே அடாவடி துரைக்கண்ணு தான்..
பய புள்ளக்கி கல்யாணம் ஆச்சு..அடாவடித் தனம் அடங்கிப் போய் ஒளுங்கா வேலைக்குப் போக ஆரம்பித்தான்...
ஆனா இப்ப ரொம்பல்ல அடங்கி போயிட்டான்..
ரேஷன் கடையில ஆளாளுக்குப் புலம்பும் போது சிரித்துக் கொண்டான், துரைக்கண்ணு.
அவன் அவஸ்தை அவனுக்கல்லவா தெரியும்?
இப்பத் தான் கம்சலை உண்டாயிருக்கா...இத்தனை நா களிச்சு..
வம்சம் தளைக்க வேணாமா?
இந்த சமயத்தில போயி எவன் வாயிலும் விள வேண்டாமே!
..ஏற்கனவே அந்த புதுக் கவித வேற அடிக்கடி வந்து பயமுறுத்துது!
அதனாலேயே, இப்பல்லாம் ரொம்ப ஜாக்ரதையாவே..ரேஷன் சாமானெல்லாம் கரீட்டா எடை போட்டு தரான், துரைக்கண்ணு!
நாள் நெருங்க..நெருங்க..ரொம்ப டென்ஷனாயிட்டான்...
மூலத் தெரு புள்ளாருக்கு, முழுசா மூணு தோப்புக்கரணம் போடறான், ரேஷன் கடைக்கு போறதுக்கு முன்னால...
யார் சிரிச்சாலும் கவலைப் படாமல்!
புள்ள நல்லா பொறக்கணுமே...
புள்ள நல்லா பொறக்கணுமே...
எவனெவன் வயிற்றெறிச்சலைக் கொட்டி கொண்டானோ..அத்தனை பயலுவலும் மனசுக்குள்ளாற வந்து மிரட்டித் தொலையாறுங்க..துரைக்கண்ணுவ..
அந்த நாளும் வந்தது!
”... இங்க யாருங்க துரைக்கண்ணு?”
“ நாந்தானுங்க..”
“ கங்கிராஜுலேஷன்ஸ்...உங்களுக்கு ஆம்பள புள்ள பொறந்திருக்கு..”
“ பார்க்கலாமுங்களா...சிஸ்டர்?”- தவிப்புடன் கேட்டான், துரைக்கண்ணு...
” சாரிங்க..குழந்தையை பெட்டியில வைச்சிருக்கு..இப்ப பார்க்க முடியாதுங்க?”
“ஏனுங்க?”
“ ஓவர் வெயிட்!”

8 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஓவர் வெயிட்! --எதிர்பாராத திருபபம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரேஷன் பொருட்கள் போலவே அண்டர் வெயிட்டா இருக்குமோன்னு எதிர்பார்த்த எங்களுக்கு இது ரொம்ப ஓவர்.

ஓவர் வெயிட்!

[கதையின் இறுதியில் எதிர்பாராத திருப்பம் என்கிறார்களே, அது இது தானோ!!]

ஓவர் வெயிட் !

அதுதான் ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தியின் ஸ்பெஷாலிடி.

ரிஷபன் said...

வெயிட்டான கதை

வெங்கட் நாகராஜ் said...

ஓவர் வெயிட்.... அட என்ன ஒரு திருப்பம்.... :)

குறையொன்றுமில்லை. said...

நல்ல திருப்பம்.

RAMA RAVI (RAMVI) said...

எதிர்பாராத அழகான திருப்பம்.

மோகன்ஜி said...

இது 'போங்கு' ஆட்டம். ஒரு நோஞ்சான் குழந்தைப் படத்தை முதலிலேயே போட்டு என்ன ஏமாத்தல்லைன்னா கண்டுபிடிச்சிருப்பேனாக்கும்!

அப்பாதுரை said...

அட!