Thursday, August 18, 2011

ஒபாமாவும், நானும் !


பஸ். அதிலுள்ள நாற்பது பேர்களில் நானும் ஒருவன்!
பக்கத்து சீட் காரரின் செல் கிளிக்கியது.
இங்கு நான் என் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன்.
..பக்கத்து வீட்டுக்கு வந்த கடிதம்..பக்கத்து வீட்டுச் சண்டை..இதையெல்லாம் கேட்பதோ..பார்ப்பதோ கொஞ்சம் கூட நாகரீகமற்ற செயல் என்றாலும் நாம் நியாண்டர்தால் மனிதன் காலத்திலிருந்து இதைத் தான் செய்து கொண்டுதான் இருக்கிறோம்,கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்! அந்த வரிசையில் இப்போது செல்ஃபோன் பேச்சும் சேர்ந்து விட்டது! கேட்க வேண்டும் என்ற விருப்பு இல்லாமலிருந்தாலும் அது நம் காதுகளில் விழத் தான் செய்கிறது.. நம் மக்களுக்கும் கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் அந்தரங்கத்தையெல்லாம், அரங்கிற்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்! நாமும் அந்த கண்ராவிகளை எல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டி இருக்கிறது..
செல் ஃபோன் தொடர்ந்தது.
“என்னப்பா..ஆளையே காணோம்..ரிடய்ர்டாயிட்டா அவ்ளோவ் தானா?”
”அதில்லை ஸார்......கொஞ்சம் பிசி.. மாதங்கி என்ன பண்றாங்க?
”LKG சேர்த்தாச்சு..உம் ரெண்டாவது பொண்ணு என்ன பண்றா?”
“அவளும் அமெரிக்கா போயாச்சு..”
“ ரெண்டு குழந்தைகளையும் அமெரிக்கா அனுப்பிட்டு.. என்ன மனுஷன்பா நீ?”
“ அட நீங்க ஒண்ணு.. நம்ம ஊர் கோயமுத்தூர் போறதும் ஹூஸ்டன் போறதும் ஒண்ணு தான்! கோயமுத்தூர் போனா செல்லில் பேசத் தான் முடியும்..ஹூஸ்டன்னா..இங்க ஸ்கைப்ல பார்த்துக்கலாம்!”
”அப்புறம்”
“படிக்கணும்னு ஆசைப் பட்டா..இனிமேல் உங்க ரெண்டு பேருக்கும் ஒபாமா தான் ஒப்பா..அம்மான்னு மனசைக் கல்லாக்கிக்கிட்டு அனுப்பிச்சுட்டேன்”
”என்னமோப்பா”
...மனுசன் நகைச்சுவை உணர்வு உள்ளவர் போல இருக்கிறது..ஒபாமா என்றவுடன் எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது..
அசட்டுத் தனமாய் உடம்பு குறைவதற்கு நாம எல்லாரும் பாடுபடுகிறோமே..அதற்கு பதிலாய் ...
இப்படி செய்தால் என்ன?
எப்படியாவது BMI ஐ அதாவது BODY MASS INDEX மெயிண்டெய்ன் பண்ணனும்.அதுக்கு எதுக்கு உடம்பைக் குறைக்கணும்..கொஞ்சம் வித்யாசமா யோசிக்கலாமே.?
என்ன பண்ணலாம்னு யோசிக்கிறீங்களா? ரொம்ப சிம்பிள்..உடம்பைக் குறைக்கறதுக்குப் பதிலாய், உயரத்தை ஜாஸ்தியாக்கினா என்ன?
ஏன்...ஏன்...ஏன்.. அட ஏன் சார் இதுக்குப் போய் முறைக்கிறீங்க? நான் சொன்னதைத் தான் ஒபாமாவும் சொல்றார்..செலவைக் குறைக்க முடியாது..கடன் வேணா கூட வாங்கலாம்னு..அதைப் போய் பெரிசா பேப்பரில போடறீங்க.. நான் சொன்னா மட்டும் இப்படி கோச்சுக்கிறீங்களே?...
முனியாண்டி விலாஸ் மூட்டைப் பூச்சி கூட முட்டை பரோட்டா செய்கிறார் போல...
பக்கத்து சீட்டில் நகைச்சுவை உணர்வுடன் ஒருவர் அமர்ந்தாலே, நமக்கும் அது தொற்றிக் கொண்டு விடுகிறதே?
இன்னமும் அந்த நகைச்சுவை மனிதர் நண்பருடன் செல்லில் பேசிக் கொண்டு இருக்க..
அவரை அப்படியே அம்போ என்று விட்டு விட்டு, நான் மட்டும் பஸ்சை விட்டு இறங்கினேன், மனதை கல்லாக்கிக் கொண்டு!
ஏனென்றால், நான் இறங்கும் ஸ்டாப் வந்து விட்டது!!

"அது சரி..உம்

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ரொம்ப சிம்பிள்..உடம்பைக் குறைக்கறதுக்குப் பதிலாய், உயரத்தை ஜாஸ்தியாக்கினா என்ன? //

நானும் இதுபோலெல்லாம் பலமுறை யோசித்ததுண்டு.

எல்லோருமே நல்ல உயரமாகிவிட்டால், பஸ், ரயில், விமானம் முதலியவற்றின் ஏறும் பாதைகள், அனைவர் வீட்டிலும் உள்ள அனைத்து நிலைப்படிகள், கார்களின் வடிவமைப்பு என்று எல்லாவற்றையும் சுத்தமாக மாற்ற வேண்டும். ஒட்டடைக்குச்சி வாங்கும் செலவு மட்டும் கொஞ்சம் குறையலாம்.

அதுபோல இரண்டு காதுகளும், நம் மூக்கையும் கடவுள் வேறு எங்காவது மாற்றி வைத்திருந்தால், மூக்கண்ணாடி எப்படிப்போட்டுக்கொள்வது என்று நினைத்துக் குழம்பியதும் உண்டு.

அனைவரையும் இதுபோல சிந்திக்கத்தூண்டியுள்ள அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள். vgk

RAMA RAVI (RAMVI) said...

உயரமாவது ஏன் 18 வயதுடன் நின்று விடுகிறது? உடம்பு மட்டும் எத்தனை வயசானாலும் குண்டு ஆகிறது? நானும் இது மாதிரி எல்லாம் சிந்தித்து பார்த்திருக்கிறேன்.
அனைவரும் சிந்தித்து பார்க்கும் விஷயத்தை நகைச்சுவையாக சொல்லி யிருக்கீங்க.

ஸ்வர்ணரேக்கா said...

நல்ல யோசனை தான்...

குறையொன்றுமில்லை. said...

அட இது நல்ல யோசனையா இருக்கே.

ADHI VENKAT said...

உயரமாய் இருந்தா குண்டு தெரியாது தான்... ஆனா நாங்கள்லாம் உயரமாக இருந்துண்டு எவ்வளவு கஷ்டப்படறோம் தெரியுமா....

நல்ல சிந்தனை சார்.

முனைவர் இரா.குணசீலன் said...

நாமும் அந்த கண்ராவிகளை எல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டி இருக்கிறது..

“ அட நீங்க ஒண்ணு.. நம்ம ஊர் கோயமுத்தூர் போறதும் ஹூஸ்டன் போறதும் ஒண்ணு தான்!!



அறிவியல் படுத்தும் பாடு!!!

எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வெட்கப்படுவது எப்படி என்று கூட அறிவியல் சொல்லித்தரும் சூழல் வந்தாலும் வியப்பதற்கில்லை அன்பரே.

முனைவர் இரா.குணசீலன் said...

இப்போதெல்லாம் சிறு குழந்தைகளின் முதல் விளையாட்டுப்பொருளே அலைபேசியாகவோ , ஐபாடாகவோதான் இருக்கிறது..

!!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்து....

பஸ்ஸில் தான் முக்கியமான விஷயங்களை பேசுபவர்களும் இருக்கிறார்கள்.... :)

ரிஷபன் said...

அது சரி.. இவர் பேசுறது கேட்கும்.. அடுத்தவர் பேசுறதும் கேக்குதா..
உங்க காது பயங்கர கூர்மை.

Unknown said...

பாவம்! ஒபமா!
உயர்ந்த நாடு! உயர்ந்த மனிதர்!
உயர்ந்த எண்ணம்!
புலவர் சா இராமாநுசம்