
இது கதையல்ல நிஜம்!
நேற்று இரவு..அதாவது 31.08.2011 இரவு எட்டு மணி வாக்கில்.. சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
செல்ஃபோன் அடிக்க,
“ மீனா...விஷயம் தெரியுமா? நம்ம சத்திக்கு ஆக்சிடெண்ட்..ஸ்பாட்லேயே...”
அழுகின்ற குரல் இங்கு நன்கு கேட்டது..
“ ஐயையோ..என்னம்மா இது? விளக்கமா சொல்லு?”
“ ஆறரை மணி வாக்கில மோட்டார் சைக்கிளில வெளியில ஃப்ரெண்டை பாக்க கிளம்பும்போது...யாரோ டவுன் பஸ் காரன் அடிச்சுட்டு...”
”என்னப்பா ..யாருக்கு என்ன ?”- நான்.
“ நம்ம சத்தி...”
அதற்கு மேல் எனக்கு விளக்கம் தேவையில்லை..சத்தி ரொம்பவும் நல்ல பொறுப்பான பையன்..எனது ஷட்டகரின் தம்பி..உறவை மீறிய நட்பு!...அன்பான மனைவி..சின்னஞ்சிறு பெண் குழந்தை...எல்லாரையும் இப்படி தவிக்க விட்டு விட்டு எப்படியடா மனம் வந்தது? .
ஆண்டவா நீ இவ்வளவு மோசமானவனா?
ஆறு மணி வரை படு கேஷுவலாய் டிவி. பார்த்துக் கொண்டிருந்தவன்..அடுத்த அரை மணி நேரத்தில் இல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..........
குறள் :
ஒரு நாழிகை முன் உளனொருவன் இனி இல்லையெனும்,
சிறுமை உடைத்து இவ்வுலகு.
13 comments:
//ஆறு மணி வரை படு கேஷுவலாய் டிவி. பார்த்துக் கொண்டிருந்தவன்..அடுத்த அரை மணி நேரத்தில் //
இன்றைய போக்குவரத்து நெருக்கடிகளும், பெருகிவிட்ட வாகனங்களும், மனிதர்களின் அவசரமும், செல்போனில் பேசிக்கொண்டே பயணிப்பதும், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதும், எமனின் வேலையை எளிதாக்கி விடுகின்றன.
கேட்கவே மிகவும் சங்கடமாக உள்ளது.
ஆண்டவன் மீது சில சமயம் சந்தேகம் ஏற்படவே செய்கிறது. மனது கலங்குகிறது.
கதைதானே இது?? கதையாக இருந்தாலுமே மனதை கலங்க அடித்துவிட்டது..
கதையல்ல, நிஜம்.. என்று போட்டதுமே முடிவைப் படிக்க மனசு சிரமப்பட்டது.
கதையல்ல..மேடம்.. நிஜம்...உண்மையிலேயே நடந்தது..டூ வீலரில் போகிறவர்கள் எல்லாரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்கிற ஆதங்கத்தில் போடப் பட்ட இடுகை இது!
கதையல்ல நிஜம் என்று படித்தபின் முடிவைப் பார்த்தவுடன் கஷ்டம் அதிகம் ஆகிவிட்டது....
தலைக்கு கவசம் அணிவது நமது பாதுகாப்பிற்கு என்பது நம் மக்களுக்கு எப்போது புரியும்....
சில மாதங்களுக்கு முன் திருப்பராய்துறை அருகில் ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டு இருந்த என் கசின் ஒருவருக்கும் இதே முடிவு... நினைவிலிருந்து அகலா ஒரு விஷயம்....
வாழ்க்கை ஒரு கிறுக்கலான ஓவியம் என்பதை உணர்த்திய நிகழ்வு இது...எனக்கும் பரிச்சயமானவர் சக்தி.....அவர் பொசுக்கென மறைந்து விட்ட சேதி இடியாக இறங்கியது....இறைவனின் துல்லியமான கணக்கில் ஓர் அற்புத மனிதனை இழந்திருக்கிறோம்.
ஸக்தி.... உன் இன்முகமும் அதில் சதா ஒளிரும் புன்சிரிப்பும் கணப்போதில் காணாமல் போனதே..
அதிர்ந்தே பேசாதவன் நீ! உதிரும்போது கூடவா நீ அதிராமல் எங்களை இப்படி அதிரவைக்க வேண்டும்?
இறக்கும் வயதா இது..அன்றில் நீ இறக்க வேண்டிய முறையா இது? முறைதானா இது?
இனி உன்னைக் காணுதல் இயலாது என்பதை நினக்க இயலவில்லையே...நெஞ்சம் பொறுக்குதில்லையே...
’உன் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்று எழுதுவது கூட சுலபமாக இல்லையே...
very sad.
ரொம்ப சங்கடமான விஷயம். இப்படிப்பட்ட சம்பவங்களின் போது கடவுளின் இருத்தல் மேல் சந்தேகம் வருது.
உன் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என்று எழுதுவது கூட சுலபமாக இல்லையே...
கனக்கவைக்கிறது பகிர்வு. விழிப்புணர்வு தருகிறது ஹெல்மெட் அணிய.
கதை என்று சொல்ல மாட்டீர்களா?? நிஜம் என்று சொல்லிவிட்டிர்களே!மனது பதைபதைகிறது.
வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.விழிப்புணர்வு தரும் பகிர்வு.
கொடுமை. மனதை கலங்க வைத்து விட்டது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
மனசுக்கு கஷ்டமாய் இருக்கு மூவார். நிலையில்லா உலகில் நாம் ஆடும் ஆட்டம்....
Post a Comment