Sunday, August 14, 2011

முதல் கவிதை!!


பட்டத்தைப் பறக்க விட்டு,
பரதேசி போல் முடி வளர்த்து,
பக்கவாட்டில் கிருதாவைப்
பாங்குடனே வளர்த்து விட்டு,
இஞ்சி தின்ற குரங்கு போல்,
எப்போதும் முகம் தொங்கி,
கடை வீதி நடந்து சென்றால்,
ஜவுளிக் கடை பொம்மை கூட
சட்டென்று திருப்பிக் கொள்ளும்!
(மீள் பதிவு)

14 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

படித்து வேலையில்லா
பட்டதாரிகளைச் சொல்கிறீர்களா..?

முனைவர் இரா.குணசீலன் said...

ஓவியல் உணர்வுபூர்வமாக இருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

இஞ்சி தின்ற குரங்கு போல்,
எப்போதும் முகம் தொங்கி, /

யதா பாவம். தத் பவதி.

ரிஷபன் said...

உற்சாகம் உள்ளிருந்து வர வேண்டும்..
வலியுறுத்திய விதம் அழகு.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

படம் பார்த்து க(வி)தை சொன்ன உங்கள் நேர்மை எனக்கு ர்ர்ர்ர்ர்ரொம்பப் பிடித்திருக்கிறது!

கே. பி. ஜனா... said...

கவிதை அருமை...

குறையொன்றுமில்லை. said...

கவிதை நல்லா இருக்கு. படமும் பொருத்தம்.

RAMA RAVI (RAMVI) said...

கவிதை நல்லா இருக்கு.முதல் கவிதைன்னு போட்டுயிருக்கீங்களே? உங்களுடைய முதல் கவிதையா?

வெங்கட் நாகராஜ் said...

கவிதை அருமை....

ADHI VENKAT said...

கவிதை நன்றாய் இருந்தது சார்.

வசந்தமுல்லை said...

துணிந்தவனுக்கு வானமே எல்லை!!
வானம் தொட்டுவிடும் தூரம்தான் !!

Unknown said...

படமும் பாடலும் ஒத்துப்போயின
படமே பாடிட சத்துமேயாயின

அருமை!

புலவர் சா இராமாநுசம்

மனோ சாமிநாதன் said...

The poem as well as this beautiful sketch are very nice indeed!

[I can not paste my tamil feedback here. Hence I have typed this english comment! I hope you wonuld not mind it!]

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//யதா பாவம். தத் பவதி.//

முந்திக்கொண்ட இராஜராஜேஸ்வரி சொன்னதுதான் நான் சொல்ல நினைத்ததும்.

படமும் பொருத்தம் ஆர்.ஆர்.ஆர்.சார்.