Tuesday, August 2, 2011

காத்திருத்தல்!!!

” இது வாணாம் போ ”
சின்னஞ்சிறு குழந்தையால்
புறந்தள்ளப் பட்ட அதற்கு
அழக் கூடத் தெரியவில்லை..
அதனால்,
நிராகரிக்கப் பட்ட அது,
இன்னொரு குழந்தைக்காக,
காத்துக் கொண்டு இருக்கிறது,
பொறுமையாய்........

9 comments:

Chitra said...

nice.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா.... அருமையாக குட்டியாக உள்ளது அந்தக் குட்டிப்பாப்பா பொம்மை போலவே.

மோகன்ஜி said...

பொம்மைக்கும் முதுமைக்கும் ஏதும் தொடர்பு உண்டா? என்று எதற்கோ தோன்றுகிறது. ஒரு நல்ல கவிதை எண்ணற்ற பரிமாணங்களை வாசகன் கருத்தில் ஏற்படுத்தும்.. இதைப் போல!

அப்பாதுரை said...

அருமை

ஸ்ரீராம். said...

ஜீவனுள்ள கவிதை.

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது.

எனக்கொரு கவிதை நினைவுக்கு வருகிறது.

பொம்மையைத் தாலாட்டித்
தூங்கிப் போகிறது குழந்தை!

முனைவர் இரா.குணசீலன் said...

இன்று வேர்களைத்தேடி கவிதை ஊர்தி வந்திருக்கிறது.
http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_03.html

இராஜராஜேஸ்வரி said...

இன்னொரு குழந்தைக்காக,
காத்துக் கொண்டு இருக்கிறது,
பொறுமையாய்.....
அழக்கூடத்தெரியாத பொம்மை!
அழகான கற்பனை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை.