Tuesday, August 9, 2011

ஏ.கே.47 ம், கடவுளும்!!!


ராமன் கையில் வில்,
காளி கையில் திரிசூலம்,
விஷ்ணுவிற்கோ சக்ராயுதம்,
முருகன் கையிலோ வேல்,,
அனுமனுக்கு கதை,
பட்டாக் கத்தியுடன்
எல்லைத் தெய்வம்..
பக்கத்திலொரு குதிரை..
அதனருகில் தொப்பியணிந்த
துரைசாமி தெய்வம்,
கையிலோ .303 ரைபிள்!
எல்லாவற்றையுடன்
கண்டவுடன் என்னுள்,
எழுந்ததே கேள்வி....
ஏ. கே. 47 வுடன்,
ஏன் இன்னமும் ஒரு
தெய்வத்தைப் படைக்கவில்லை,
மனிதன்???????????

8 comments:

வெங்கட் நாகராஜ் said...

அதானே..

இப்ப நீங்க ஐடியா குடுத்துட்டீங்கல்ல... யாராவது நிச்சயம் செய்துடுவாங்க.... :))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஏ. கே. 47 வுடன்,
ஏன் இன்னமும் ஒரு
தெய்வத்தைப் படைக்கவில்லை,
மனிதன்??????????? //

ஏ.கே. 47 வைத்திருக்கும் தானே தான் தெய்வம் என்ற மமதையால் தானோ என்னவோ?

[ நம் வ.வ.ஸ்ரீ. அவர்களின் பாக்ஷையில் AK என்பதற்கு வேறொரு அர்த்தம் உண்டு. அது உங்களுக்கும் நினைவிருக்கும் என்று நம்புகிறேன், அதை நினைத்து சிரித்தேன், இதைப்படித்ததும் ]

அன்புடன் vgk

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கல்கி அவதாரத்தில் அதுதான் ஆயுதமாயிருக்குமோ?

அப்பாதுரை said...

ஆப்கானிஸ்தானில் இருக்குது அந்த தெய்வம்.

Chitra said...

கூடிய சீக்கிரம் வரும்....ஆனால், வராது..... ஹி,ஹி,ஹி,ஹி....

RAMA RAVI (RAMVI) said...

//ஏ. கே. 47 வுடன்,
ஏன் இன்னமும் ஒரு
தெய்வத்தைப் படைக்கவில்லை//
இப்ப உலகம் இருக்கிற சூழ்நிலையில அந்த மாதிரியும் சீக்கிரமா ஒரு தெய்வம் படைக்க பட்டுவிடும் என்று தான் நினைக்கிறேன்.

ரிஷபன் said...

நல்ல ஆசை..

ADHI VENKAT said...

நீங்க சொல்லிட்டீங்கல்ல...இனிமேல் யாராவது ஏ.கே 47 வைத்துக் கொண்டு நான் தான் கடவுள் என்று சொன்னாலும் நம்புவதற்கில்லை.