Friday, August 26, 2011

(2) குறளும், குறுங்கதையும் !!!!



அந்த அஞ்சாம் க்ளாஸ் ஆசிரியர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
காலாண்டு தேர்வு முடிந்து கடைசி நாளன்று இவ்வாறு சொன்னார்:
” புள்ளைங்களா? லீவ் முடிஞ்சு, ஸ்கூல் வரும் போது, கேள்வித் தாள்களுக்கு பதில் எதுவும் எழுதிட்டு வர வேண்டாம்..எந்த கட்டுரையும் எழுத வேண்டாம்...சிம்பிளா ஒண்ணே ஒண்ணு!
லீவில, என்ன ’ஹோம் ஒர்க்’னா,கடவுள எல்லாரும் பார்த்துட்டு வாங்க..உங்க அனுபவத்தை நீங்க சொன்னா போதும்..அதையும் ஒரு பக்கம்...ஒண்ணரை பக்கம்னு எழுத வேண்டாம்..வெறுமன...வாயால சொன்னாப் போதும்..”
உய்யென்று ச்ந்தோஷமாய் கத்திக் கொண்டு ஓடின பிள்ளைகள், இன்று தான் ஸ்கூலுக்கு வந்திருக்கின்றன..
ஆசிரியர் ஒவ்வொருவரையும் கேட்க ஆரம்பித்தார்.
“கோபு.. நீ கடவுளப் பார்த்தியா?”
“ பார்த்தேன் சார்..லீவுக்கு திருச்சி போயிருந்தேன்..அங்கே, உச்சிப் பிள்ளையார் சாமியைப் பார்த்தேன்”
“ பாபு... நீ?”
“ சார்... நான் சென்னை போயிருந்தேன் சார்...அங்க பார்த்தசாரதி கோவில்ல..பெருமாளைப் பார்த்தேன்..”
“ சீனு?”
“ சார்.. நான் லீவுக்கு எங்கேயும் போகலை..ஆனா.. நம்மூர் சாமியை வெள்ளிக்கிழமை போய் பார்ப்பேன்..”
” ரகு... நீ கடவுளப் பார்த்தியா?”
“ சார்... நான் பார்க்கலை சார்?”
” ஏம்ப்பா?”
“ சார்.. நான் எந்த ஊருக்கும் போகலை..உள்ளூரில போயும் சாமியைப் பார்க்கலை..ஆனா, சாமியைப் பார்த்தவனை நான் பார்த்தேன்..சார்..”
“ என்னப்பா சொல்றே?”
“ அம்மா..தீனி வாங்கிக்க காசு கொடுத்தாங்க..தீனி வாங்க கடைக்குப் போறப்ப, ஒருத்தர் பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தார்..அவரைப் பார்க்கவே பரிதாபமாய் இருந்துச்சு.. நான் அம்மா தந்த காசுக்கு ஒரு பன் வாங்கி, அவர்ட்ட கொடுத்தேன்..அப்ப அவர் கண்ணைப் பார்க்கணுமே? அந்த கண்ணில நான் சாமியைப் பார்த்தேன், சார் ”
ரகுவை அப்படியே ஆசிரியர் கட்டிக் கொள்ள, ஒவ்வொருவராய் கை தட்ட ஆரம்பிக்க, அந்த கரகோஷம் அடங்க முழுசாய் ஐந்து நிமிடம் ஆகியது!!!

குறள்:

அரிசி,உப்பு,புளி,பருப்பு,எண்ணெய் இவ்வைந்தும்,
பஞ்சாட்சரமாகுமாம் பசித்தவர்க்கு.

14 comments:

ரிஷபன் said...

அந்த கண்ணில நான் சாமியைப் பார்த்தேன், சார்

ஏழையின் சிரிப்பில் இறைவனைப் பார்த்தது ஒரு காலம். கண்ணிலே கடவுளைப் பார்த்தது புதுக் குறளின் காலம்.

உங்க அனுபவத்தை நீங்க சொன்னா போதும்.

பசங்களைப் பேச வைத்து பார்க்கும் ஆசிரியர் அழகாய் இருக்கிறார்!

வெங்கட் நாகராஜ் said...

ஏழையின் சிரிப்பில் தான் இறைவன் இருக்கிறான் என்பதை அழகிய கதையாக சொன்னது அருமை..

உங்கள் குற்ள் கதைகள் நன்று... தொடருங்கள் மூவார் முத்தே...

தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்...

குறையொன்றுமில்லை. said...

உண்மையிலும் உண்மை ஏழையின் சிரிப்பில் தான்
கடவுள் இருக்கிரார்.

Philosophy Prabhakaran said...

நல்லது...

Chitra said...

wow!!! What a great story!!!

RAMA RAVI (RAMVI) said...

அருமை.அற்புதமான கதை,பகிர்வுக்கு நன்றி.

vasan said...

க‌ண்க‌ளால், க‌ண்க‌ளில் க‌ண்ட, க‌ண்க‌ண்ட‌ தெய்வ‌ம்.

ADHI VENKAT said...

கதையும் குறளும் அற்புதம் சார். தொடருங்கள். நாங்களும் வந்து கொண்டு இருக்கிறோம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான அசத்தலான கதை. தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் இல்லாத குறையைத் தாங்கள் தீர்த்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறான சிறுகதைகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

அப்பாதுரை said...

மறுபடியும் பின்றீங்க.

manichudar blogspot.com said...

கரகோஷம் மட்டுமல்ல கண்களில் கண்ணீரும் தளும்புகிறது. இப்படி ஒரு ஆசிரியர் இருந்தால் ஒரு ரகு அல்ல ஒவ்வருவரும் ரகு ஆகலாம்.

Unknown said...

அந்த வாத்தியார இன்னுமா விட்டு வச்சிருக்கானுங்க.பிள்ளைகளை கெடுத்துருவானே. --

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

அருமையான கதை! குறளும் சூப்பர்..!!

இராஜராஜேஸ்வரி said...

அரிசி,உப்பு,புளி,பருப்பு,எண்ணெய் இவ்வைந்தும்,
பஞ்சாட்சரமாகுமாம் பசித்தவர்க்கு./

பஞ்சாட்சர விருந்து படைத்திருக்கிறீர்கள் இன்று. பாராட்டுக்கள்.