நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Wednesday, July 27, 2011
பகைவனுக்கும் அருள்வாய்!!!
ரஃப்பான நம் பக்கத்து வீட்டில்,
ஹைனா ரப்பானி!!!
அன்பு ததும்பும் கண்கள்..
அறிவுச் சுடரென முகம்..
பெண்மையை போற்றுதும்!
பெண்மையை போற்றுதும்!!
பெண்கள் பேசட்டும்..
பெண்களே பேசட்டும்..
அன்பு அங்கு பொங்கட்டும்...
பண்பு கொஞ்சம் பரவட்டும்...
இரக்கம் எழும்பட்டும்..பிரச்னையின்,
ஆணிவேரையே அவர்கள்
அசைத்திடுவர்
தம் ஆற்றலிலே..
நட்பு எங்கும் பெருகட்டும்..
வன்முறையும் ஒழியட்டும்..
பயங்கரவாதமெனும் பெருஞ்சுடர்..
பைய..பைய...
அணையட்டும்...
வளமை நம்முள் பெருகட்டும்..
நம்மை பிடித்த அந்த பிசாசு,
நன்றாக ஓடட்டும்!!
ஆசியா கண்டத்தில்..
அற்புத ஜோதியாய்,
பாரதம் மிளிரட்டும்...
அதன் புகழ்
பாரெங்கும் பரவட்டும்!!!
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நல்லதொரு எதிர்பார்ப்பு. நல்லதாகவே நடக்கட்டும்.
ஆசீர்வாதம், எதிர்பார்ப்பு, ஆசை.... ததாஸ்து.
அன்பு அங்கு பொங்கட்டும்...
பண்பு கொஞ்சம் பரவட்டும்..
எங்கள் ஆசையும் அதுதான்..
எல்லோருடைய ஆசையும் அதுதான், அதை அழகான கவிதையாக்கி கொடுத்துவிட்டீர்கள் சார், நன்றி.
நல்ல ஆசீர்வாதம்.. ததாஸ்து..:) !!
நல்லதே நடக்கட்டும்!
தலைப்பு தான்...
அப்பாத்துரை நறுக்கென்று கேட்டிருக்கிறார். பகைவன் என்றே முடிவாகி விட்டதே. காரணம் நாமல்லவே?
Post a Comment