நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Wednesday, May 11, 2011
உங்க அப்பன் வீட்டு ரோடா?
அது ஒரு அழகிய மணி மண்டபம். அரியணையில் எமதர்ம ராஜா வீற்றிருக்கிறான். பக்கத்தில் சற்று,தாழ்ந்த ஆசனத்தில் சித்ரகுப்தன், தன் ’லேப்டாப்பில்’ ஏதோ feed பண்ணிக் கொண்டிருக்கிறான்..
“சித்ரகுப்தா, இந்த மாசம் turnover எவ்வளவு?
“ மஹாராஜா மார்ச் டார்ஜெட்டை விட 18% அதிகமாகவே பண்ணியிருக்கிறோம். நமது கிங்கரர்கள், முழு முச்சாய் வேலை செய்ததால், இது சாத்தியமாயிற்று, மன்னா..”
“ அவர்களுக்கு நன்றி சொல்வதற்கு, ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணலாமா? “
சித்ர குப்தன் சொல்ல ஆரம்பிப்பதற்குள், வாசலில் ஆரவாரம்..கிங்கரர்கள் கூட்டம்
உள்ளே நுழைய மிகவும் ப்ரயாசைப் பட, வாசலில் நிற்கும் துவார பாலகர்கள் அவர்களை
மிகவும் சிரமப் பட்டு தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“ யாரங்கே, அவர்கள் எல்லாரையும் உள்ளே அனுப்பு”
திமுதிமுவென்று அத்தனை கிங்கரர்களும் உள்ளே நுழைந்தனர்.
“ வாருங்கள்..வந்து அமருங்கள்”
இருகரம் கூப்பி அனவரையும் வரவேற்றான், எமதர்ம ராஜன்.
“ கிங்கரர்களே மிக்க சந்தோஷம்..தங்களின் இடையறா உழைப்பைப் பார்த்து?” என்றவன்,
கட்டளையிட்டான்.
” எல்லாருக்கும் லிம்கா கொண்டு வாருங்கள்”
“இந்த சந்தோஷத்தை நாம் கொண்டாடலாம், என்ன கிங்கரர்களே?”
“ மன்னவா, மன்னிக்க வேண்டும்.. நாங்கள் சந்தோஷமாய் இல்ல..”
“ஏன்?”
“ மன்னவா, பூலோகத்தில் இறப்பு விகிதம் ஜாஸ்தியாகி விட்டது.அதனால், எங்களுக்கும் வேலைப் பளு ஜாஸ்தி..இந்த எருமை மாட்டை வைத்துக் கொண்டு, பாசக் கயிறை வீச முடியவில்லை.இங்கு ரிடையர்டா ஆனவர்களுக்கும் replacement இல்லை..fresh recruitment ம் இல்லை..கேட்டால்,” Recruitment ban" என்கிறீர்கள். வந்து குவிகிறது வேலை. எங்களுக்கும் வயதாகி விட்டது. முன்போல் ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை..”
“ என்ன செய்யலாம், சொல்லுங்கள்?”
அதற்குள் கூல் ட்ரிங்கஸ் வரவே,எமன் அனைவரையும் உபசரித்தான்.
” முதலில் இதை குடித்து விட்டு,பேசலாமே?”
கழனித் தொட்டியில்,எருமை மாடுகள் உறிஞ்சுவது போல், சர்ரென்று சப்தத்துடன் குடித்தார்கள், கிங்கரர்கள்.
“ உங்கள் கோரிக்கை என்னவோ?”
“ நமது சித்ர குப்த பிரபுவிற்கு, லாப்டாப் கொடுத்து, SAP ஐயும் லோடு பண்ணி விட்டீர்கள்.. நாங்கள் இன்னமும் அதே எருமை மாட்டைக் கட்டிக் கொண்டு அழ வேண்டியது தானா?”
“ என்ன வேண்டும், சொல்லுங்கள்?” டார்கெட் அச்சீவ் பண்ணியதில் எமன் ரொம்பவுமே
நல்ல மூடில் இருந்தான்.
“ எல்லா இடங்களிலும் டெக்னாலஜி புகுந்து விட்டது. நரர்களின் கடைசி காரியத்திற்குக் கூட, மின்தகனம் வந்து விட்டது. எல்லா நரர்களும் டூ வீலர், ஃபோர் வீலர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பூலோக வாழ்க்கையே, எந்திரமயமாகி விட்டது.எங்கும் ஒரே பரபரப்பு.
சீக்கிரம் போகவேண்டும் என்று எல்லாருமே துடித்து....போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சீக்கிரமே ‘வந்து’ விடுகிறார்கள்...”
“ நரர்கள் கொத்து, கொத்தாய் வருகிறார்கள், மன்னா..இன்னமும் இந்த எருமை மாட்டை வைத்துக் கொண்டு எங்களால் சமாளிக்க முடியவில்லை..அதனால்..”
”அதனால்..என்ன வேண்டும் கேள், கிங்கரா?”
“இன்னோவா”
“இன்னோவாவா?”
”ஆம், மன்னவா ...அது மட்டுமல்ல..எங்களுக்கு ஆளுக்கு இரண்டு உதவியாளர்கள் வேண்டும்...”
எமதர்ம ராஜன் ஒரு நிமிடம் யோசித்தான்..பிறகு சொன்னான்.
“ கிங்கரர்களே... நம்மிடம் பர்மணென்ட் போஸ்டிங்குக்கு சாங்ஷன் இல்லை..
ஆனால் ஒன்று செய்கிறேன்..அப்ரண்டிஸ்களை ரெக்ரூட் செய்வோம்..மூன்று வருடங்கள்
consolidated pay தான் அவர்களுக்கு...அனுப்பி விடலாம்...மூன்று வருடங்கள் முடிந்த பிறகு, அவர்களை அனுப்பி விட்டு, புதிதாய் அப்ரண்டிஸ்களை எடுக்கலாம்..சரிதானே”
“ சரி தான்...”
”எமதர்மன் வாழ்க”
“எமத்ர்மன் வாழ்க”
கூச்சல் அடங்க முழுதாய் அஞ்சு நிமிடம் ஆயிற்று.குதூகலத்துடன் கலைந்து சென்றனர், கிங்கரர்கள்.
இந்த மாதிரியாகத் தானே நான் கற்பனை செய்து கொண்டு நடக்கும் போது, சர்ரென்று,ஒரு கார் என்னை உரச......
பயத்தில்...ஆத்திரத்தில் நான்” உங்க..........” என்று திட்ட ஆரம்பிப்பதற்குள்,கார் போய் விட, அதன் பின் கண்ணாடியில்.....
“YES, THIS IS MY FATHER'S ROAD!” - என்று எழுதி இருந்தது!!!
Labels:
வெட்டிப்பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
க்ளாஸ்.
ஒண்ணாங்க்ளாஸ்.
குலுங்கக் குலுங்க சிரித்தேன்..
சீக்கிரம் போகவேண்டும் என்று எல்லாருமே துடித்து....போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சீக்கிரமே ‘வந்து’ விடுகிறார்கள்...”
உண்மையிலும் உண்மை!!
//அதன் பின் கண்ணாடியில்.....
“YES, THIS IS MY FATHER'S ROAD!” - என்று எழுதி இருந்தது!!///
ஹா ஹா ஹா ஹா டச்சிங்....
அருமையான ஆரண்யநிவாஸுக்கே உள்ள அட்டகாசமான நகைச்சுவை மிளிர்கிறது.
எருமைக்கு பதில் இன்னோவா
அப்ரண்டீஸ் [லேடீஸ் தானே?] சூப்பர் ஐடியா.
எப்படியோ உற்பத்தி இலக்கை எட்டிப்பிடித்தால் ஓ.கே. தான்.
வாழ்க எம கிங்கரர்கள் !
வளர்க சாலை விபத்துக்கள் !!
ஒழிக போக்குவரத்து விதிகளைப்பின்பற்றும் பிற்போக்கு எண்ணங்கள் !!!
எமதர்ம ராஜன் ஒரு நிமிடம் யோசித்தான்..பிறகு சொன்னான்.
“ கிங்கரர்களே... நம்மிடம் பர்மணென்ட் போஸ்டிங்குக்கு சாங்ஷன் இல்லை..
ஆனால் ஒன்று செய்கிறேன்..அப்ரண்டிஸ்களை ரெக்ரூட் செய்வோம்..மூன்று வருடங்கள்
consolidated pay தான் அவர்களுக்கு...அனுப்பி விடலாம்...மூன்று வருடங்கள் முடிந்த பிறகு, அவர்களை அனுப்பி விட்டு, புதிதாய் அப்ரண்டிஸ்களை எடுக்கலாம்..சரிதானே”
....... இந்த ஐடியாவை IT industry ல இருந்து காப்பி அடிச்சிட்டாரா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நல்லா காமெடியா எழுதி இருக்கீங்க.
மூவார் முத்தே! பத்தவச்சுட்டீங்களே! கிங்கரர்களெல்லாம் ஒழுங்கா வேலை செஞ்சிகிட்டு இருந்தாங்க... இதப் படிச்சு வச்சாங்கன்னா யமலோகத்துலே ஐ.ஆர்.பிரச்னை வருமே...
நசிகேதனுக்கு அடுத்தபடி யமனைக் கலக்கமடைய வைத்த மூவார் முத்தே! யமகாதகப் பதிவுக்கு ஒரு ஜே!
நல்ல கதை... :)
மோகன் ஜிக்கு நன்றி..
“யமகாதகப் பதிவு” !
வேறென்ன சொல்ல? இதை விட அழகாய், பொருத்தமாய்..
ஹா ஹா ஹா சுவையான பதிவு.
அருமை... வாழ்த்துக்கள்...
மூவார் முத்து சார்...ரோடில நடக்கும்போதெல்லாம் ‘ப்ளாக்’ பத்தியே நினைச்சுகிட்டு நடக்காதீங்க சார்... அதெப்படி உங்க கற்பனைகுதிரை இப்படி எகிறிப் பறக்குது?
அய்யோ அருமை தோழர்
ஹாஹாஹா .. சிரித்துக்கொண்டே படித்தேன்.. ஆர் ஆர்ஆர்..
எமகாதக கிங்கரப் பதிவு தான் !
Post a Comment