மிருகங்களுக்கு
இயற்கையை,
சூழ் நிலையைப்
பேணிக்
காப்பாற்றுவதில்,
அக்கறை அதிகம்!
ஆறறிவு படைத்த
மனிதர்க்கு?
*
வறுமையை ஒழிக்க
முடியவில்லை....
ஆனால்
பிச்சைக் காரர்களுக்கு,
தங்க கப்பரை
தரும்
நாம் போடும்
திட்டங்கள்!!!
*
மூன்று வயது
சிறுவன் போல்,
முரண்டு பிடிக்கிறார்,
தாத்தா..
அவருக்கு,
முதியோர் இல்லம்
வேண்டாமாம்!
10 comments:
அந்த ஆறாவது அறிவு தான் அனைத்துக்கும் காரணமோ?
பாத்திரம் அறிந்து பிச்சை போடுபவர்கள், பாவம் அந்தத்தங்கக்கப்பரை வைத்துள்ளவர்களுக்கு போடமாட்டார்களே!
முரண்டு பிடிக்கும் தாத்தாவை விட்டுவிடுவார்களா என்ன; எப்படியும் விட்டுவிட்டு வந்துவிடுவார்களே அந்த முதியோர் இல்லத்தில்!
[voted 4 to 5]
முதியோர் இல்லம் செல்ல முரண்டு பிடிக்கும் தாத்தா! விட்டுவிடுவார்களா என்ன பிள்ளைகள்! :(
நல்ல கவிதைகள்.
nice!!!
த்ரீ ஸ்டாரிடமிருந்து த்ரீ ஸ்டார்ஸ்.
தங்கக் கப்பரையாயிருந்தாலும் வாங்குவது பிச்சை என்ற அறிவு வர வேண்டும்...
ஆர்.. ஆர்.. ஆர்.. எழுதுவது போல ஆர் எழுத இயலும்?!
மூன்று முத்துக்கள்
ஆகவே மை லார்ட், மக்களை விட மாக்களே உயர்பிறப்பினர் என்று தீர்ப்பு கூறுமாறு உங்களை பணிவன்புடன்....
மூன்று முரண்கள்:(
விலங்கு இயற்கை அளித்தவை
மனிதன் இயற்கையை அழிப்பவை.
தங்க காப்பரைக்கு நிதி ஒதுக்கி
தங்க முலாம் பூசி, மீதியைப் பதுக்கி.
பள்ளிக்குச் செல்ல மூன்று வயதில் முரண்டு பிடிக்கும் பிள்ளையை மிரட்டிய அப்பா.
முதியோர் இல்லம் செல்ல முரண்டு பிடிக்கும் அப்பவை விரட்டும் பிள்ளை.
மூன்று கவிதைகளும் முத்தாக ஜொலிக்கின்றன
தங்கக் கொப்பறை அருமை
மூன்று வயதுக் குழந்தைபோல் அடம் பிடித்தால்
விட்டு விடுவோமா என்ன
மிருகங்களுக்கு நல்ல வேளை மனம் என்ற ஒன்று இல்லை
மூன்று முரண்பாடுகளையும் மனதைக் குத்தும் வண்ணம்
மிக நேர்த்தியாகச் சொல்லிப்போகிறது உங்கள் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மூன்றுமே கவலைக்கிடம்.(கவிதை சுட்டும் கருத்தை சொன்னேன் சார்)
Post a Comment