Tuesday, April 12, 2011

ஆ(ஹா)ஸ்ய ஜோதி!



ஒரு மாதத்தின் சரி பாதி நாள் பதினைந்து. ஒரு வருடத்தின் சரி பாதி மாதம் ஆறு.ஒரு நூற்றாண்டின் சரி பாதி வருடம் ஐம்பது.இதனுடன் சுக்கிரனின் உச்சம் ஏழாம் நம்பரைச் சேர்த்தால் வருவது ஐம்பத்தி ஏழு!
வரலாற்று ஏடுகளை சற்றுப் புரட்டிப் பார்த்தோமென்றால்,இந்த பதினந்தாவது நாளில், ஆறாவது மாதத்தில், ஐம்பத்தி ஏழாம் வருடங்களில் மட்டும், அதி முக்கியமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. கொஞ்சம் பின்னோக்கி செல்வோமா ?
15.06.1557 அன்று,இங்கிலாந்து நாடு பிரான்ஸ் தேசத்துடன் போர் ப்ரகடனம் செய்தது. அந்த நாள் ராசியோ, என்னவோ, அது மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. அடுத்த நூறாவது வருடமான 15.06.1657 அன்று ஆலிவர் க்ராம்வெல் என்கிற மா வீரன், புகழ் பெற்ற ஜான் லேம்பர்ட்டை வீழ்த்தி, இங்கிலாந்து நாட்டின் தலை சிறந்த தளகர்த்தர் ஆனான். அடுத்த நூறாவது வருடம் 15.06.1757 அன்று, ராபர்ட் க்ளைவ் BATTLE OF PLASSY ல் வெற்றி வாகை சூடி,வங்கத்தைக் கைப்பற்றி, அழியாப் புகழ் பெற்றான். அடுத்து வந்த 15.06.1857 ல் சோஃபியா என்ற மாபெரும் அழகி ஸ்காண்டிநேவிய இளவரசன் ஆஸ்கார் II என்ற மாவீரன் கரம் பற்றிய பொன்னாள்! அடுத்து வந்த நூற்றாண்டு,15.06.1957. அன்று .......
ஆசியாவில் ஒரு ஜோதி! அதிலும் இந்தியாவில்,.... தென்னிந்தியாவில்... அதுவும் திருச்சிராப்பள்ளியில், அதிலும் அந்த ஊரின் மையப் பகுதியான கிலேதார் ஸ்டோர் என்கிற குடியிருப்பில் அந்த ஜோதி தோன்றியது. வானத்தில் பளிச்சென்று ஒரு மின்னல் வெட்ட, மழை பொழிய, வானத்தில் சப்தரிஷி மண்டலம் தெரிய, வான சாஸ்திரிகள் தேவன் வந்து விட்டான் என்று, குதூகலம் அடைந்தார்கள். அவர்கள் மட்டுமா? அகில உலகமே அந்த மாலை நேரத்தில் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. காரணம் அடுத்த நாள் ஞாயிறு!
அந்த குழந்தையின் தந்தை மின்வாரியத்தில் கணக்கராய் உத்யோகம்.குந்தா, பைகாரா, சாண்டினல்லா என்று ஹைட்ரோ எலக்ட்ரிக் ப்ராஜட்டுகளில் வேலை. அவருக்கு இந்தியும், உருதுவும் தண்ணீர் பட்ட பாடு. சிறந்த ஓவியர்.. நன்றாகப் பாடுவார்..யாரிடமும் கற்றுக் கொள்ளாமலேயே, அருமையாக ப்ளூட் வாசிப்பார்..வாலி பால் ப்ளேயர் (அமெச்சூர் தான்)
வரலட்சுமி விரதம் அன்று சுவற்றில் அவர் படம் போட வேண்டுமே!அவ்வளவு ஜோராக இருக்கும்.
தாயார் நன்றாக சமைப்பார்.அவருக்கு கண் கண்டதை கை செய்யும்! கோஷா நூலில் டென்னிஸ் பால்..எம்பிராய்டரி வேலை எல்லாம் செய்வார். இந்த எழுபத்தி ஏழாவது வயதிலும்,’ ஹால்ல லைஸாலோட டேபிள் ஸால்ட் ஒரு ஸ்பூன் போட்டுப் பாரு, தரை பளிச்னு இருக்குமாம்.மங்கையர் மலர்ல போட்டிருக்கான்’ என்று அமெரிக்காவில் இருக்கும் பேத்தியிடம் ஃபோன் செய்யும் அளவிற்கு நாலெட்ஜை அப்டேட் செய்து கொண்டு இருப்பவர்!
நாளோரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தான் குழந்தை. அந்த கால பிரபல உணவான COW & GATE ஐ அருந்தி, வாளிப்பாய் வளர்ந்தது அது. குழந்தைக்கு செல்லமாய் ஸ்ரீதர் என்று பெயர் வைத்தார்கள். அந்த பெயர் ராசியோ, என்னவோ, பக்கத்து வீட்டில் குடியிருந்த குமுதா என்ற மலேஷியா மாமியின் தம்பி ராமனை ஸ்ரீதர் என்ற பிரபல டைரக்டர் கொத்திக் கொண்டு போய் விட, அந்த ராமன் பின்னாளில் சினி ஸ்டார் ரவிச்சந்திரன் ஆனது பெரிய கதை!
குழந்தைக்கு ஐந்து வயதும் ஆனது. பள்ளி கூடத்தில் சேர்க்க அதன் தகப்பனாரும், தாத்தாவும் போனார்கள்.அன்று அந்த ஷண்முகா பாடசாலை பிள்ளைகள் எல்லாருக்கும் அவர்கள் குஞ்சு கை நிறைய ஆரஞ்ச் பப்பர்மிண்ட்.
வாத்தியாருக்கு தட்டு நிறைய கல்கண்டு, வெற்றிலைப் பாக்கு,பழம்,பத்து ரூபாய் தட்சிணை எல்லாம் வைத்தார்கள்..
குழந்தையின் பெயர் என்ன..
தாத்தா பெயர் அனந்த ராமன்..அவர் பெயர் வரவேண்டும் என்று ராம மூர்த்தி என்று நாமகரண்ம் ஆயிற்று!
ஒரு தாம்பாளத்தில், நெல்லை குவித்து, அரி ஓம் என்று வாத்தியார், குழந்தையின் கை பிடித்து எழுத ஆரம்பிக்க,
தாத்தாவும், அப்பாவும் போய் விட, அந்த கொழுக்கு, மொழுக்கு பெரிதாக அழுவதற்கு பயந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தது!!

31 comments:

கே. பி. ஜனா... said...

அவதார மகிமை அறிந்தோம்... வாழ்த்துக்கள்!

Chitra said...

என்னா ஒரு பில்ட் அப்பு! சூப்பர் சூப்பர் சூப்பர்!!!!!

sriram said...

பொறந்த நாள் அறிவிப்பை இப்படி கூட சொல்லலாமா?
சூப்பரப்பூ.. வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

படிக்க ஆரம்பித்ததுமே நினைத்தேன், இப்படித்தான் ஏதாவது அவதார மகிமையாக இருக்கும் என்று.

//அதுவும் திருச்சிராப்பள்ளியில், அதிலும் அந்த ஊரின் மையப் பகுதியான கிலேதார் ஸ்டோர் என்கிற குடியிருப்பில் அந்த ஜோதி தோன்றியது.//

இந்த இடத்தில் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.

//அந்த கொழுக்கு, மொழுக்கு பெரிதாக அழுவதற்கு பயந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தது!!//

அன்று முதல் இன்று வரை கொழுக்கு, மொழுக்கு தானோ?

வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! அன்புடன் vgk

வெங்கட் நாகராஜ் said...

ஆ[ஹா]ஸ்ய ஜோதி - நிஜமாகவே ஹாஸ்யம் தான். ஜோதி தெரிந்தது, என்னைப்போலவே ஜூனில் தானா?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ஹாஸ்ய ஜோதிக்கு இப்போதே எனது அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

அட..அட...அடாடா..இன்னா தன்னடக்கம் சார் உங்களுக்கு....கிலேதார் ஸ்டோரை மற்றொரு ‘ராம(மூர்த்தி)ஜன்ம பூமி’யாக்க உயர்மட்ட கமிட்டி தயார். நீங்கள் மட்டும் ‘சரி’ என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள்....
(எவ்வளவோ செஞ்சுட்டோம்... இதை செய்ய மாட்டோமா?)

ரிஷபன் said...

அடடா.. அசத்தல்! திருச்சி மண்ணுக்கே பெருமை சேர்க்கும் காவிரி, மலைக்கோட்டை அத்துடன் இந்த கொழுக்கு, மொழுக்கு!
கூடவே அப்பாவின் பெருமைகளையும் தெரிந்து கொண்டோம்..
வாழ்க வளமுடன்!

RVS said...

அவதார மகிமை அறிந்தோம். சிறு குழந்தை பெப்பெர்மின்ட் சாப்பிட்ட மகிழ்ச்சியை நாங்கள் அடைந்தோம். நன்றி. ;-)

vasan said...

ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு அதிசய‌ம்.
பிறந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் ஆர்ஆர்ஆர்.

ADHI VENKAT said...

அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.

வசந்தமுல்லை said...

வை.கோபாலகிருஷ்ணன் said...

படிக்க ஆரம்பித்ததுமே நினைத்தேன், இப்படித்தான் ஏதாவது அவதார மகிமையாக இருக்கும் என்று.

//அதுவும் திருச்சிராப்பள்ளியில், அதிலும் அந்த ஊரின் மையப் பகுதியான கிலேதார் ஸ்டோர் என்கிற குடியிருப்பில் அந்த ஜோதி தோன்றியது.//

இந்த இடத்தில் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.

//அந்த கொழுக்கு, மொழுக்கு பெரிதாக அழுவதற்கு பயந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தது!!//

அன்று முதல் இன்று வரை கொழுக்கு, மொழுக்கு தானோ?

வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! அன்புடன் வ்க்க்

நான் நினைத்ததையே திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்னமையே நினைத்து விட்டதால் நான் என் நிலையில் நின்றுவிட்டேன் !!!!

//அந்த கொழுக்கு, மொழுக்கு பெரிதாக அழுவதற்கு பயந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தது!!//

அன்று முதல் இன்று வரை கொழுக்கு, மொழுக்கு தானோ?

மோகன்ஜி said...

மூவார் முத்தே! .நீங்க அமுல் பேபியாய்ப் பொறந்து தவழ்ந்து வலைக்கு வந்து நாம ரெண்டுபேரும் தெரிஞ்சிக்க எவ்ளோ லேட்டாச்சி? அதே போல நானும் இதைப் பார்க்க ரொம்பத்தான் லேட்டாயிடுச்சு. மீண்டும் ஹைதராபாத் வந்து விட்டேன். ஒரு பெரிய ஆட்டோ பயோக்ராபி எழுதுங்க பாஸ்! ரொம்ப ரசித்தேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அன்பு நண்பர் கே.பி.ஜனா,
என்ன செய்வது? என் அவதார மகிமையை நானே சொல்லிக் கொண்டால் தான் உண்டு.....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சித்ரா மேம்..,
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது..இருந்தாலும் உள்ளதை சொல்லித் தானே ஆகணும்? ஆங்..உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? போன ஜன்மத்தில நான் யார் தெரியுமா? லியனார்டோ டாவின்ஸி?
ஆனா, எத்தனை பேர் இதை நம்பப் போறாங்க? அதனால தான் சொல்லலை..
அதுவும் நீங்க வற்புறுத்தி கேட்டதினால் தான் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு?
ஆனா எப்ப கேட்டேன்னு மட்டும் தயவு பண்ணி கேட்டுடாதீங்க,ப்ளீஸ்!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இப்படியும் சொல்லலாம், ஸ்ரீராம்...
கேட்டா பில்டப்மீங்க..உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஒரு ஜன்மத்தில க்ளியொபாட்ராவோட கைக்குழந்தையாக்கும் நான்!ஆனா,யாரு நம்பப் போறாங்க?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரொம்ப சரி, வை.கோ சார்...கொழுக்கு,மொழுக்கால கொலஸ்ட்ரோல் அது..இது தொந்தரவு இருந்தாலும், மாசக் கடைசீல, அது தான் கை கொடுக்குது..
தொப்பையைப் பார்த்து போலீஸ்னு நினைச்சு, போன வாரம் ஒருத்தர் மாமூல் கொடுத்தாரு!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நிறைய அறிவாளிகள் ஜீன்ல தான் பொறக்கிறாங்க, வெங்கட் உங்களைப் போல்..என்னைப் போல்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி வித்யா மேம்..ஜூன்லேயும் சொல்லுங்க..
மறந்துடாதீங்க..
எப்படியோ..எல்லாருமா, என் வாயை புடிங்கி, வயசை சொல்ல வைச்சுட்டீங்க..பரவாயில்ல...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சரி...
எல்லன், சரி சொல்லிட்டேன், சரி தானே?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நன்றி..ரிஷபன் ..போன வாரம் கூட யாரோ கேட்டாங்க, கொழுக்கு, மொழுக்கு இருக்கிற திருச்சிய தானே சொல்றீங்கன்னு...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆனா, RVS எனக்கு அன்னிக்கு ஆரஞ்ச் மிட்டாய் கிடைக்கலே..அதனாலேயும் அழுதேன்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாஸன் சாருக்கு புரிஞ்சது, இந்த வையத்துக்கே புரிஞ்சது மாதிரி..
இந்த நூற்றாண்டில் நான்ங்கிறது!
( பின்னாடி, என் பெண் வந்து உனக்கே, இது ஓவரா தெரியல்ல்லே..என்கிறாள்..சரி..சரி... நாம அப்புறம் பேசலாமா, வாஸன் சார்?)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி கோவை 2 டில்லி..
ஜூன்லேயும் மறக்காம சொல்லுங்க...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்பாடா..இந்த வசந்த முல்லையைப் பார்த்து எத்தனை நாளாச்சு?

மாதேவி said...

தெரிந்துகொண்டோம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மோஹன், நான் அமுல் பேபி இல்ல..COW & GATE பேபியாக்கும்..
அது சரி, நான் AUTOBIOAGRAPHY எழுத ஆரம்பிச்சா, இப்படித் தான் இருக்கும், பரவாயில்லையா?

“ MY EXPERIMENTS WITH FALSE "

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அப்ப சரி..மாதேவி, மனைவியிடம் மருள்வோர் சங்க தினமாய், வரும் 15.06.2011 ஐ கொண்டாடலாமா, அனைவரும்?

சிவகுமாரன் said...

ஆசிய ஜோதியின் அவதார படலம் அருமையோ அருமை. ரொம்ப ரசித்தேன்

cheena (சீனா) said...

அன்பின் ஆர்.ஆர்.ஆர்

பிறந்த நாள் நினைவில் வர - மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து பதிவாக இட்டீரகளோ ! 1957 ல் ஜூன் 15ல் பிறந்த நீங்கள் இதற்கு முன்னர் இதே தேதியில் நடந்த நிகழ்வுகளை ( 1557, 1657, 1757, 1857 ) தேடிப் பிடித்து ஜெயா டிவி பாணியில் எழுதியது நன்று.

1957 தேதியில் ஆசியாக் கண்டத்தில் - இந்தியாவில் - தமிழ் நாட்டில் - திருச்சியில் ஒரு ஒளி வட்டத்துடன் தாங்கள் பிறந்தது நன்று. நகைச்சுவௌய்டன் தாங்கள் இம்மண்ணில் ஜனித்த போது நடந்த நிக்ழ்வுகளை எல்லாம் நினைவில் நிறுத்தி எழுதியமை நன்று. மிக மிக இரசித்தேன்.

பக்கத்து வீட்டில் ரவிச்சந்திரனா ... பலே பலே !

ராமமூர்த்தி என நாமகரணம் செய்த நிகழ்வு நன்று நன்று

நல்வாழ்த்துகள் ஆர் ஆர் ஆர்

நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி said...

ஆ! ஆ(ஹா)ஸ்ய ஜோதி!