Tuesday, November 9, 2010

கருந்தேள்...!!!!!!


வாயகன்ற பாத்திரத்தில் வைத்திடலாம், மூடி
திறக்கின் முகம் காட்டும் - கவிழ்த்திட்டால்,
கொட்டும்; நல் மருந்துக்குமாகும்,ஆதலினால்,
கருந்தேளைக் கவின் தேனெனக் காண்!

10 comments:

ரிஷபன் said...

கவித்”தேள்”.. படித்”தேன்”.. ரசித்தேன்

Chitra said...

"தேளி" தேன் !!! அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படம் கருந்தேள் கொட்டியது போல ஒருவித கடுப்பை ஏற்படுத்தினாலும், கவிதை கவின் தேனாக இனித்தது என்று சொல்லத்தான் நினைக்கிறேன்.

ஆனால் தேள்கடியால் அவ்விதம் சொல்லத் தோன்றவில்லை.

//கவிழ்த்திட்டால் கொட்டும்// தேள் மட்டுமா?
சராசரி மனிதனும் கூட அல்லவா!

நிலாமகள் said...

நல்லாயிருக்குங்க. 'மூடித் திறக்கின் முகம் காட்டும்' என்றதும் பழைய இரட்டுற மொழிதல் பாடலொன்று நினைவில் நெருடுகிறது.

அப்பாதுரை said...

ஹா?

Anonymous said...

"தேள்".. ரசித்"தேன்"

வெங்கட் நாகராஜ் said...

கருந்தேள் படம் பயமுறுத்துகிறது - கவித்தேன் ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி.

ADHI VENKAT said...

படித்தேன் மிகவும் ரசித்தேன்.

Thenammai Lakshmanan said...

ஐயையோ.. ஆர் ஆர் ஆர் அது நானில்லை..:))

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

மருந்துக்காகும் ....... தேன் சரி.... கருந்தேள் எப்படி? விளக்குவீர்களா? ( உங்களுக்கு 'சிலேடைச் சித்தர்' என்ற பட்டமளிக்க உத்தேசம். ஒப்புக் கொள்வீர்களா?)