Wednesday, June 16, 2010

ஐஸ்வர்யா ராய் முதல்...ஷில்பா ஷெட்டி வரை....

நீள்.....பதிவு ......... நெ.2

வந்தாரய்யா....வனராஜ்

நண்பர் சுப்ரமணியம் சாதாரண ஆள் கிடையாது. அலாஸ்காவில் ஐந்தே நாட்களில் அறுபது ஃப்ரிட்ஜ் விற்கும் சாமர்த்யசாலியாக்கும். அவருக்கேத்த சிஷ்யப் பிள்ளை தான் இந்த கொடைக் கானல் வனராஜ்.
அவர் பாலக்காட்டிலிருந்து எங்களுடன் ஜாயின் ஆனார்.
சரி...விஷயத்திற்கு வருவோம்!!



இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது நாங்கள் உடுப்பியில் இருக்கும் க்ரூப் ஃபோட்டோ.....


உடுப்பிக் கோவிலைச் சுற்றி முடித்தவுடன் அடியேன் உதிர்த்த கமெண்ட்:
" ஆஹா...இந்த ஊரை விட்டு வர மனசே இல்ல...ரிடய்ர்டு ஆனா, இங்கேயே செட்டில் ஆயிட மாட்டோமோன்னு தோணுது?"
" அப்பா ஊரே தெய்வீகமாய் இருக்கு இல்லே?"
" அட ..நீ வேற..அந்த ஹோட்டல்ல டிபனுக்குப் போட்ட குருமாவை நினைச்சாலே ..அடாடா....அதைச் சொல்றேன்...





கொல்லூர் ஹில்ஸ் ஜில்லுனு இருக்கு. நகரத்தில் தூசியில் புழங்கும் எங்களுக்கு இயற்கை அளித்த ஏ.சி. அது!




மூகாம்பிகை அம்மனைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு!
எனக்கு என்னவோ இரண்டு விஷயங்கள் ஞாபகம் வந்தது.

1. முகத்தில் வித்யாதேவி சரஸ்வதி அம்சம்! ரவிவர்மாவின் ஓவியம் ஞாபகம் வந்தது.
2. மூக பஞ்சதி எழுதிய மூக கவி. இவர் கவி காளி தாசனின் அடுத்த ஜன்மம். மூகன் என்றால் ஊமை என்று அர்த்தம்!

என் மனதினில் தோன்றிய இந்த இரண்டு விஷயங்களுக்கும் கொல்லூர் மூகாம்பிகைக்கும் தொடர்பு இருந்தால் சொல்லுங்களேன்!!

சரி..அப்புறம் பார்ப்போமா!!!

12 comments:

பனித்துளி சங்கர் said...

நாங்களும் உடுப்பி வந்த உணர்வு உங்கள் எழுத்துக்களில் . அருமை . பகிர்வுக்கு நன்றி

Chitra said...

" அப்பா ஊரே தெய்வீகமாய் இருக்கு இல்லே?"
" அட ..நீ வேற..அந்த ஹோட்டல்ல டிபனுக்குப் போட்ட குருமாவை நினைச்சாலே ..அடாடா....அதைச் சொல்றேன்...

....ha,ha,ha,ha,ha..... பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் பயணம் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

கமலேஷ் said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே...

ரிஷபன் said...

நகரத்தில் தூசியில் புழங்கும் எங்களுக்கு இயற்கை அளித்த ஏ.சி. அது!
நியாயமான வார்த்தை!

Pepe444 said...

HI FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

வசந்தமுல்லை said...

fine

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

" அப்பா ஊரே தெய்வீகமாய் இருக்கு இல்லே?"
" அட ..நீ வேற..அந்த ஹோட்டல்ல டிபனுக்குப் போட்ட குருமாவை நினைச்சாலே ..அடாடா....அதைச் சொல்றேன்...

ஹா ஹா ஹா... super

ஸ்ரீராம். said...

:))))

அன்புடன் நான் said...

" அட ..நீ வேற..அந்த ஹோட்டல்ல டிபனுக்குப் போட்ட குருமாவை நினைச்சாலே ..அடாடா....அதைச் சொல்றேன்... //

ரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றிங்க

சாந்தி மாரியப்பன் said...

//" அட ..நீ வேற..அந்த ஹோட்டல்ல டிபனுக்குப் போட்ட குருமாவை நினைச்சாலே ..அடாடா....அதைச் சொல்றேன்..//

:-)))))

முனியாண்டி பெ. said...

good

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html