Saturday, September 2, 2017

'நாக்' அவுட்!


இந்த மனுஷப் பசங்க இருக்காங்களா..
அவிங்களுக்கு நாக்கு தான் முதல் சத்ரு!
நாக்குக்கு புடிச்சதை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டுகிட்டு வந்தா,
எமப்பட்டணத்தை நெருங்க எட்டு கிலோமீட்டர் தான் பாக்கி இருக்குன்னு 
நம்மாளுங்களுக்குத் தெரியுமா?
'கடப்பாவை கண்டுபிடிச்சவன் கடவுளுக்கு சமமாம்..  பட்டணம் பகோடா மட்டும் இல்லாட்டி 
இங்க பாதி பேர் உசிரை விட்டுடுவானாம்....ஹையோ...ஹையோ..
நினைத்தாலே (நாக்கை) நனைக்கும் அந்த வெங்காய தூள் பஜ்ஜி...
எம்.கே.தியாக ராஜ பாகவதர் ஸ்டைலில் மாயா மாள கௌளத்துல 
மஸால் தோசைக்கு மயங்காதவர் மண்ணில் 
உண்டோ...' இங்ஙன பெருசுங்க பண்ற அலம்பல்...
என்னய்யா இதெல்லாம்?
இப்படி  நாக்கு உசுப்பேத்தி உசுப்பேத்தியே, எப்பப் பார்த்தாலும் எட்டாம் மாசம் மாதிரி 
extra large  தொப்பை எல்லாருக்கும் வந்தாச்சு!
முடி நீளமான பெண்ணை கனவில் கண்டு, அது முடியாமல் போக, அட்லீஸ்ட் ஏதோ ஒண்ணு 
நீளமா இருந்தா போதும்னு மனசை சமாதானப்படுத்திண்டு நாக்கு நீளமான பொண்ணை கல்யாணம் பண்ணிண்டு, 
நாப்பது பர்செண்ட்க்கு மேல  ஆம்பளைங்க கஷ்டப்படறாங்கன்னு ....நான் சொல்லலை
ஒரு Statistics சொல்லுது! 
நாக்கு ரொம்ப முக்கியம் ...அதனால் தான் முப்பத்திரண்டு பல்லுக்கு முன்னால வைக்காம,
முப்பத்திரண்டு பல்லுக்கு பின்னால நாக்கை வச்சான் அந்த கடவுள்!
மூக்கை விட முக்யத்வம் வாய்ந்த இந்த நாக்கை எவன் CARE பண்றான்?
நம்மாளுங்க நாக்குக்கு போதிய இடம் கொடுக்கலை .....
எப்பேர்பட்ட விசயம்!
வூட்டுக்கு ஆம்புலன்ஸை வரவழைக்கிற சக்தி உள்ள இந்த நாக்குக்கு ஐம்புலன்ஸில 
இடம் இல்லைங்கிறது எவ்ளவ் வருத்தம்!
அத்த விட வருத்தம் நம்ம நாட்டில நாக்கு ஸ்பெஷலிஸ்டுன்னு ஒரு நாதாரியும்  இல்லாமல் போனது தான்!!!    
                                          ---------

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

நாக்குக்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட்! :)

செம!

இந்த நாக்கு வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியுதா! எல்லாத்தையும் சுவைக்கச் சொல்லுதே....

ஒவ்வொரு வரியும் ரசித்தேன்!

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் ஐயா