Friday, August 25, 2017

ஆசை...தோசை....


"நம்மள மாதிரி, கிச்சன் எங்கேன்னா, எதிர்த்த வூட்லேர்ந்து, கிச்சன்ங்கற பையனை கூட்டிண்டு வர ஒரு ஆளு அசந்தர்ப்பமா தோசை வார்க்க ஆரம்பிச்சான்..."
"அட......startinங்கே சூப்பரா இருக்கே...சொல்லு"
"கேஸ் அடுப்பை பத்த வச்சான்...பத்த வச்சானா..."
"அதான் பத்த வச்சுட்டானே..மேல சொல்லு"
"மாவை நல்லா கலக்கி...ச்ச்சொய்ய்ங்ங்னு தோசை கல்லில் ஊத்தினான்.."
"அப்றம்?"
"அப்றமென்ன...face bookல ஒரு status போட்டுட்டு,அடுப்பை பார்த்தா.."
"பார்த்தா?"
"தோசை எடுக்க வரலை...புதுசா கல்யாணமான பொண்ணு பொறந்த வீட்டுக்குப் போனா மாதிரி,
தோசை, கல்லுல பச்ச்சக்க்னு ஒட்டிண்டு, எடுத்தா கல்லும் கரண்டியோட வரது..."
"அடேடே....அப்றம்?"
"அப்றமென்ன...கல்லு மேல மூடி ஒண்ணு போட்டு மூடினான்..."
"அப்றம்?"
"பெருமாள் கோவில்ல சடாரி வச்சா எப்டி இருக்கும்? நமக்கு மனசு குளிரும்...ஆனா, மாவுக்கு 
மனசு குளிரல...இப்ப தோசை கரண்டிய தூக்கினா.."
"தூக்கினா?"
"கரண்டி அடுப்பையே தூக்கிண்டு வரது!"
"அப்றம்?"
"இதை பார்த்துண்டு இருந்த தேவதை ஒண்ணு,அவன் கிட்டேர்ந்து கரண்டியை வாங்கி தோசை வார்க்க ஆரம்பிக்க..."
"பலே...கேட்கவே ஜோரா இருக்கே...மேல சொல்லு.."
"தேவதை நம்ம ஆஞ்சலினா ஜூலி மாதிரி வெள்ளை வெளேரென்று ஒரு தோசை வார்த்து,அவனுக்கு கொடுத்தது.."
"அவன் என்ன பண்ணினான்?"
"நம்மாளு ஒரு கர்ட்டஸிக்கு  கூட தேங்க்ஸ் சொல்லாம, கம்னு அந்த தோசையை வாங்கி, ஹாட் பேக்ல போட்டான்"
"ம்ம்....அப்றம்?"
"தேவதை பொறுமையா இரண்டாவது தோசையையும் வார்த்து அவனிடம் கொடுத்தது...இது கொஞ்சம் ஸில்க் ஸ்மிதா மாதிரி கருகின கலர்ல இருந்தது.,"
"நம்மாளு என்ன பண்ணினான்?"
"இந்த தோசையையும் எடுத்து ஹாட் பேக்ல போட்டான்!"
"அப்றம்?"
"அப்புறமென்ன?தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தன் மாதிரி, அந்த தேவதை நம்ம ஜெயமாலினி மாதிரி ஒரு உப்பின தோசையை வார்த்து இப்ப கொடுத்தது.."
"அதையும் அவன் வழக்கம் போல,ஹாட் பேக்ல வச்சிட்டு, நாலாவது தோசைக்காக காத்துகிட்டு இருந்திருப்பானே?"
"ஆமாம்...ஆனா, அந்த தேவதை நாலாவது தோசை வார்க்க வில்லை.,அது கடுப்பாகி கேஸ் சிலிண்டரை தூக்கிண்டு பறந்து போயிடுத்து...இதுலேர்ந்து உனக்கு என்ன தெரியறது?"
"ஆபத்து காலத்துல, நாம கஷ்டத்துல இருக்கும் போது, நமக்கு வாலண்டியரா வந்து ஹெல்ப் பண்றவங்களுக்கு வாய் நிறைய நன்றி சொல்லணும்...அப்டி சொல்லாட்டி..."
"சொல்லாட்டி?"
"இருக்கிற ஹாட் பேக்கும் பறந்து போயிடும்.....மூணு தோசைகளோட!"
...

7 comments:

G.M Balasubramaniam said...

தோசை வார்ப்பு படாம் ஜோர்

G.M Balasubramaniam said...

படலம் என்று இருக்க வேண்டுமோ அதுவும் சரியா

Massy spl France. said...

நடை நன்றாக உள்ளது. நல்ல வேடிக்கைதான்.

அது என்னாங்க ஆஞ்செலினா வெள்ளையா இருந்தாக்கா உடனே அழகானவளா? சிலுக்கு கருப்பா இருந்தாக்கா உடனே தீஞ்சிப்போன தோசை மாதிரி அசிங்கமா? உங்க மனச தொட்டு சொல்லுங்க இவங்க ரெண்டு பேருல உண்மையான அழகுள்ளவங்க யாருன்னு.நானு சொல்றேன். ஆஞ்செலினா மூஞ்சி சரியான ஒடுக்கு மூஞ்சி. சிலுக்கு நல்ல அழகு.

எனவே என் கனவு தேவதை சிலுக்கின் அழகை குறை சொல்லி அவமானபடுத்துவதை கடுமையாக தண்டிக்கிறேன்.

பகிர்வுக்கு மிக்க நன்றி ராமமூர்த்தி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எதுவாக இருந்தாலும் அழகு தான் GMB சார்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெள்ளை அழகு..கருப்பு அழகில்லைன்னு யாரு சொன்னாங்க..
அது ஒங்களோட கற்பனை..
ஒண்ணு தெரிஞ்சிக்குங்க ..
ஆஞ்சலினா ஜூலி க்கு வீடு மட்டும் தான் இருக்கு..
ஆனா,சிலுக்குக்கு தென் தமிழ்நாட்டில் ஒரு ஊரே இருக்கு..
இன்ணொண்ணையும் கேட்டுக்குங்க..
கருப்பே அழகு..
காந்தலே ருசி!
தங்கள், வருகைக்கு நன்றி மாசிலா..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கற்பனை. ஏஞ்சலினா, சில்க், ஜெயமாலினி - ஒண்ணும் சரியில்லை! :)

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
ரசித்தேன்