Saturday, July 1, 2017

ம.ம.ச.

அந்த காலனியில் ப்ரதி இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை மாலை நாலரையிருந்து ஆறு ரகசியமாக ஒரு மீட்டிங் நடைபெறுகிறது. அந்த மீட்டிங்கில் எல்லாருக்கும் அனுமதியில்லை.ரொம்பவும் ஸ்க்ரீன் செய்து அவர்களுக்கு நம்பகமான ஆள் என்று எல்லாருக்கும் ஒட்டு மொத்தமாக தோன்றினால் தான் உள்ளே அனுமதிப்பார்கள்.
மிக மிக ரகசியமாக நடைபெற்றது அந்த கூட்டம்...பாதுகாப்பான இடத்தில் ...எப்படி என்றால் பக்கத்தில் 3 கி.மீ அருகில் உள்ள B2 போலீஸ் ஸ்டேஷனுக்கே தெரியாது இப்படி இங்கு ஒரு பயங்கரமான கூட்டம் நடைபெறுகிறதென்று!
       அந்த கூட்டத்தில் விறுவிறுப்பாக பேசக்கூடியவர்கள் நிறைய பேர் இருந்தாலும் கனல் தெறிக்குமாறு ஒருவன் பேசுவது ரொம்பவும் வீராவேசமாக இருக்கும். அவனுடைய பேச்சிற்கு அடிக்கடி கரகோஷம் கிடைக்கும்..கழுத்து பச்சை நரம்புகள் துடிக்குமாறு அவன் பேசுவதை கேட்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டு அவன் எது சொன்னாலும் செய்வதற்கு தயாராக இருந்தார்கள்...தீப்பொறி திருநாவுக்கரசு என்பது அவன் பெயர்.
        இப்படியாக ஒரு கொழுத்த ராகு காலத்தில் அந்த சங்கத்தின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.வழக்கம் போல் அனைவரின் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டுக் கொண்டிருந்தான் தீப்பொறி திருநாவுக்கரசு!
             திடீரென்று ஒரு சலசலப்பு....திமுதிமுவென கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலில் நிறைய  பெண்கள் ஆக்ரோஷத்துடன் பாய கூட்டத்தில் இருந்தவர்கள் தம் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஒரு சில நொடிகளில் கூட்டம் சிட்டாகப் பறந்து விட...
              அத்தனை அமர்க்களத்திலும் துளிக்கூட அசையாமல் மைக்கை பிடித்துக் கொண்டு கொஞ்சம் கூட பதட்டப் படாமல் ஒருக்களித்து  ஸ்டைலாக சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தான் நம் தீப்பொறி திருநாவுக்கரசு....
               " ஹா......இவ்ளவ் தைரியமா?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனை எல்லாரும் நெருங்க முன்னணியில் சென்றாள், அவன் மனைவி, மல்லிகா கையில் பூரி கட்டையோடு!
                'அடுத்து என்ன நடக்குமோ?' என்று ஒரு வித த்ரில்லோடு அனைத்து மனைவி மார்களும் 
கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க...
                அருகில் சென்றவுடன் தான் தெரிந்தது, பயத்தில் அப்படியே மயக்கமாகி விட்டான், அந்த 'மனைவியிடம் மருள்வோர் சங்க தீப்பொறி பேச்சாளன்' என்று!
          .......

11 comments:

G.M Balasubramaniam said...

இதற்காகவா அவ்வளவு ரகசியம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

// திடீரென்று ஒரு சலசலப்பு....திமுதிமுவென கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஹாலில் நிறைய பெண்கள் ஆக்ரோஷத்துடன் பாய கூட்டத்தில் இருந்தவர்கள் தம் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஒரு சில நொடிகளில் கூட்டம் சிட்டாகப் பறந்து விட...//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

கோவை சரளா போன்ற வீரம் மிக்க தாய்க்குலம் வாழ்க !!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒரு பில்டப் கொடுத்துப்பார்த்தேன் GMB சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வீரம் மிக்க தாய்க்குலமே கோவை சரளா தானா?
நம்ம ஆச்சி மனோரமாவாக்கும்னு நினைச்சேன்,சார் நானு!

Unknown said...

இனிமேல் கூட்டத்தை ஆரண்ய நிவாஸில் ,அதாவது ஏதாவது ஒரு காட்டுப் பங்களாவில் நடத்தச் சொல்லுங்கள் ,தாய்க் குலம் வர முடியாதில்லே :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நீங்க வேற...
தாய்குலமெல்லாம் முன்னபோல இல்லை இப்பல்லாம் ...
சாராயக்கடையையே துவம்சம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்...
அவிங்க திரண்டு வந்தா,காட்டு பங்களா தோ கதி தான்..
என்னை கேட்டால், எங்காவது குட்டிச்சுவர் இருக்கா என்று விசாரித்துக்கொண்டு போய் அதை கட்டிக் கொண்டு குமுறி குமறி அழுதால் தான் கொஞ்சமாவது நிம்மதி கிடைக்கும்!
வருகைக்கு நன்றி Bagawanjee K A Sir!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
இப்படியும் ஒரு சங்கமா

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இதெல்லாம் கற்பனை தான், கரந்தையாரே!

ஜீவி said...

'மனைவிஹ்யிடம் மருளாதோர் சங்கம்' --என்றிருந்தால் எழுதிய விஷயத்திற்கு ஒரு அர்த்தம் கிடைத்திருக்கும்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமையான observation ஜீவி சார்!
இருந்தாலும் அடியேனின் சமாளிப்பு!
தலைப்பு அர்த்தமில்லாமல் இருக்கணும்னு தான் இப்படி அனர்த்தமா வைச்சேனா!
வருகைக்கு நன்றி ஜீவி சார்!

ஜீவி said...

அன்ர்த்தமா?. அற்புதமான் தலைப்பு மூவார் சார்!
ம.ம.ச. மனைவியிடம் மருளாதோர் சங்கம் என்பதற்கும் பொருத்தமாகத்தானே தலைப்பு வைத்திருக்கிறீர்கள்?

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இப்படித் தான் எழுத நினைத்து கற்பனை முகிழ்த்து உலக வழக்கு யதார்த்த சூழ்நிலையில் அப்படி ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.