Monday, June 5, 2017

விமர்சனம்...

விமர்சனம்...
----------
விமர்சனம் என்று தலைப்பிட்டாலும்,இது விமர்சனமல்ல...ஒரு அறிமுகம்...
அறிமுகம் என்றாலும் அது நமது நண்பர் திரு மோகன்ஜிக்கான அறிமுகம்
அல்ல..அவர் எழுதிய 'பொன் வீதி' என்கிற இந்த சிறுகதை தொகுப்பிற்கு!
சரி விமர்சனத்துக்கு வருவோமா?
ஒரு சிறுகதையின் பலமே,அது முடிந்தது என்று தெரிந்தும் இந்த
மடமனது,ஆவலுடன் அடுத்த பக்கத்தில் ஏதோ ஒரு ஆர்வத்தில் தேடும்,ஏதாவது
பாக்கி இருக்கிறதா,என்று?
இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் அப்படிப் பட்டவை..
'சமர்ப்பணம் ஜெயகாந்தனுக்கு' என்று போடும் போதே நினைத்தேன்.
ஆசிரியர்,என்னை ஏமாற்றவில்லை!
அவருடைய 'வானவில் மனிதன்' என்கிற ப்லாக்கில் வந்த சிறுகதைகள் தான் இவை!
இருந்தாலும் படிக்க படிக்க வாசிப்பவனை தூண்டுமாறு அமைந்த சிறுகதைகள்..
காதல் என்பது ஒரு மெல்லிய, நுண்ணிய சிக்கல் சிறிதுமிலா ஒரு
உணர்விழை...அந்த இழை அறுந்து விடாமல் வெகு ஜாக்கிரதையாக
கையாளப்பட்டிருக்கிறது, இவர் கதைகளில்.
எல்லா உறவுகளும் நீர்த்துப் போய் விட்ட பரபரப்பான இந்நாளில் பவித்தரமான
காதலும் தேய்ந்து கட்டெறும்பாகத் தான் போய் விட்டது..உணர்வுகளின்
சங்கமமாய் இருந்த காதல் கடிமணமானது, தேவைகள் என்று அளவிற்கு
சுருங்கி,இப்போது பேராசை எனும் மாய சிலந்தி வலைக்குள் சிக்கி, Usha of
HCL weds Ramesh of TCS என்று ஒரு business merger என்கிற அளவிற்கு
விகாரப்பட்டுத் தான் போய். விட்டது.இருந்தாலும், நல்ல வேளையாக இந்த
தொகுதியில் உள்ள சிறுகதைகள் எல்லாமே இக்காலகட்டத்திற்கு முற்பட்டவை
என்பது ஒரு ஆறுதலான விஷயம்...
இருபத்தொன்று சிறுகதைகள் ஒவ்வொன்றையும் விமர்சிக்க ஆரம்பித்தால்,
வாசகனின் சிரத்தை குறைந்து விடும்,என்பது என் பயம்..அதனால் தான் இந்த
பொதுவான விமர்சனம்..
திரு மோகன்ஜியிடம் ஒரு விண்ணப்பம்..இந்த சிறுகதை தொகுதியின் தலைப்பு
கதையான இந்த 'பொன் வீதியை' ஒரு கதை சொல்லியாக என் வீடியோ க்ளிப்பிங்கில்
கொண்டு செல்ல ஆசை...அனுமதி தருவீர்களா ஜீ?
'நம்மிடம் பிரிந்து செல்லும் பணத்தை விட கிடைக்கும் பொருளின் மதிப்பு
அதிகமாக இருக்க வேண்டும்' என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு வாசகனையும்
,நாம் செலவு செய்யும் 125 ரூபாய்க்கு இந்த சிறுகதை தொகுதி ஏமாற்றவில்லை
என்று அடித்து சொல்லுமாறு மனிதர் வெகு அழகாக கையாண்டிருக்கிறார்!
அந்த ஒரு 'ரிச்னஸ்'காகவே,என் இலக்கிய நண்பர்களுக்கு இதை பரிசாக
அளிக்கலாமென்றிருக்கிறேன்..
எழுதியவர் வேறு எங்கும் இல்லை..
உங்கள் விரல் நுனி mohanji.ab@gmail.com என்று அடிக்கும் தூரத்தில் தான்
இருக்கிறார்...
கடைசியாக ஒன்று..
கமாஸ் என்றொரு ராகம்..ஆலாபனைக்கு முன் உங்களை 'சுகமா..சுகமா' என்று
கேட்டு கொண்டு தான் ஆரம்பிக்குமாம்..அது போல, இந்த புத்தகத்தை தொடுவதற்கு
முன், ஏதாவது வேலை இருந்தால், அதை முடித்து விட்டு மனதை ரிலாக்ஸ்டா ஆக
வைத்து விட்டு படிக்க ஆரம்பியுங்கள்,ப்ளீஸ்.
ஏனென்றால்,பாதியிலேயே நிர்கதியாய் இதை விட்டு விட்டு வேறு வேலை பார்க்க
உங்களால் இயலாது...படிக்க ஆரம்பித்து விட்டால் இதை முடித்து விட்டு தான்
மறு வேலை பார்க்கும்படியாக இருக்கும்..
ஆம்,

என் அனுபவம் அப்படி!

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//காதல் என்பது ஒரு மெல்லிய, நுண்ணிய சிக்கல் சிறிதுமிலா ஒரு உணர்விழை... அந்த இழை அறுந்து விடாமல் வெகு ஜாக்கிரதையாக கையாளப்பட்டிருக்கிறது, இவர் கதைகளில். எல்லா உறவுகளும் நீர்த்துப் போய் விட்ட பரபரப்பான இந்நாளில் பவித்தரமான
காதலும் தேய்ந்து கட்டெறும்பாகத் தான் போய் விட்டது.. உணர்வுகளின் சங்கமமாய் இருந்த காதல் கடிமணமானது, தேவைகள் என்று அளவிற்கு சுருங்கி, இப்போது பேராசை எனும் மாய சிலந்தி வலைக்குள் சிக்கி, Usha of HCL weds Ramesh of TCS என்று ஒரு business merger என்கிற அளவிற்கு விகாரப்பட்டுத் தான் போய்விட்டது. இருந்தாலும், நல்ல வேளையாக இந்த தொகுதியில் உள்ள சிறுகதைகள் எல்லாமே இக்காலகட்டத்திற்கு முற்பட்டவை என்பது ஒரு ஆறுதலான விஷயம்...//

தங்களின் தனிப் பாணியில் அருமையாகச் சொல்லி அசத்தியுள்ளது அழகோ அழகு ! பாராட்டுகள் ஸ்வாமீ !!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி வை.கோ. சார்..
இந்த வரிகளை படிப்பவர். பாராட்ட வேண்டுமென்கிற என் விருப்பத்திற்கு இசைவாய், நச்சென்று அந்த வரிகளை ஜல்லிக்கட்டு காளையை பிடிப்பது போல, பிடித்து விட்டீர்கள் சார்,நீங்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா, அருமையான விமர்சனம் ஐயா

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி, கரந்தை ஜெயக்குமார் சார்..
பிலாக்கில் தொடர்கிறேன்..
வாருங்கள், நீங்களும்!