ஆராரோ எனை ஆர்ஆர்ஆர் என்றழைக்க,
ஏஆரார் என்று மற்றுமவர் கூச்சலிட,
'மூவாரே நீரெ'னமூன்று நான்கு பேர் கூவ,
'ஆரடா இவன்?' என எனைநான் அறிந்திலேனே!
...................
என்னிலே என்னை நான்
உணர்ந்து கொண்ட,
வேளையில்,
விண்ணிலே ஒளிருமவ்
விண்மீன் போலாச்சுதே!
மண்ணிலே வந்துதித்த,
மாந்தர்க்கு சாபமாம்..
உன்னிலே உன்னை நீ,
உணராமலிருப்பதே!
6 comments:
யார் யார் உம்மை எப்படி எப்படித்
தப்பும் தவறுமாக அழைத்துக்கொண்டிருப்பினும்
என்னைப் பொறுத்தவரை நீர்
’ராமகுண்டம் ராமமூர்த்தி’
மட்டுமேவாக்கும். :)
மீண்டும் வலை உலகிற்கு வரும் உங்கள் வரவு நல்வரவாகுக.
பழைய நண்பர்கள் ரிடையர்ட் ஆகி விட்டார்கள்...நான் ரா.ரா. என்பது மிக குறுகிய வட்டத்திற்கு மட்டுமே தெரியும் வை.கோ.சார்!
அப்பப்ப வந்து கொண்டிருக்கிறேன், GMB சார்!
இரசித்தேன் பதிவை... - கில்லர்ஜி
அருமை .
\\\மண்ணிலே வந்துதித்த,
மாந்தர்க்கு சாபமாம்..
உன்னிலே உன்னை நீ,
உணராமலிருப்பதே!///
மிகப்பெரிய தத்துவத்தை எளிதாய் அழகாய் சொல்லிவிட்டீர்கள்.
Post a Comment