'பாதுகாப்பான முறையில் உளுந்து வடை சாப்பிடுவது எப்படி?' என்பதை நண்பர்களுக்கு
Demonstrate பண்ணிக் கொண்டிருந்தேன்...
டிபன் தட்டில் empty ஆக இருந்த குழியில், நன்றாக வடைகளைப் பிழிய, எஸ்.வி.சேகர் நடித்த ஏதோ ஒரு படத்தில் சொட்டுவது போல,எட்டேகால் அவுன்ஸ் எண்ணை சொட்டியது.
மறுபடியும் ஒரு தடவை பிழியும் போது,மூன்று அவுன்ஸ் சொட்டியது. கைகளை சோப் வாட்டரால் கழுவி, அந்த பிழிந்த வடைகளை சாம்பாரில் ஊற வைத்தேன்...
கண்கொட்டாமல் இதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கேட்டார்...
"ஏன் சார், வடையைப் போய் இந்த பிழி பிழியறீங்க?"
"பார்த்துண்டிருந்தீங்க இல்லே...எவ்ளவ் எண்ணை? அத்தனையும் உடம்புக்கு கெடுதல் இல்லையா?" - என்றேன்.
"இல்லை"
"எப்படி?"
"சார் நம்ம ஒடம்பே ஒரு அசெம்பிளி of machines. இதுல, அசெம்பிளி லைன்ங்கறது food path. அது வழியா உள்ளே போற, இந்த ஆயில் லூப்ரிகண்டாக வேலை செய்யறது...உள்ளே,
இருக்கிற மெஷின்லாம் உராய்வு...தேய்மானம் எதுவும் இல்லாம சூப்பரா வேலை செய்யறதுக்குத் தான் வடைல, ஆயில் அப்ளை பண்ணியிருக்காங்க...நீங்க என்னடான்னா..."
"அது சரி....தேவைக்கு அதிகமா,இவ்ளவ் ஆயில் அந்த food path வழியா ச்ச்சொய்ய்ங்ங்னு உள்ளே போனா, உள்ள இருக்கிற இதயம் அப்டியே அந்த lubricancy ல, வழுக்கிண்டு, கிட்னி பக்கம் போயிடுத்துன்னா....."
நண்பர் பேசவில்லை ....
அவரும் வடைகளை பிழிய ஆரம்பித்து விட்டார்!
4 comments:
சிவப்புப் பின்னணியில் கறுப்பு எழுத்துக்கள். படிக்கவே முடியவில்லை. பாவம் நாங்கள்.
GMB சார்...இப்ப பரவால்லையா?
ரொம்ப நாட்களுக்குப் பிறகு பிழியோ பிழி என்று பிழிந்து விட்டீர்கள். தொடர்ந்து எழுதவும். வெள்ளை பின்னணியில் கறுப்பு எழுத்துக்கள். கண்ணில் கூச்சம் இல்லாமல் படிக்க முடிகிறது.
நன்றி சார். இதைப் படித்ததும் டெல்லியில் நான் சாம்பார் வடை சாப்பிடது நினைவுக்கு வந்தது. அவர்களும் எண்ணையைப் பிழிந்து பிறகு வடையை சாம்பாரில் போடுகிறார்களாம் ஆனால் அவர்கள் பிழிந்தது பழைய வடையை..ஹிஹி.
Post a Comment