குறளும்,குறுங்கதையும் (1)
::::::::::::::::::::::::::::::::::::::
"ஏங்க"
"என்னங்க"
"பக்கத்து வூட்ல பெர்ரீசா ப்ரிட்ஜ் வாங்கியிருக்காங்க...நாமளும்....."
"சரி வாங்குவோம்"
ஒரு வருடம் கழித்து...
"இந்தாங்க....அவுங்கூட்ல ஹோம் தியெட்டர் வாங்கறாங்க.."
"சரி....நாமளும் வாங்கலாம்.."
ஐந்து வருடங்கள் அனாவசியமாய் உருண்டோடியது.
"பங்கஜம் வூட்டுக் காரரு இன்னோவா வாங்கப் போறாராம்."
"சரி...அத்த விட பெரிய காரை நாமும் வாங்கலாம்.."
"இப்டி சொல்லி சொல்லியே ஒவ்வொரு தடவையும் என் வாயை அடைங்க...ஆனா ஒண்ணும் வாங்காதீங்க....ம்..நீங்களும், அவரும் கிளார்க்கா ஒண்ணா தான் ஜாயின்
பண்ணிணீங்க..இப்பவும் ஆபீசராகி...ரெண்டு பேரும் ஒரே 'கேடர்' தான்..அவங்கூட்லியும் பெரிசா சம்சாரம் இல்ல..
அவிங்க நாலு பேரு....நாமளும் நாலு பேருதான்....அந்த அண்ணனுக்கு மட்டும் எங்கேர்ந்து பணம் வந்திச்சு....ஹூ....ம் ...அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்"
அந்த நாளும் வந்தது..
"இன்னாங்க...பக்கத்து வூட்டு அண்ணன் இந்த மாசம் ரிடையர்ட் ஆகப் போறாராமே.."
"ஆமாம்..பரிமளம்...க்வார்ட்டர்சை காலி பண்ணப் போறாங்க...டவுன்ல வீடு பார்த்திருக்காரு..பெரிய காரை வைக்கணுங்கிறதுக்காக பெரிசா வீடு பார்த்திருக்காங்க...பதினைஞ்சாயிரம் ரூபாய் வாடகையாம்!"
"அம்மாடியோவ்...அது சரி...நீங்களும் அவர் வயசு தானே..."
"ஆமாம்..அடுத்த ரெண்டு மாசத்துல நானும் ரிடயர்டாகப் போறேன்!"
"என்னங்க திடும்னு கல்லைத் தூக்கிப் போடறீங்க....நாமளும் க்வார்ட்டர்சை காலி பண்ணனுமா..அடி ஆத்தி எங்கே போவோம்?"
"கவலையே படாதே பரிமளம்...பணத்தை FD ல போட்டிருக்கேன்..அது மெச்சூர்
ஆயிடும்...அதுல நாம வீடு வாங்கலாம்"
"எப்டீங்க இவ்ளவ் பணம்?"
"கேட்டியே...இது நல்ல கேள்வி...எதுக்கெடுத்தாலும் பக்கத்து வூட்டுக் காரனை
பார்க்கக் கூடாது...அவன் அத்த வாங்கினான்....அவன் இத்த வாங்கினான்னு தேவை இல்லாம
ஜம்பத்துக்கும்....ஆடம்பரத்துக்கும் நாமும் வாங்கிறதனால தான் நாட்டில பண வீக்கம் வருது
இதை DEMONSTRATION EFFECT ம்பாங்க...இத்த நான் படிச்சதினால சுதாரிப்பா நடந்துண்டு காசை சேமிச்சு வைச்சிருக்கேன்...அந்த பணத்துல இப்ப நம்ம தேவைக்கு நாம வீடு வாங்கப் போறோம் சரியா?"
"சாரி" - என்றாள் பரிமளம் தலை குனிந்து கொண்டு!
குறள்:
பிறன் மனை சிறிதும் நோக்காதான் இல்லில்,
சரண் அடைவாள் செய்யும் தன்னால்.
(பின் குறிப்பு: செய் - திருமகள்)
9 comments:
குறளுக்கேற்ற அருமையான கதை
நனறி ஐயா
அருமையான பாடம்...
அனைவரும் யோசித்துப்பார்க்க வேண்டிய அருமையான நீதிக்கதை.
இன்னும் என்னென்னவோ நான் சொல்லணும்ன்னு நினைக்கிறேன் ..
அதற்குள் எங்க வீட்டுக்கரம்மா “ஏங்க, என்னங்க” என அழைக்கிறாள். ;)
விரலுக்குத் தக்க வீக்கம் ....!
குறளுக்கேற்ற கதை. பாராட்டுகள்.
அன்புள்ள.
வணக்கம். வெகுநாட்களுக்குப் பின் வந்தேன். சுவையும் பொருத்தமுமான கதை. அருமை.
நன்றாகச் சொன்னீர்கள் நண்பரே! ஆனால், எப்படி அய்யா இத்தனை வருடம் மனைவி தெரியாமல் பண விஷயத்தை அவரால் மறைத்து வைத்திருக்க இயலும்? அந்தப் பெண்மணிக்குக் கோவில் கட்டிக் கும்பிடலாமே!
குறளுக்கேற்ற அருமையான கதை!! இனிய வாழ்த்துக்கள்!!
அருமையான கதை...சிறிதாகவும் சுவையாகவும் உள்ளது........
Post a Comment