மனைவியிடம் மருள்வோர் சங்கத் தலைவர் மகாமுனியை ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி
கண்டார்.அந்த பேட்டியில் கேட்கப் பட்ட கேள்விகள்:
"தங்கள் வாழ்க்கையில் நடந்த உங்களுக்கு மிகவும் பிடித்த சுவாரசியமான நிகழ்வாக
எதைக் கருதுகிறீர்கள்? தங்களுக்குப் பிடித்த கல்லூரியில் சேர்ந்தது?"
"இல்லை"
"தங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வந்த நன்னாள்?"
."ஊகூம்"
"காதலியின் முதல் முத்தம்?"
"அதுவும் இல்லை"
"திருமண நன்னாள்"
"இல்லவே இல்லை"
"ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆன நாள்"
"இல்லை"
"நீங்களே சொல்லுங்கள் சார்"
மகாமுனி தாவாங்கட்டையை சொறிந்து கொண்டு மோட்டு வளையைப் பார்த்தார்.கண்கள்
சொருகிய நிலையில் அந்த இனிய காட்சி அவர்மனக்கண் முன் விரிந்தது.ஒரு ஆழ்ந்த மௌனம்.
நிருபரும் அதைக் கலைக்க விரும்பவில்லை.பொறுமையாகக் காத்திருந்தார்.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் தொடர்ந்தார்,மகா முனி.
".....,இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது.... அது ஒரு பொன் மாலைப் பொழுது. என்
மனைவிக்கு கடும் ஜுரம்.இருவரும் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டருக்காக காத்திருந்தோம்..
வழக்கம் போல் தொணதொணப்புடன் மனைவி.....ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு,
ஒருநர்ஸ் வந்து...."
"நர்ஸ் வந்து..?"
"தர்மா மீட்டரை என் மனைவி வாயில் வைத்து, நர்ஸ் தன் கை கடிகாரத்தைப் பார்க்க,
நான் ஆனந்தத்துடன்,மௌனமான என் மனைவி முகத்தைப் பார்க்க...அந்த டிக்..டிக்..டிக்..
தருணங்கள் தந்த சந்தோஷம் தான் என் வாழ்விலேயே,நான் அடைந்த மிகப் பெரிய
சந்தோஷம்!"
மறுபடியும் கண்கள் சொருகிய நிலையில் அவ்வினிய காட்சியை மனக் கண்ணில்
மகா முனி மனக் கண்ணில் கொணர முயல, அந்த நிசப்தத்தை இடையூறு செய்யா வண்ணம்
அந்த இடத்தை காலி செய்தார், நிருபர் கனத்த இதயத்துடன்!
9 comments:
"உல்லாஸ வேளை" தலைப்பைப் பார்த்ததும் எஸ்விவி அவர்கள் எழுதின உல்லாஸ வேளை புத்தகம் குறித்த மதிப்புரையோனு நினைச்சேன். :)
நிசப்த வேளை..!
உல்லாஸ வேளை படித்ததில்லை.....ஆனால் படிக்க வேண்டுமென ஆவல்.இதை எழுதி முடித்தவுடன்,என் மனக் கண்ணில் வெற்றிலை பாக்கு சிரிப்புடன் எஸ்.வி.வி. வந்தார்....சட்டென உல்லாஸ வேளை என தலைப்பிட்டேன்.. Thanaks Geetha Madam and Raji Madam
டிக்..டிக்..டிக்..
தருணங்கள் தந்த சந்தோஷம் என்னையும் இப்போது தொற்றிக்கொண்டது போல, படித்ததும் உணர்ந்தேன்.
திருச்சிக்கு திரும்பியாச்சா?
நல்லாவே கலாய்க்கிறீங்க! அருமை!
முகப்புத்தகத்தில் ரசித்ததை மீண்டும் ரசித்தேன்.....
மகிழ்ச்சி தந்த நிமிடங்கள்
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
மனைவியிடம் மருள்வோர் சங்கத் தலைவர் மருளும்போதே தெரிகிறது அவரது பயம்.
உல்லாஸவேளை – என்றவுடன் எனக்கும் இந்த தலைப்பை எங்கோ படித்தது போல் இருக்கிறதே என்று யோசித்தேன். கீதா சாம்பசிவம் கருத்துரைக்குப் பின்னர் எஸ்.வி.வி நினைவுக்கு வந்தார்.
Post a Comment