Saturday, October 26, 2013

சொல்லவா........

”விஜயா, நாளைக்கு கார்த்தால,அப்பா,அம்மா நம்ம வீட்டிற்கு வராங்களாம்”
“இப்ப எதுக்கு அவங்க வராங்க?”
“தெரியலையே”
“என்னங்க, ரெண்டு நாள் லீவ் சேர்ந்தாற்போல வருது..புள்ளைங்களை வெளியே கூட்டிக் கிட்டுப் போய் ரொம்ப நாள் ஆச்சு..இந்த லீவில நாம புள்ளைங்களை கூட்டிக் கிட்டு எங்காவது போகலாம்னா...” இழுத்தாள், விஜயா.
“அதுக்குன்னு வரவங்கள நாம எப்படி வர வேண்டாம்னு சொல்றது?”
“எனக்கு இப்ப உடம்பு சரியில்லைன்னு சொல்லிடுங்க”
“என்னால சொல்ல முடியாது.. நீயே சொல்லிக்க”
“சரி”
மனதிற்குள் கறுவிக் கொண்டாள், விஜயா.கிழங்களுக்கு இவரை விட்டா
வேற புள்ளையா இல்லே? லீவ் நாளில் அத்தி பூத்தாப்பல,
 நாம எங்காவது போகலாம்னா, சனியங்க வந்து கழுத்தை அறுக்குதுங்க.... நாம ஒண்ணும் சொல்ல வேண்டாம்..அதுங்களா வந்து பூட்டின வீட்டைப் பார்த்துட்டு ஏமாந்துட்டு போகட்டும்.....
அடுத்த நாள் காலையில் பிடிவாதமாக, புள்ளைகளையும் புருஷனையும் கூட்டிக் கொண்டு, விஜிபி கோல்டன் பீச் விஜயா செல்ல...
“எங்கேடி போனே விஜயா,வீடு பூட்டி கிடக்கே...மாப்பிள்ளை கிட்ட நாங்க வரோம்னு சொன்னோமே....உங்கிட்ட சொல்லலியா அவர்”
   விஜயாவின் அம்மா பேச..பேச...
   விக்கித்து நின்றாள், விஜயா.

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

அடடா... என்ன யோசனை.....

ஆனா இதுக்கும் திட்டு உண்டு! :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//”விஜயா, நாளைக்கு கார்த்தால,அப்பா,அம்மா நம்ம வீட்டிற்கு வராங்களாம்”//

இந்த முதல் வாக்கியத்தைப் படிச்சதுமே நான் நினைச்சேன்.

நினைத்தபடியே நடந்ததில் ஓர் தனி சந்தோஷம்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா,

”தளிர் சுரேஷ்” said...

ஆகா! மாத்தியோசிச்சிட்டாங்களே! அருமையான கதை! நன்றி!

G.M Balasubramaniam said...

அவர் எதார்த்தமாக அப்பா அம்மா என்று சொல்ல , இவர் தவறாகப் புரிந்து கொள்ள . உறவின் ஒருநுணுக்கமே கதையாய் விட்டது. பாராட்டுக்கள் சார்.