Wednesday, October 10, 2012

கோவில் இல்லா ஊரில்.....

ரிடையர்ட்மெண்ட் பணம் லம்ப்பாக வந்திருந்தது ராமாமிர்தத்திற்கு...
அவரின் கனவு நனவாகும் நாள் இது..
ரொம்ப நாட்களாகவே அவருக்கு ஒரு  ஆசை .....பிள்ளைகள் வளர்ப்பு..படிப்பு..என்று அவருடைய முப்பது வருட சர்வீஸும் அதில்  போய் விட, இப்போது தான் அந்த ஆசை மறுபடியும் துளிர் விட ஆரம்பித்தது..
பிள்ளைகள் எல்லாம் தலையெடுத்து நல்ல வேலைகளுக்குப் போய் விட்டார்கள்..’உன் பணத்தை நீயே வைத்துக் கொள் ’என்று பச்சைக் கொடியும் காட்டி விட,தன் மனைவி சிவகாமியிடம் தன் ஆசையை தயங்கி..தயங்கித் தெரிவித்தார்.
    அவளுக்கும் தன்னைப் போல அப்படி ஒரு  ஆசை இருந்திருக்கிறது என்பது இத்தனை வருட தாம்பத்யத்தில் இப்போது தான் தெரிந்து கொண்டது அவருள்
உறங்கிக் கிடந்த மனசாட்சியை  உறுத்த, அவள் ஆசைப் படியே செயல் பட தீர்மானித்தார்.
    மொத்தம் முப்பதைந்து லட்சம் வந்திருக்கிறது.இதைத் தவிர மாசம் சுளையாக இருபதாயிரம் ரூபாய் பென்ஷன் !
     இரண்டு பேர்களுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும்? மருத்துவ வசதி வேறு அவர் வேலை செய்த ஆஃபீசிலேயே கொடுத்து விட்டார்கள்..அதனால்
தைர்யமாய் முடிவெடுக்கலாம் என்று மனத்துள் எக்கச் சக்கமாய் உற்சாகம் கரை புரள ......
   விளம்பரங்களை பார்த்தார்...புரோக்கர்களைப் பார்த்தார்....
சிவகாமி பிடிவாதமாய் சொல்லி விட்டாள்..அவளுக்கு டபுள் பெட் ரூம்ஃப்ளாட் தான் வேண்டுமாம்..அதுவும் கோவிலுக்கு பக்கத்தில்!
   இந்த கண்டிஷன்கள் தான் பயங்கரமாய் இடித்தது..
   டபுள் பெட்ரூம் பிளாட் அதுவும் கோவிலுக்கு அருகில் என்பது எட்டாக் கனியாக இருந்தது...
   எல்லாம் சேர்த்து ஐம்பதுக்கு மேல் ஆகிறது...
   சிவகாமியிடம் சொல்லிப் பார்த்தார்...
   “இதோ பாரும்மா.. நல்லா விசாரிச்சுட்டேன்...ஐம்பத்தைந்துக்கு  ஒரு பைசா கூட யாரும் குறைக்க மாட்டேங்கிறாங்க.. நம்ம கிட்ட எல்லாம் சேர்த்தாலும் ....  முப்பது...முப்பத்தைந்து ... தானே இருக்கு..
என்ன பண்றது?”
   “அதுக்கும் ஒரு  வழி இருக்குங்க.. நம்ம பக்கத்து வீட்டு பார்வதி மாமியோட வீட்டுக் காரர் பேங்க்ல தானே இருக்கார்..”
   “ ஆமா..அதுக்கென்ன?”
   “ அவர் கடன் தரேன்னார்”
   “பென்ஷனருக்கு யாரும்மா கடன் தருவாங்க..’
   “அந்த கவலை உங்களுக்கு எதுக்கு?”
   “அதை எப்படி அடைக்கிறது?”
   “ இருபது லட்சம் பத்து வருட கடனாத் தராங்க..மாசாமாசம் இருபதாயிரம் கட்டினா போறுமாம்..’
   “ அப்ப புவ்வாவுக்கு..?”
   “ அதான் கோவில் இருக்கே..காஃபி,டிஃபன், சாப்பாடுன்னு மூணு வேளையும் அங்கேயே சாப்பிடலாமாம்...ப்ளாட்ல இருக்கிறவங்க எல்லாரும் அப்படித் தான் பண்றாங்களாம்..பிளாட் விக்கிறவங்களும் சாப்பாட்டு செலவு இவங்களுக்கு மிச்சப் படறதுன்னு தான் இந்த விலை ஏத்திட்டாங்களாம் இங்க  இருக்கிற பிளாட்டுங்களுக்கு!”
         அந்த கோவிலில் உள்ள யானை தலை ஆட்டுவதைப் போல் சரியென்று    தலை ஆட்டினார் ராமாமிர்தம்!
           வேறு வழி ?..        .
      

9 comments:

நிலாமகள் said...

அதான் கோவில் இருக்கே..காஃபி,டிஃபன், சாப்பாடுன்னு மூணு வேளையும் அங்கேயே சாப்பிடலாமாம்//

சிரிக்க‌வும் சிந்திக்க‌வும் வைத்த‌ ப‌திவு.

ADHI VENKAT said...

ஆமாமா..... நிறைய பேர் இப்படித் தான் பண்றாங்க....:)

ஸ்ரீராம். said...

நல்ல ஐடியாவாக இருக்கிறது!

RAMA RAVI (RAMVI) said...

சிரிக்க வைத்தாலும் சிந்தனையை தூண்டிய கதை.

குறையொன்றுமில்லை. said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு

கிருஷ்ணப்ரியா said...

இதைத் தான் நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அந்த கோவிலில் உள்ள யானை தலை ஆட்டுவதைப் போல் சரியென்று தலை ஆட்டினார் ராமாமிர்தம்!
வேறு வழி ?.. //

சரியான பூம்பூம்மாடு
இல்லை இல்லை
கோயில் யானை. ;)))))

cheena (சீனா) said...

அன்பின் ராம் மூர்த்தி - பணி நிறைவு செய்து கையில் கணிசமாக ஒரு துகை வரும்போது - அதனை சரியாக்ப் பயன் படுத்த வேண்டும் . சிந்தனை வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

வணக்கம் ஆர்.அர்.ஆர்

உங்களின் வலைபக்கம் சென்றுபார்த வேளையில் அனைத்துபடைப்புகளும் மிகவும் நேர்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதிலும்(கோவில் இல்லா ஊரில்) என்ற தலைப்பில் எழுத்பட்ட ஆக்கம் மிகவும் அருமையாக உள்ளது. எந்தப் பெண்னும் மாடமாட கோபுரத்தில் ஏறத்தான் விரும்புவாங்கள் விரலுக்கு ஏற்ற வீக்கம் போல...இருக்கவேண்டும்....(அண்ணா).எழுத்து துறையில் மேலும் வாழர்ச்சி பெறஎனது வாழ்த்துக்கள்.
வணக்கம் ஆர்.அர்.ஆர்

உங்களின் வலைபக்கம் சென்றுபார்த வேளையில் அனைத்துபடைப்புகளும் மிகவும் நேர்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதிலும்(கோவில் இல்லா ஊரில்) என்ற தலைப்பில் எழுத்பட்ட ஆக்கம் மிகவும் அருமையாக உள்ளது. எந்தப் பெண்னும் மாடமாட கோபுரத்தில் ஏறத்தான் விரும்புவாங்கள் விரலுக்கு ஏற்ற வீக்கம் போல...இருக்கவேண்டும்....(அண்ணா).எழுத்து துறையில் மேலும் வாழர்ச்சி பெறஎனது வாழ்த்துக்கள்.
(நம்ம பக்கமும் வந்து பாருங்க...அண்ணா)

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-