Thursday, February 16, 2012

வேண்டாம் விருது (2) ?????அதை படிச்சிட்டீங்களா?
வாங்க..வாங்க...
விருது பெற்றவர்களுக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லி வேறு ஐந்து வலைப்பதிவாளர்களுக்கு வழங்க வேண்டுமாம்! அதனால் முதல்ல எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைச் சொல்லிடறேன்.
எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள் :
(1) நாவல்கள் படிப்பதுப் பிடிக்கும்..
(2) குறிப்பாக ஜெயகாந்தன்..
(3) அதுவும் கரகரப்பாய் முந்திரி பக்கோடா+ ஏலக்காய் டீயுடன்....
(4) எப்ப தெரியுமா? நீண்ட தூரம் ரயில் பயணம் செய்யும் போது படிக்கப் பிடிக்கும்.
(5) அப்போது பக்கத்தில் COMPANION இருக்க வேண்டும்..தனிப் பயணம் பயனில்லை!
(6) ”எப்பப் பார்த்தாலும் புஸ்தகமா” என்று சொல்லும் போது,அவர்களுடன் பேசுவது பிடிக்கும்..
(7) ”போதுமே..உங்க மொக்கை” என்று அவர்கள் திருப்பித் தாக்கும் போது மறுபடியும் நாவலுக்குள் தலை நுழைப்பது பிடிக்கும்!

இதோ நான் இந்த ஐந்து வலைப் பதிவர்களுக்கு இவ்விருதுகளை வழங்குவதில் பெருமை அடைகிறேன்.
(அ) http://aarellen.blogspot.in/
(ஆ) http://nittywrites.wordpress.com/
(இ) http://vasanthamullairravi.blogspot.in/
(ஈ) http://vidyasubramaniam.blogspot.in/
(உ) http://kakithaoodam.blogspot.in/
இந்த ஐந்து பதிவர்கள் இப்ப சத்யாக ஒன்றும் எழுதவில்லை..இந்த விருதுகளாவது அவர்களை தூண்டில் இழுப்பது போல் இழுத்து, வலைக்குள் போட்டுவிடும் என்ற
நன்னம்பிக்கையில்....
உங்கள் நண்பன்...

ஆர்.ஆர்.ஆர்..

டட்டடொய்...........ய்ங்க்......

22 comments:

RAMA RAVI (RAMVI) said...

விருதுக்கு வாழ்த்துகள் சார்.

இராஜராஜேஸ்வரி said...

வேண்டாம் விருது (2) ?????

வாழ்த்துகள்!!!!!!

வெங்கட் நாகராஜ் said...

அடடா... என்ன ஒரு பகிர்வு.... :) சுவையாக இருந்தது உங்களது வேண்டாம் விருது பகிர்வுகள்....

பெற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அதுவும் கரகரப்பாய் முந்திரி பக்கோடா+ ஏலக்காய் டீயுடன்....//

ஆஹா இதில் தான் நமக்குள்ள நட்பின் ஒற்றுமையையே காணமுடிகிறது.

உங்களுக்கு விருதுகள் வேண்டாம் என்றாலும். அந்த விருதுகளுக்கு நீங்கள் அவசியம் வேண்டுமாம்.

அனைவருக்கும் வாழ்த்துகள்.

ரிஷபன் said...

உங்களுக்கு விருதுகள் வேண்டாம் என்றாலும். அந்த விருதுகளுக்கு நீங்கள் அவசியம் வேண்டுமாம்.

Ha ha.. super.

பெற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி...

ADHI VENKAT said...

முந்திரி பக்கோடாவுடன் ஏலக்காய் டீயா....

சூப்பர் காம்பினேஷன்....நல்ல ரசனை சார்.
அதுவும் ஒரு மழைநாளில் மழையை ரசித்துக் கொண்டே சூடாக சுவைத்தால் அபாரமாக இருக்குமே...

நீங்களே வேண்டாம் என்றாலும் விருதுகள் உங்களைத் தொடர வாழ்த்துகள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

என்னை உற்சாகப் படுத்த விருதளித்து தட்டிக் கொடுத்தமைக்கு நன்றி. கொஞ்ச நாட்களாக பதிவு பக்கம் வர இயலவில்லை. கற்றலும் கேட்டாலும் ராஜி மூலம்தான் விருது குறித்து அறிந்தேன். மிக்க நன்றி. நான் யார் யாருக்கு இதை பகிர்ந்தளிக்கிறேன் என அறிய எனது பதிவுக்கு வருகை தரவும்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

என்னை உற்சாகப் படுத்த விருதளித்து தட்டிக் கொடுத்திருக்கிறீர்கள். கொஞ்ச நாளாக பதிவுப பக்கம் வர இயலவில்லை. கற்றலும் கேட்டாலும் ராஜி மூலம்தான் விருது பற்றி அறிந்தேன். மிக்க நன்றி. இதை நான் யார் யாருக்கு அளிக்கிறேன் என அறிய எனது பதிவுக்கு வருகை தரவும்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

RAMVI க்கு : இது என்ன? வேண்டாம் விருது(1) ஆ.இல்ல..வேண்டாம் விருது(2) ஆ....அதே..RAMVI..அதே இராஜராஜேஸ்வரி..வை.கோ..சாரி..இங்க வெங்கட் இல்ல...
சாரி..குழம்பி விட்டேன்...மிக்க நன்றி, மேம்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இரஜராஜேஸ்வரிக்கு: வேண்டாம்யா விருதுன்னா வாழ்த்துக்கள்...என்ன உலகமப்பா இது?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெங்கட் நாகராஜுக்கு: நீங்க யாரும் நானே அந்த விருதகளை வைச்சுக்கணும்னு சொல்லலியே..போங்க சார்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வை.கோவிற்கு: நம்ம நட்பின் ஆழமே..
(1) முந்திரி பக்கோடா+ஏலக்காய் டீ;
(2) மோர்க்குழம்பு+மின்னிலை பச்சிடி;
(3) அடை+மிளகாய்ப் பொடி+பசு நெய்:
(4) மிளகாய் பஜ்ஜி+சாஸ்
இவற்றில் தானே இருக்கிறது...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபனுக்கு: என்ன சார் விளையாட்டா இருக்கு? ஆளாளுக்கு..”பெற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி”...என்று போடுகிறீர்களே....
இது நியாயமா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கோவை 2 தில்லிக்கு : ஒரு ரகசியம் சொல்றேன்..வேண்டாம் விருதுன்னு நான் எழுதினதே, நீங்கள்ளாம் எனக்கு..(எனக்கே,எனக்கு) நிறைய விருது கொடுக்கணும்ங்கிறதினால தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வித்யா சுப்ரமணியத்திற்கு:
அப்பாடா..வித்யா மேம் வந்துட்டாங்கப்பா..அது சரி..பாக்கி ஆளுங்கள எங்க காணோம்?

சாந்தி மாரியப்பன் said...

இதைப்போல இன்னும் நிறைய வேண்டாம் விருதுகள் கிடைக்க வாழ்த்துகள் :-)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அமைதிச்சாரலுக்கு: வாங்க வாங்க..வந்து ரொம்ப நாளாச்சுங்க, நீங்க!

வசந்தமுல்லை said...

என்னை உற்சாகப் படுத்த விருதளித்து தட்டிக் கொடுத்திருக்கிறீர்கள். கொஞ்ச நாளாக பதிவுப பக்கம் வர இயலவில்லை.

மிக்க நன்றி. இதை நான் யார் யாருக்கு அளிக்கிறேன் என அறிய wait for a period

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி, வசந்த முல்லை! டக்கென ஏதாவது எழுதி, நம்ம ப்லாக்கர்ஸ் ஜோதியில கலந்துடுங்க....

பத்மா said...

nandri nandri

பத்மா said...

விருதுக்கு நன்றி பாஸ் .... இன்றைக்கு அது பகிரும் விழா என் ப்ளாகில் .வந்து கலந்து கொள்ளவும்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

விருதினை ஏற்றுக் கொண்டதிற்கு நன்றி மேம்..உண்மையிலேயே ஏதாவது கலாட்டா ஆகிவிடுமோ என்று பயந்து போனேன்!
ஆக..இனி எல்லனும், நித்யாவும் தான் பாக்கி!
வசந்த முல்லை எழுதுகிறேன் என்று சொல்லி விட்டார்..பதிவு எழுதுவார் என்கிற நம்பிக்கையுடன்,


ஆர்.ஆர்.ஆர்.