Sunday, May 29, 2011

தமிழ் மண்ணே வணக்கம்!!!

சமீபத்தில் எங்கள் காலனியில் செக்ரடரி சம்பூர்ணம் ஸார் பையன் கல்யாணம்.அவர் ஹைஸ்கூல் ஹெச்.எம். ஆக இருந்து இளைப்பாறுகிறவர். அவருக்கு கொஞ்சம் தமிழும் பிடிக்கும்.ஆகவே மொய் கவரில் ஒரு வாழ்த்துப் பா வையும் இணைத்து வைத்தேன்.பிடித்தவர்களுக்கு பா இணைப்பது நம் பழக்கம். கல்யாணம் முடிந்து நானும்,திருமதியும் அலுவலகம் சென்று விட்டோம். மொய்க் கவரைப் பிரிக்கும் போது அக்கவிதை அவர் கண்ணில் பட, அதை அப்படியே மைக்கில் படித்தார்.. நல்ல வரவேற்பாம்..அனைவரும் சிரக்கம்பம்,கரக்கம்பம் செய்தனராம்.அதை அவரே சொல்ல, எனக்குப் பெருமை..எனக்கென்ன பெருமை? எம் தமிழ்த் தாய்க்கல்லவோ அப்பெருமை?


பூரணமாய் வாழும் நம் சம்பூர்ணம் அருமைந்தர்
வாரணமாயிரம் சூழ வலம் வந்து,காதல் மனைவி
பொற்கரம் பற்றி கடிமணம் புரிந்த நன்னாளில்,
அற்புதமாய் வாழ்வீரென,வாழ்த்துகிறேன்,அன்புடனே!

10 comments:

மோகன்ஜி said...

ஆஹா! இப்படி ஒரு வாழ்த்துப்பா கிடைக்குமென்றால், நான் இன்னும் ஒரு காதல் கல்யாணம் பண்ணிக் கொள்வேனே மூவார்..

அழகான வாழ்த்து உங்கள் மனசு போல..

கே. பி. ஜனா... said...

வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்களிடம் வாழ்த்துப்பா பெற்ற அந்த காதல் ஜோடி மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தான்.

பலரும் பாராட்டிய (சிரக்கம்பம், கரக்கம்பம் பெற்ற) வாழ்த்துப்பா எழுதிய தங்களுக்கு என் பாராட்டுக்கள்


[எனக்கு தாங்கள் எழுதிக் கொடுத்ததொரு
ஆறுதல் பாடலை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.]

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் வாழ்த்துப்பா நன்றாக இருக்கிறது.

மோகன்ஜி, இது என்ன ஆசை…. :)

ஹ ர ணி said...

ஆர்ஆர்ஐயா...

உங்கள் வாழ்த்துப்பா அருமை. அதற்கான முன்விளக்கத்தில் ஓய்வுபெற்றவர் என்பதற்கு இளைப்பாறுகிறவர் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். வெகு பாந்தமாக உள்ளது. அருமை.அருமை. மோகன்ஜி சார்..உங்கள் துணைவியார் இந்த வலைப்பூவைப் படிப்பதில்லையா?

நிலாமகள் said...

அருமை அருமை... மூவார் சார்!! த‌மிழாசிரிய‌ராயிருந்து 'இளைப்பாறுகிறார்'... மிக‌வும் ர‌சித்தேன். த‌மிழ்ப்ப‌ணி வ‌ள‌ர்க‌! சிர‌க்க‌ம்ப‌ம், க‌ர‌க்க‌ம்ப‌ம்... த‌லையாட்ட‌லும், கைதட்ட‌லுமா?!வை.கோ. சாருக்கு அளித்த‌ ஆறுத‌ல் பாட‌லை அறிய‌ அவா ஏற்ப‌டுத்திய‌து வாழ்த்துப்பா.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

’திருமணத்திற்கு வந்து வாழ்த்துப்பா’ என்று சொன்னால், உடனே ‘வாழ்த்துப்பா’ அருளும் மூவார் அவர்களே...நீர் வாழ்க! உம் தமிழ் வாழ்க !!

ரிஷபன் said...

’பா’யிரம் தந்து வாழ்த்திய கவிச் சிங்கமே
நின் தமிழ் வாழ்க..

ADHI VENKAT said...

வாழ்த்துப்பா அருமையாக இருந்தது சார். வாழ்த்துக்கள்.

Unknown said...

தோரணம் பூவாய்-அங்கே
தொங்கிடும் மண்டபத்தில்
பூரணகும்பம் போல-வாழ்த்து
பொலிவுடன் தந்தீர்நன்றி

மணமக்கள் சார்பாக

புலவர் சா இராமாநுசம்
புலவர் குரல்