எனக்கு ஒரு ஆஃபீஸர்.. நான் எந்த ஜோக்..அது எவ்வளவு மொக்கையாய் இருந்தாலும் விழுந்து,விழுந்து சிரிப்பார்..என்னிடம் வேலை வாங்கணுமே..அது போல், நானும், அவர் சொல்லும் ஜோக்..(ஜோக்கா அது!) விழுந்து..விழுந்து சிரிப்பேன்..காரணம்..என் லீவை அவர் ஸேங்ஷன் பண்ணனுமே!
இப்படியாப்பட்ட அந்த ஆஃபீஸருக்கு ஒரு நெருக்கடி..அவ்வளவு ஃப்ரெண்ட்லியாய் பழகுகிறாரே, நாம் அவருக்கு உதவி செய்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது..வாழ்க்கையிலேயே நான் செய்த மிகப் பெரிய தப்பு அது தான்!
அதுக்கு முன்னால் ஒன்று சொல்ல வேண்டும்..அதுவும் என்னைப் பற்றி..
நான் ரொம்ப சங்கோஜி...யாருடனும் ஜாஸ்தி பேச மாட்டேன்..அதுவும் லேடீஸுடன் என்றால்..ரொம்ப ரொம்ப சங்கோஜம்..என் கல்யாணத்துக்கே எந்த லேடி ஸ்டாஃப்யையும் நான் கூப்பிடவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..
அது சரி..உன் சுய புராணம் இங்கு எதற்கு என்கிறீர்களா..அது இங்கு தேவை என்பதால் தான் ஸ்வாமி இவ்வளவு சொல்ல வேண்டியிருக்கிறது..
ஆங்..எதில விட்டேன்..ஆம்..எனக்கு லேடீஸ் என்றாலே அலர்ஜி! ஸ்கூல் படிக்கிற காலத்திலிருந்தே!
நான் ஸ்கூலுக்குப் போன காலத்தில், ஒரு லேடீஸ் ஹைஸ்கூலைத் தாண்டி போக வேண்டும்.கண்களை மூடிக் கொண்டு, தலையைக் குனிந்து கொண்டு போவேன்! காலேஜ்ல அதை விட மோசம்..இரண்டு லேடீஸ் காலேஜ் தாண்டிப் போக வேண்டும்..தலையைக் குனிந்து, தலையை சாய்த்துக் கொண்டே செல்வேன்..இதனால் பாதி நாட்கள் கழுத்து வலி!
குப்புற படுத்துக் கொண்டு கழுத்து முச்சூடும் ஐயொடக்ஸ் தடவிக் கொண்டு கவிழ்ந்து கிடப்பேன்!
சரி..சரி..விஷயத்துக்கு வருகிறேன்..
நம்ம ஆபீஸருக்கு என்ன பிரச்னைன்னா..அவருடைய அப்பா ரொம்ப சீரியஸா இருக்கார்.அவருக்கு உடனடியா ரத்தம் தேவை..யார்..யாரிடமோ ஃபோன் பண்ணிக்கிட்டு இருந்தார் நம்ம ஆஃபீஸர்!
எனக்கும் ரொம்ப நாளா ஒரு ஆசை..ரத்த தானம் செய்யணும்னு..இதை நான் ஏன் நமக்கு கிடைச்ச வாய்ப்பா எடுத்துக்க கூடாதுன்னு எனக்குத் தோணிச்சு..உடனே அவர்ட்ட சொன்னேன்..
அவருக்கு ஆச்சர்யமான ஆச்ச்ர்யம்!!.
‘ வூட்ல சொன்னீங்களா, ராம மூர்த்தி’
’ என் வொய்ஃபே ப்ளட் டோனர் தான், ஸார்’
‘ இருந்தாலும் ஒரு வார்த்தை கேட்டிடுங்க..’
கேட்டேன்..பதில் ஓகே!
எனக்கு ரொம்பவும் பெரிய சாதனை செய்தது போல இருந்தது, ரத்த தானம் செய்தது!ஆஃபீஸர் ஆஃபர் பண்ணின ஹார்லிக்ஸ் பாட்டிலை வேண்டாம் என்றேன்..டீ..காஃபி.. வேண்டாம்..மஸால் வடை வேண்டாம்..ரொம்பவும் பைத்தியக் காரத்தனம் செய்யக் கூடாதென்று, ஆஃபீஸில் கொடுத்த ஒரு நாள் ஸ்பெஷல் காஷுவல் லீவ் மட்டும் எடுத்துக் கொண்டேன்..!!
லீவை நன்றாய் என்ஜாய் பண்ணி விட்டு, மறு நாள் ஆஃபீஸ் சென்றால்..ஆஃபீஸரைச் சுற்றி பத்து பேர்..எனக்கோ கலக்கம்..அவர் அப்பா எப்படி இருக்கிறார் என்று..கவலை இல்லை எல்லாரும் சிரித்து பேசிக் கொண்டு தான் இருந்தார்கள்..
“ ஸார்..அப்பா எப்படி இருக்கிறார்..”
“ வாங்க ராம மூர்த்தி, சரியான சமயத்தில் தான் வந்திருக்கீங்க..கிழிஞ்ச நார் போல பேச்சு..மூச்சில்லாம படுத்துக் கிடந்தவரு, நீங்க ரத்தம் கொட்டுத்துட்டுப் போன ஆறே மணி நேரத்துல...”
“ ஆறு மணி நேரத்துல?”
“ டபால்னு படுக்கையை விட்டு எழுந்தாரு..உட்கார்ந்து கொண்டு கழுத்தை முன்னூற்று அறுபது டிகிரி திருப்பி, அங்க இருக்கிற நர்சுங்கள எல்லாம் ஸைட் அடிக்கிறாரு..எனக்கானா
ஆச்சர்யமான ஆச்சர்யம்..அப்புறந்தான் புரிஞ்சது..உள்ள போனது என்ன? நம்ம ராமமூர்த்தியோட ரத்தம் ஆச்சே..என்னமா வேலை செய்யுது அது?”
எல்லாரும் கொல்லெனச் சிரிக்க..
ஒரு கணம்..ஒரே கணம் தான்..
என்னுள் ஒரு வைராக்யம் எழுந்தது..
..இனி மேல் ஒரு சொட்டு ரத்தம் கூட யாருக்கும் தரப் போறதில்ல...
கொசுக்களத் தவிர!!
10 comments:
நல்லா சிரிக்க வாய்ப்பு கொடுத்தீங்க!
ஒரு வேளை அவர் பழய ரத்தமும் உங்கள் ரத்தமும் சேர்ந்து எதுவும் கெமிகல் ரியாக்ஷனா?!!
மூவார்... உங்க ரத்தம் என்றும் இளமை ரத்தம் அல்லவா? அதான் அதை வாங்கின தாத்தா தூள் பரத்திட்டாரு..
எவ்வளவு நல்ல பிள்ளையா இருந்திருக்கீங்க தலைவரே?
இனிமே யாருக்கும் ரத்தமெல்லாம் தராதீங்க..
அப்படி ரத்தம் வாங்கினவங்க உங்களுக்குப் போட்டியா நகைச்சுவை நயாகிராவாய்ப் பொழியப் போறாங்க.
ச்சே.. என்னாங்க இது.. உங்க ரத்தம்...
ஒண்ணு நயாகிரா.. இல்லேன்னா வயாகிரா!
ரொம்ப நேரம் சிரிச்சேன்.. வாழ்க
அருமையான நகைச்சுவை விருந்து.
ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன்.
உங்களைபோன்ற சங்கோஜிகளுக்கெல்லாம் உள்ளுக்குள் ரத்தம் பூராவும் மோகன்ஜி சொல்லும் வயகிரா கலந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் என்ற முடிவுக்கு வர முடிந்தது, உங்களைவிட இன்றும் மிகுந்த சங்கோஜியான எனக்கு.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk
[Voted 4 to 5]
கொசுவைத் தவிர வேறு யாருக்கும் ரத்ததானம் தரப்போவதில்லையா... அச்சச்சோ.
உங்கள் நகைச்சுவை உணர்வு என்னை அசத்தியது...
இதே போல செயின் ஸ்மோக்கரான ஒரு நண்பர் டெலிவரி ஆன பெண்ணுக்கு ரத்தம் கொடுக்கப் போனார். அவர் ரத்தம் தரலாம் என்று ஹாஸ்பிடலில் ஒப்புக் கொண்டார்கள்! நல்ல வேளை, தேவைப்படவில்லை. ஒரு வேளை கொடுத்திருந்தால் அந்தப் பெண்மணி செயின் ஸ்மோக்கராகி இருப்பார் என்று வரை கேலி செய்வோம்.
எனக்கு வேணா உங்க ரத்தம் கொடுங்க ”மூணார் முத்தே”.. அப்படியாச்சும் எனக்கு நகைச்சுவை எழுத வருதான்னு பார்க்கிறேன்.
'அடப் பாவமே' என்றல்லவா சொல்ல வேண்டும் நாங்கள்! கெக்கே பிக்கே என்று சிரித்து வைத்தால்...? ஓ... அந்த அயோடெக்ஸ் சீன் படித்த போது முந்தைய பதிவின் 'நம்ம' ஜீனா லோலா பிரிகேடா(சரியாய் எழுதினேனா...?!) நினைவு வந்து தொலைத்த வினை. ஒரு நாலு பதிவு தாண்டி இதைப் போட்டிருந்தால் மறந்திருப்போமோ... ஒவ்வொரு பேச்சுக்குமான உள்ளர்த்தம் கூடவே கலகலப்பு. உள்ளது உள்ளபடி சொல்கிற உங்க நேர்மை எங்களுக்குப் பிடிச்சிருக்கு _நிலாமகள்
//.இனி மேல் ஒரு சொட்டு ரத்தம் கூட யாருக்கும் தரப் போறதில்ல...
கொசுக்களத் தவிர!!// VERY FUNNY!
அருமையான நகைச்சுவைப்பதிவு! எழுத்தில் சரளமாக நகைச்சுவை மின்னல்கள் தெறிக்கின்றன!!
’சங்கோஜியான’ உங்களின் ரத்தம் வேறொருவருக்கு செலுத்தப்பட்டால் ‘டகல்பாஜி’ வேலை செய்கிறதா? எங்கேயோ உதைக்கிறதே ஸ்வாமி....அது போகிறது...பதிவு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது.
ஹிஹிஹி.. பிரமாதம்.
Post a Comment