நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Wednesday, May 18, 2011
நவீன ஆத்திச்சூடி!!
அரம் செய்ய விரும்பு!
(Unemployed மகனைப் பார்த்து Carpentar ஆன அவன் அப்பன் சொன்னது இது.அதாவது குலக் கல்வி பற்றிய நீதி. குலத் தொழில் ஒன்றை நீ கற்றுக் கொள்! குடைச்சல் இனி இல்லை என்று ஒத்துக் கொள்!!)
ஆறுவது நீதி!
(ரொம்பவும் Heat ஆன டாபிக் ஆக இருந்தால், அதற்கு ஒரு கமிஷன் அமைத்து விடு! தன்னைப் போல் ஆறி விடும்)
இயல்வது கறவீர்!
(பழம் தின்று கொட்டைப் போட்ட அப்பா, புதிதாய் அரசு வேலையில் சேர்ந்த பையனிடம் சொன்ன அட்வைஸ் இது)
ஈவதை விலக்கேல்!
(தேர்தல் வாக்குறுதி இலவசமாய் ஏதாவது கொடுத்தால், லஜ்ஜைப் பட்டுக் கொண்டு வேண்டாம் என்று சொல்லாதே)
உடைவதை விரும்பு!
(ஏதாவது கட்சி உடைந்தால் அதில் நீ குளிர் காய் என்று ஒரு அரசியல் வாதி சொன்ன அட்வைஸ்)
ஊக்க ‘மது’ கை விடேல்!
(புதிதாய் டாஸ்மாக் கடை திறப்பு விழாவில வருவாய்த் துறை அமைச்சர் சொன்னது)
‘என் எழுத்து’ இகழேல்!
(எவனாவது என் எழுத்தைக் கமெண்ட் அடிச்சா கை, கால் இருக்காது என்றானாம் ஒரு இலக்கிய வாதி!இது எழுத்தாளர்களுக்கான அட்வைஸ்)
ஏற்பது மகிழ்ச்சி!
(வேலை, வெட்டி இல்லாமல் யாராமல் புகழ்ந்தால், அது அண்டப் புளுகு,ஆகாசப் புளுகு என்றாலும் அன்போடு ஏற்றுக் கொள்)
ஐயம் இடாமல் உண்!
(விலை வாசி விண்ணை முட்டும் இந்நாளில், விருந்துக்கென்று யாரையாவது கூப்பிட்டு, வீட்டில்,வயிற்றெறிச்சல் கிளப்பி, உள் நாட்டுக் குழப்பம் உண்டாக்காதே!)
ஒப்புறவு கொள்வீர்!
(ஒப்புக்கு உறவு கொள்! காலை வாரி விடும் என்றால், காங்கிரஸே ஆனாலும் கழட்டி விடு)
ஓதுவது தமிழில்!
( நம் தமிழ் நாட்டில் வெஜ், நான் வெஜ் அத்தனை கடவுள்களுக்கும் தமிழில் அர்ச்சனை செய்)
ஓளடதம் கொள்ளேல்!
(காசு கொடுத்து மருந்து வாங்கி, குப்பையில் கொட்டவும்.அப்போது தான், மருந்துக் கடைக் காரனும் பிழைப்பான்.. நாமும் பிழைப்போம்!!)
பின் குறிப்பு:
இன்னும் எத்தனை நாளுக்குத் தான் ஆத்திச் சூடி என்றால் ஒவ்வை படத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது? ஒரு CHNAGE க்குத் தான் நம்ம ஜீனா லோலா பிரிகேடா படம் !!!!...
Labels:
வெட்டிப்பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
நம் தமிழ் நாட்டில் வெஜ், நான் வெஜ் அத்தனை கடவுள்களுக்கும் தமிழில் அர்ச்சனை செய்)
ஆஹா.. வந்தாரய்யா.. புதிய புலவர்.. எல்லாமே அமர்க்களம்..
அடடா, நவீன ஆத்திச்சூடி நல்ல பல தெளிவான கருத்துக்களை, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றார்போல வெகு அருமையாகவும் நகைச்சுவையாகவும் அளித்துள்ளது என்னைப்புல்லரிக்கச்செய்து விட்டது.
ஒளவையாருக்கும் மேக்-அப் போட்டு நவீனமாக்கிக் காண்பித்துள்ள குறும்பும் அருமை.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
நம்ம ஜீனாவா? ஓகே, சரி சரி. ஈவதை விலக்கேல்னு நீங்களே சொல்லிட்டீங்க. நம்ம ஜீனா தான்.
ஊக்கமது கைவிடேல் டாப்ஸ்!
அமர்க்களம் சார்! ;-))
கற்பது மவுஸ் கிளிக்களவு என்று தெளிந்தேன்!!
நவீன ஆத்திசூடி நன்று!
ஆத்தி! இது எப்பேருந்து? நல்ல தமாசா இருக்கில்லே!
இன்னும் எத்தனை நாளுக்குத் தான் ஆத்திச் சூடி என்றால் ஒவ்வை படத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது? ஒரு CHANGE க்குத் தான் நம்ம ஜீனா லோலா பிரிகேடா படம் !!!!
...... ஆஹா..... என்னே புரட்சி! நடத்துங்க.... நடத்துங்க... :-))))))
எல்லா விளக்கங்களும் சபாஷ் ரகம்.
ஔவையார் படத்தைப் பெரிசாப் போட்டிருக்கலாம்.அம்மா ஜெயிச்சதுல இருந்தே பாக்கறேன்.உங்க ரேஞ்சே மாறிப்போச்சு ஆராரார் சார்.
ஆஹா! நவீன ஆத்திச்சூடியை இந்த நானிலத்திற்கு ஈந்த எம் தலைவா....ஒவ்வொரு வரியும் நம் செம்மொழியின் சொத்து...அதுவும் ’ஓளடதம் கொள்ளேல்!’ என்பதற்கு தந்த விளக்கம் ‘ஆஹா...ஓஹ்ஹோ...பேஷ்..பேஷ்’ ரகம்.
//ஒரு CHANGE க்குத் தான் நம்ம ஜீனா லோலா பிரிகேடா படம் !!!//
அதெல்லாம் சரி, ஒரு CHANGE க்குத் தான் ஜீனா லோலா பிரிகேடா படம் !!! என்று எழுதினால் போதாதா... ’நம்ம’ என்ன வேண்டிக் கிடக்கு?
அம்மா ஜெயிச்சதுல இருந்தே பாக்கறேன்.உங்க ரேஞ்சே மாறிப்போச்சு ஆராரார் சார்.
hahahahahaaaa
தொட்டாசுருங்கிங்க எல்லாம் உங்களைப் பார்த்தாலே போதும். புன்னகைக்க கத்துக்கலாம். நல்ல டாக்டர் சார் நீங்க. வாழ்க வாழ்க!
நவீன ஆத்திச்சூடி – நல்லாவே இருக்கு….
ஆத்திச்சூடி நவீனம் அதனால ஔவையும் நவீனம்… :)
நவீன ஆத்திச்சூடி!!
புரட்சிக்குப் பாராட்டுக்கள்.
அடேயப்பா நல்லாத்தான் இருக்குங்க புதிய ஆத்திச் சூடி.
\\ஈவதை விலக்கேல்!\\ அவங்களா மாமூல் கொடுத்தா வேண்டாமுன்னு சொல்லாம வாங்கி பாக்கெட்டுக்குள் போட்டுக்கோ........... புதுசா வேலைக்குச் சேரும் மாமூல் போலீஸ்காரனின் அப்பாவோட அறிவுரை... இது எப்படி இருக்கு!!
அடடா! புதிய ஆத்திச்சூடி ரொம்ப நல்லாயிருக்கே!!
ha ha good one... :)
especially this one...
ரொம்பவும் Heat ஆன டாபிக் ஆக இருந்தால், அதற்கு ஒரு கமிஷன் அமைத்து விடு! தன்னைப் போல் ஆறி விடும்
அடாடா ஆம்பிளை அவ்வையாரே! ரூம் போட்டு யோசிச்சீங்களா! மனம் விட்டு சிரித்தேன். உங்க அவ்வையார் கனவுலயெல்லாம் வந்து கவிதை சொல்வாளோ?
வர மாமியார் கழுதை போல ஆனாளாம்; வரவர மாமியார் ராஜபக்ஷே போல ஆனாளாம்=புது மொழி! வீட்டுக்கு வீடு வாசப்படி அந்தக்காலம்;வீட்டுக்கு வீடு கேபிள் டிவி =புது மொழி; விபச்சாரியைக் கூட நம்பலாம்;ஆனால் போலீஸை நம்பாதே=பழமொழி;போலீஸைக்கூட நம்பலாம்;ஆனால்,சோனியாவை நம்பாதே=புது மொழி;
Post a Comment