Monday, February 14, 2011

காதலில் விழுந்’தேன்’!!!

பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன்.
நான் கதையைத் தேடி எங்கும் போவதில்லை!
செல்போனில் யாரோ,யாருடனோ பேசினால் கூட எனக்கான கதை அங்கு காத்திருக்கும்.
”சார்..எப்படி இருக்கீங்க..உங்களோட பேசி ரொம்ப நாளாச்சு”
“..........”
“ எப்ப டில்லி போகப் போறீங்க?”
“ உடம்ப ஜாக்ரதையாப் பார்த்துக்குங்க. அங்க இப்ப ரொம்ப குளிரு”
“................”
இப்படியாகத் தானே பேச்சு நடந்து கொண்டிருந்தது. என் பின்சீட்டிலிருந்து!
“ அப்ப நான் சொர்ணாங்கறவங்களை லவ் பண்றேன்..அவங்களும் என் கேஸ்ட் தான். சப் செக்ட் கூட எங்களுது தான். எங்க அப்பா ஸ்டேட் கவர்ன்மெண்ட்.அவங்க அப்பா சென்ட்ரல்
கவர்ன்மெண்ட்.”
’அப்ப செம்புலப் பெய நீரார் போல அன்புடை நெஞ்சம் தாம கலந்ததுவேன்னு லவ் பண்ண வேண்டியது தானே’- நான் மனத்துள் நினைத்துக் கொண்டேன்.
‘ரொம்ப படபடப்பா இருந்துச்சு. அப்பா என்ன சொல்வாங்களோ..அம்மா என்ன சொல்வாங்களோன்னு..ஆனா என்ன ஆச்சர்யம்! எல்லாரும் க்ரீன் சிக்னல் காட்ட எனக்கு
ச்சேன்னு ஆயிடுத்து.லவ்வுன்னா ஜிவ்வுன்னு ஏறணும்.ஆனா நம்ம கேசில் அது ஜவ்வு மாதிரி போயிடுத்து..’
நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன் நான்!
“ நாம லவ் பண்ற பொண்ணுக்கு அக்கா இருந்தா நல்லதுங்க..அது பேரச் சொல்லி கொஞ்ச நாள் ஓட்டலாம். அக்காக்கு கல்யாணம் ஆனதும் நம்ம கல்யாணம் வைச்சுக்கலாம்னு சொல்லி ஒரு இரண்டு, மூணு வருஷம் ஓட்டலாம்..”
“ ...உடனே கல்யாணம் பண்ணிக்கக் கூடாது.கொஞ்ச நா ஜாலியா இருந்துட்டுத் தான் தாலியே கட்டணும். இப்பவே கல்யாணம் கட்டிக்கிட்டா லைஃப் சப்புனு போயிடும். நம்மளை சைட் அடிக்க விட மாட்டாளுக! ஜவுளிக் கடை நுழைந்தால் நமக்கு வாழ்க்கையே வெறுத்துப் போயிடும். அது தான் கொஞ்ச நா கழிச்சு கல்யாணம்னு சொல்லியிருக்கேன்..”
எனக்கு துக்கம் துக்கமாய் வந்தது.இதோ என் ஸ்டாப். நான் இறங்கணுமே..
எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருக்கிறது போலும்!
“ சரிங்க .என் ஸ்டாப் வந்தாச்சு.. நான் இறங்கணும். அப்புறம் பேசலாம்”
அவனும் ஸ்டாப்பில் இறங்கினான்.
அவனை தீர்க்கமாகப் பார்த்தேன்..கச்சலான உடல். மனுசனை வசீகரம் செய்ய எந்த சங்கதியும் அவனிடம் இல்லை..குச்சி..குச்சியாய் கை கால்கள். போதாக் குறைக்கு தாடி வேறு?
தவிர காதலுக்கு கண்ணில்லை என்பார்களே..அதைப் போல் இவனிடம் எதைப் பார்த்து அவள் மயங்கினாளோ?
மேலும் இந்த காலத்து இளைஞர்களுக்கு காதலில் விழுந்தேன் என்று சொல்வதே ஒரு சிற்றெறும்பு தேனில் விழுந்த சுகம் தரக் கூடியதோ?
நாலு அடி தான் போயிருப்பான். மறுபடியும் ஒரு ஃபோன்!
காதல்... என்பது எவ்வளவு அந்தரங்கமான விஷயம்! அதைப் போய் நாலு பேர் கேட்கும் படியாய் பஸ்...ரோடு போன்ற பொது இடங்களில் உரக்கப் பேசுகிறானென்றால்..
எனக்குள் ஒரு மின்னல்!
அட ..இவனே எதாவது கற்பனை பண்ணிக் கொண்டு அது ஏன் கட்டுக் கதையாய் இருக்கக் கூடாது?
இவன் ஒரு அன் எம்ப்ளாய்ட் யூத்! வீட்டில் வேளாவேளைக்கு திட்டு!
அன்பைத் தேடி அலைகையில் அதற்கு காதல் என்று பூச்சூட்டி...
மாஸ்லோவின் SELF ESTEEM EGO க்கு அடுத்தபடி இளைஞர்கள் ‘காதலில் விழுந்தேன்’
என்று சொல்வதே ஒரு மேனியாவோ?
எங்கோ “ வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மீளாக் காதல் நோயாளன் போல்’ என்கிற ஆழ்வார் பாசுரம் கேட்டது.
அட இன்றைக்கு வாலேண்டேன்ஸ் டே!

13 comments:

வசந்தமுல்லை said...

இந்த காலத்து இளைஞர்களுக்கு காதலில் விழுந்தேன் என்று சொல்வதே ஒரு சிற்றெறும்பு தேனில் விழுந்த சுகம் தரக் கூடியதோ!!!

இன்றைய வாலிபர்களுக்கு இதுதான் பேஷன் !!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அன்பைத் தேடி அலைகையில் அதற்கு காதல் என்று பூச்சூட்டி... மாஸ்லோவின் SELF ESTEEM EGO க்கு அடுத்தபடி இளைஞர்கள் ‘காதலில் விழுந்தேன்’
என்று சொல்வதே ஒரு மேனியாவோ?//

மிகச்சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள், மாஸ்லோ சொல்ல மறந்ததை. நம்ம ப்ளாக் பக்கம் வாங்க, உங்களுக்கு ”உலக்கை அடி” காத்திருக்கு !

யாசவி said...

நச்

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

மாஸ்லோ சொன்னதாகட்டும்... ஆஸ்லோ சொன்னதாகட்டும்... ஆயிரம் சொன்னாலும் காதல் காதல்தான் சார் !!

vasan said...

காத‌லிக்காத‌, காத‌லிக்க‌ப்ப‌டாத‌ யாருமே உலகில் இல்லை, ஆனால்
அதைத் தெரிவித்து வெற்றி தோல்வி க‌ண்ட‌டைந்த‌வர்க‌ளை விட‌,
அதைச் சொல்லாம‌லே ம‌றைத்த‌ / ம‌ரித்த‌ காதல்க‌ள் ப‌ல‌ ம‌ட‌ங்கு.

சி.பி.செந்தில்குமார் said...

>>>நாம லவ் பண்ற பொண்ணுக்கு அக்கா இருந்தா நல்லதுங்க..அது பேரச் சொல்லி கொஞ்ச நாள் ஓட்டலாம். அக்காக்கு கல்யாணம் ஆனதும் நம்ம கல்யாணம் வைச்சுக்கலாம்னு சொல்லி ஒரு இரண்டு, மூணு வருஷம் ஓட்டலாம்..”

இது செம ஐடியாவா இருக்கே..

ரிஷபன் said...

அன்பைத் தேடி அலைகையில் அதற்கு காதல் என்று பூச்சூட்டி...
கவித.. கவித..

மோகன்ஜி said...

காதல்... அது ஜுரம் மாதிரி வந்துடும்..மாத்திரை மருந்தெல்லாம் வேலை செய்யாது. லேசுல போகாது.. மூவார் முத்தே! எனக்கு பிடித்த வரிகள் ரிஷபனுக்கும் பிடித்தது போல் ஒரே விதமாய் எண்ணம்... பேச்சு.. ஹும்..

மனோ சாமிநாதன் said...

இன்றைய இளைஞர்களின் சிந்தனைகளை, போக்கை அழகாக விவரித்திருக்கிறீர்கள். அதுவும் செல்ஃபோனில் இந்தக் காதல் நீங்கள் சொல்வது போல படாத பாடு படுகிறது!!

RVS said...

இப்போல்லாம் குச்சி குச்சி கை காலோட தாடியோட இருந்தால்.. அவங்கெல்லாம் யதார்த்த பட ஹீரோக்கள். அதனால.... அவங்களுக்கும் காதல் ஒர்க் அவுட் ஆகுது மூவார் முத்தே! ;-)

சிவகுமாரன் said...

ஆழ்வார் பாசுரத்தை அழகாய் கோர்த்தீர்கள். அருமை.

Yaathoramani.blogspot.com said...

அன்பைத் தேடி அலைவது
மிகச் சரியான சொற்றொடர்
நூல் கண்டின் முனை கிடைத்ததும்
சட சடவெனச் செல்லும்
உங்கள் சிந்தனை வேகம்
மலைப்பையேற்படுத்துகிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

கேட்டதை அழகா பகிர்ந்திருக்கீங்க..ஆர் ஆர் ஆர்