Friday, February 11, 2011

ஆறு ஓடுகளும், நான்கு சவுக்கு மரங்களும்!!

கொலை!
திட்டமிட்டு ஒரு கொலை!
மன்னிக்கவும்...
ஒரு கொலை அல்ல..
நான்கு கொலைகள்!
பட்டபகலில்...
அதுவும்..
ஆரண்ய நிவாஸத்தில்!
கேவலம் ஒரு
முன்னூற்று ஐம்பது ரூபாய்
கூலிக்காசுக்காக..
இரண்டு ஆட்கள்
நான்கு கொலைகளை,
சர்வ சாதாரணமாய்,
செய்து விட்டுப் போக,
அந்த நான்கு ‘பாடி’களும்
DISPOSE செய்யப் படாமல்,
கட்டையாய் வாசலில்,
ஒரு வாரமாய்
பரிதாபமாய்..
காத்துக் கொண்டிருக்க,
ஒருவர் கூட,
இந்த அநியாயத்தைத்
தட்டி கேட்காமல்..
அவரவர் காரியமாய்
போய்க் கொண்டிருக்க,
எந்த இ.பி.கோ.
செக்‌ஷனாலும்
சுட்டிக் காட்ட முடியாதபடி
ரத்தம் என்பது
துளிக்கூட சிந்தாமல்,
ஒரு க்ரைம்!
ஏற்பாடு செய்த நான்
துளிக் கூட குற்ற உணர்ச்சி
இல்லாமல்!
ஆனால்,
வாசலில் கிடந்த
அந்த ‘சவம்கள்’
என் இரும்பு மனதை
கொஞ்சம் கொஞ்சமாய்
பிசைய ஆரம்பிக்கவே,
இதோ உங்கள் முன்..
நான் ’சரண்டர்’
ஆகி விட்டேன்!
விஷயம் இது தான்!
’வாடிய பயிர்
கண்டு வாடினேன்’
என்ற வாடிய
பயிருக்கே வாடிய
வள்ளலார் வாழ்ந்த
மண்ணில்,
வாடாமல்,
தளதள வென்று
நன்றாகவே வளர்ந்து
கொண்டிருந்த நான்கு
சவுக்கு மரங்களை,
கேவலம் அவை
காற்றில் ஆடி,
மாடி ஓடுகளை
கீழே தள்ளி விடுகிறது,
என்கிற அற்பமான
காரணத்தினால்,
வெட்டி வீழ்த்தியுள்ளேன்!
தன் கை கண்ணை
குத்துவதால் யாராவது,
கை தனை வெட்டுவார்களா..
என்னைத் தவிர?
அந்த படு பாதகச்
செயல் செய்த
மாபாவி நான்!
மரங்களை
நேசிக்கிறேன்,
ஸ்வாசிக்கிறேன்
என்று உங்கள் முன்
மார் தட்டி
பெருமையாய் சொன்ன,
அதே ஆர்.ஆர்.ஆர்.
இப்போது,
உங்கள் முன்
தலை குனிந்து!!!!!!

16 comments:

எல் கே said...

:((

நிலாமகள் said...

வெட்டப் படுவதற்காகவே வளர்க்கப் படுபவைகளுள் இதுவும் சேர்த்தி. எதற்கு வீண் ஆரவாரம்?!

Chitra said...

நான்கு மரக்கன்றுகளை நட்டு விடுங்களேன்!

வல்லிசிம்ஹன் said...

சித்ரா சொல்வது உண்மைதான். எங்கள் வீட்டில் இருந்த வேப்பமரம் 1900ஆம் வருடம் நடப்பெற்று வளர்ந்து , அதற்குப் பக்கத்தில் புதுவீடுகள் வந்ததும்,

அதனுடைய வேர்கள் நிலத்தில் 30 அடிக்குப் பாய்ந்திருப்பதைக் கண்டார்கள். பக்கத்துவீட்டுக்கர மிகுந்த வணக்கத்துடன் கேட்டுக் கொண்டதால் வெட்ட வேண்டி வந்தது.
வெட்டப்பட்ட மரத்தின் அடிப் பாகத்தை மட்டும் வைத்துக் கொண்டோம்.:(

middleclassmadhavi said...

யாருக்கும் பிரச்னை தராத இடத்தில் புது மரக் கன்றுகளை வைத்து விடுங்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

சித்ராவின் கருத்துதான் என் கருத்தும்.....

ADHI VENKAT said...

நானும் சித்ரா சொல்வதை வழிமொழிகிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மரம் நடு விழா ஒன்று எடுத்து எங்கள் எல்லோரையும் மறக்காமல் அழைத்து விடுங்கள், ஸ்வாமி !.

வெங்கட் நாகராஜ் said...

திரும்ப வேறு மரச்செடிகள் நட்டு விடுங்கள். ஆனால் வெட்டிய மரம் மீண்டு வருமா என்ற கேள்விக்கு, அதுதான் ஒரு கவிதையாய் வந்து விட்டதே என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்!

அன்புடன் நான் said...

வேற நாலு மரம் நட்டுங்க.... அதுதான் பரிகாரம்

பகிர்வு நேர்மை.

raji said...

சந்தனம் தான் தேய்ந்து மணத்தை
தருவது போல்,அந்த சவுக்கு மரங்கள்
தான் அழிந்து ஒரு கவிதையை
தந்ததாக எடுத்துக் கொள்ளுங்களேன்.

உலக விதிகளில் ஒன்று வாழ
ஒன்று அழிவது என்பது உண்டு.

பல்லி உயிர் வாழ கரப்பான் அழிகிறது.
பாம்பு உயிர் வாழ எலி அழிகிறது.
இதுதான் இயற்கையின் நியதி.
தங்களுக்கு தெரியாததா ஆரண்யநிவாஸ் சார்?

அப்பாதுரை said...

ஆறு மனமே ஆறு

vasan said...

வ‌ள‌ர்ந்து காற்றிலாடி த‌ட்டிய‌து, விழுந்த‌து வீட்டு ஓடு.
வேறுவ‌ழியின்றி வெட்டினாலும் நெருடுகிற‌து நெஞ்சு கூடு.
குட்டை ம‌ர‌ங்க‌ளை ந‌ட்டு நிர‌ப்புங்க‌ள், ம‌னசும் நிறைய‌ட்டும்.

TamilTechToday said...

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

MOre info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

ரிஷபன் said...

மரத் தமிழனய்யா நீர்!

இராஜராஜேஸ்வரி said...

’வாடிய பயிர்
கண்டு வாடினேன்’
என்ற வாடிய
பயிருக்கே வாடிய
வள்ளலார் வாழ்ந்த
மண்ணில்,//
nammum thaan vazkiroom!