”வனஜா”
” சொல்லுங்க”
” சொன்னா, கோச்சுக்க மாட்டியே..”
“ என்ன பீடிகை பலமா இருக்கு?”
“ நான் கேட்டதற்கு முதல்ல பதில் சொல்லு”
“ கோச்சுக்க மாட்டேன், சும்மா சொல்லுங்க..”
” உடனே வேண்டாம். நிதானமா யோசிச்சு பதில் சொன்னாப் போறும் “
“என்னங்க சொல்லப் போறீங்க?”
ஆர்வத்துடன், கேட்டாள், வனஜா.
”அது வந்து..அது வந்து..”
“ அட, சும்மா சொல்லுங்க”
கிரிக்கு பிரளயம் நடக்குமோ என்று ஒரு பயம்.அந்த பயத்தை பாசம் வென்றது!
“ வனஜா.. நீ இப்ப இருக்கிற நிலையில, யாராவது பெரியவங்க வீட்ல இருந்தா
நல்லா இருக்குமில்ல..அதான்..எங்க அப்பா,அம்மாவை மறுபடியும் வீட்டுக்குக்
கூட்டிகிட்டு வரலாமான்னு தான்..கொஞ்ச நாளைக்கு மட்டும் ”
கிரியின் குரல் தழுதழுத்தது.
வனஜா செல்லமாக வள்ர்ந்த பெண்..அவன் அம்மாவிற்கும்,அவளுக்கும் ஒத்து
வராததினால், திருமணம் ஆன ஆறாவது மாசமே, அவள் ஆஃபீஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர்
மூலம் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டாள்.
அதற்குத் தான் கிரிக்கு இத்தனை தயக்கம்!
” வாவ்.. ”
துள்ளிக் குதித்தாள், வனஜா..
”பார்த்து..பார்த்து...குழந்தை..”- பதறினான், கிரி.
” நானே உங்க கிட்ட சொல்லணுன்னு நினைச்சேன்..குட்டிப் பாப்பாக்கு கதை சொல்ல
தாத்தா, பாட்டி இருந்தாத் தானே நல்லா இருக்கும்..அவங்க இனிமே எங்கேயும் போக வேண்டாம்..இனிமே அவங்க எப்ப்வும் இங்க தான் இருப்பாங்க..”
“எதனால இந்த திடீர் மாற்றம்?”
கெமிஸ்ட்ரி புரியாமல்,முழித்தான், கிரி.
“...இந்த ஆம்பளைங்களையே.. நம்ப முடியாது. நேற்று வந்த பொண்டாட்டி பேச்சக் கேட்டு பெத்தவங்களையே, முதியோர் இல்லம் அனுப்பிச்ச ஆளு தானே, நீங்க..? நாளைக்கு
உங்க புள்ளையும் இப்படி செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்? அதுக்குத் தான் ஒரு கூட்டுக் குடும்ப சூழலில் அவனை வளர்க்கப் போறேன்”
செல்லமாக அவன் குமட்டில் வனஜா குத்த, மயங்கி விழுந்தான், கிரி!
22 comments:
கதை நன்கிருக்கிறது!
தங்களுக்காக அழகான விருதுகள் என் வலைத்தளத்தில் காத்திருக்கின்றன. வந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
www.muthusidharal.blogspot.com
அருமை! விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்!
பெண்கள் எப்பவுமே விவரமானவர்கள், சுயநலவாதிகள் என்பதை நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள்...
உங்கள் வலைப்பூவில் வானவேடிக்கை எல்லாம் பிரமாதமாக இருக்கிறது... அதை என்னுடைய வலைப்பூவிலும் பயன்படுத்த விரும்புகிறேன்.... எப்படி என்று சொல்லித்தர இயலுமா...?
உங்க எழுத்து நடைக்கு ஒரு சபாஸ் போடலாம்.
நல்ல கதை. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.
விருது பெற்றதற்காக வாழ்த்துக்கள் சார். யதார்த்தமான கதை.
எப்படியோ... நல்லது நடந்தால் சரி!
மனோ சாமினாதன்:கதை நன்கிருக்கிறது!
தங்களுக்காக அழகான விருதுகள் என் வலைத்தளத்தில் காத்திருக்கின்றன. வந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.
நான் : முப்பது வருடத்தில் ’தரன்’ என்ற பெயரில்
முப்பது கதைகள் பிரசுரம். ஒருவருக்கும் என்னைத் தெரியாது.
வலைப்பூவிற்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அதற்குள் எவ்வளவு விமர்சனங்கள்..எவ்வளவு நண்பர்கள்..அன்பு நண்பர்கள் அளிக்கும் அழகிய விருதுகள்.
வா........வ்..
ஆண்டவருக்கு நன்றி!
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!
சித்ரா:அருமை! விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்!
நான் : மிக்க நன்றி,மேம்!
பிரபாகரன்:பெண்கள் எப்பவுமே விவரமானவர்கள், சுயநலவாதிகள் என்பதை நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள்...
உங்கள் வலைப்பூவில் வானவேடிக்கை எல்லாம் பிரமாதமாக இருக்கிறது... அதை என்னுடைய வலைப்பூவிலும் பயன்படுத்த விரும்புகிறேன்.... எப்படி
என்று சொல்லித் தர இயலுமா?
நான் :பெண்கள் விபரமானவர்கள்..சுயநலவாதிகள்..என்று நான் சொல்லவில்லை,ஐயா..ஐயோ என்னை வம்பில் மாட்டி விடாதீர்கள்! ’ வலைப் பூவில் வாண வேடிக்கை’ நம் ப்லாகக்கர் நண்பர் ஒருவர் போட்டதைத் தான் எடுத்துப் போட்டிருக்கிறேன்.
பார்த்துச் சொல்கிறேன்...
KANA VARO :உங்க எழுத்து நடைக்கு ஒரு சபாஸ் போடலாம்.
நான் : மிக்க நன்றி!
வெங்கட்: நல்ல கதை. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.
நான் : மிக்க நன்றி, வெங்கட்!
கோவை 2 டெல்லி:விருது பெற்றதற்காக வாழ்த்துக்கள் சார். யதார்த்தமான கதை.
நான் : மிக்க நன்றி. சமயத்தில், யதார்த்தமும் சுடும்!
நிலாமகள் :எப்படியோ... நல்லது நடந்தால் சரி!
நான் : நல்லது எப்படி நடக்கும்? இவ்வுலகில் தீயதிற்கு சிலந்தி போல, எட்டு கால்கள். கால்களை விசிறி..வேகமாக பாய்ந்து கொண்டு வரும்! நல்லதிற்கு குறை கால்கள். குழந்தை மாதிரி தவழ்ந்து கொண்டு தான் வரும்!
சிலருக்கு, தான் தந்தை தாயாகும் போது தான், தன்னைப் பெற்றவர்களின் அருமையே புரிய ஆரம்பிக்கும். நல்லதொரு படைப்பு தான் - கூட்டுக்குடும்பம் ஏற்பட்டு கூட்டணிக்குள் விரிசல் ஏற்படாமல் இருந்தால் சரி தான்.
வை. கோ:சிலருக்கு, தான் தந்தை தாயாகும் போது தான், தன்னைப் பெற்றவர்களின் அருமையே புரிய ஆரம்பிக்கும். நல்லதொரு படைப்பு தான் - கூட்டுக்குடும்பம் ஏற்பட்டு கூட்டணிக்குள் விரிசல் ஏற்படாமல் இருந்தால் சரி தான்.
நான் : வருகைக்கு நன்றி.
கூட்டணியில் எப்படி விரிசல் வரும்?
அம்மாவே O.K.ன்னிட்டங்களே! ஐயா எப்பவும் போல OFF தான்!
நல்ல கதை.
//VAI. GOPALAKRISHNAN said...
சிலருக்கு, தான் தந்தை தாயாகும் போது தான், தன்னைப் பெற்றவர்களின் அருமையே புரிய ஆரம்பிக்கும்.//
வழிமொழிகிறேன்.
விருதுக்கு வாழ்த்துக்கள்!
பெண்கள் சுயநலவாதிகள் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே உண்டு (இதைப் படிக்கும் பெண்களைத் தவிர)
Super like!!!!
short and sweet!!!
ராம லக்ஷ்மி:நல்ல கதை.
//VAI. GOPALAKRISHNAN said...
சிலருக்கு, தான் தந்தை தாயாகும் போது தான், தன்னைப் பெற்றவர்களின் அருமையே புரிய ஆரம்பிக்கும்.//
வழிமொழிகிறேன்.
விருதுக்கு வாழ்த்துக்கள்!
நான் : மிக்க நன்றி!
அப்பாதுரை:பெண்கள் சுயநலவாதிகள் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே உண்டு (இதைப் படிக்கும் பெண்களைத் தவிர!!
நான் : தப்பிச்சீங்க!!!
vandhana:Super like!!!!
short and sweet!!!
நான்: அட..! யாரோ புதுசா வந்திருக்காங்களே !!
Post a Comment