நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Tuesday, November 23, 2010
விரல் நுனியில்...
" ஐயையோ...என் பர்ஸ்"
" பிக் பாக்கெட்"
" விடாதே.."
" பிடி"
" குத்துங்கடா எல்லாரும்."
பிடிபட்டேன், நான்.
அதுவும் முதல் தடவையாய்!
ஆளாளுக்கு நொக்கி எடுக்கிறார்கள். எவனிடமோ, திருட்டு கொடுத்தவனெல்லாம்
என்னிடம் வந்து பழி தீர்த்துக் கொள்கிறான் போல....
அடித்த அடியில் மயக்கம் வருகிறது....
.. விட மாட்டான்கள் போல இருக்கிறதே!
கண்கள் சொருகிக் கொண்டே போக...
தண்ணீ...தண்ணீ...
வாய் முணுமுணுக்க....
நான் மட்டும் ஏன் இப்படி?
என்ன செய்வது? பாழும் பசி, தேவை மேலும் சூழ்நிலை.. அடுத்தடுத்து இறந்த பெற்றோர்...எங்கே பாரமாய் ஒட்டி கொண்டு விடுவானோ என்ற உறவுகளின் உதாசீனம்.....
இப்படி இருக்கிறேனே..அந்த நாளில் நாங்கள் விளையாடும் விளையாட்டே..'திருடன் போலீஸ் அதில் நான் தான் போலீஸ் . பாக்கி பசங்க எல்லாம் திருடன். ஒவ்வொருத்தனையும் கப்பு..கப்புன்னு பிடிப்பேன். அதிலும் அந்த ராஜேஷை சொல்லி வைச்சு புடிப்பேன்..எல்லா விளையாட்டிலுன் நான் போலீஸ்..அவன் திருடன்.
மணி..வெங்கிட்டு...பாலு...எல்லா திருட்டுப் பசங்களையும் (விளையாட்டுல தான்)பார்த்தாச்சு. எல்லாப் பசங்களும் கௌரவமாய் இருக்க, நான் மட்டும் அவலமாய்...சமூகத்தின் கிழிசலாய்......
ஐயோ..ஆண்டவன் என்ன மட்டும் ஏன் இப்படி படைச்சான்?
போன வாரம் கூட ரகு கண்ணில் பட்டான். .ப்ரொஃபஸராய் இருக்கிறானாம்.
"நீ.......?" - என்றான்....
"விரல் நுனி வித்தகன் "
" அப்டீன்னா?"
முழிப்பு வந்து விட்டது.
தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்திருப்பார்களோ?
திருட்டுப் பயலுக்கு மரியாதை? எவன் தருவான்?
கைகளில் சிராய்ப்பு....ரத்த கசிவு..உதடு கிழிந்து...சட்டை..கைலி ...டர்.....ர்....ராகி
பிறாண்டி இருக்கிறார்களே!
அட ...இதென்ன.. B 2 போலீஸ் ஸ்டேஷனா?....எஸ். ஐ. வளையாபதி... ஒரு கொலைகார பாவி ஆச்சே..
கொன்னு போட்டுவானே...அட கடவுளே!
கண்களை சிரமப் பட்டு திறக்கிறேன்...
வெளிராய்..
எதிரில்....
.வளையாபதி இல்லை..
அப்ப இது யாரு...
புது ஆளா?...
கண்களை மீண்டும் சிரமப் பட்டு, அகலமாய் விரிக்க...
... ராஜேஷ் ?
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
படமும் கதையும் அருமை
நல்லா இருக்கு சார்.
வாழ்க்கை சிலநேரம் இப்படித்தான். எதிர்பாராததெல்லாம் நடக்கும்.
ஆஹா, படமும் கதையும் அருமை. தில்லியில் நிறைய விரல் நுனி வித்தகிகள் இருக்கிறார்கள் : )
"விரல் நுனி வித்தகன்" நல்ல பேருங்க!
'சமூகத்தின் கிழிசலாய்...', விரல் நுனி வித்தகன் (திருடனுக்கு இப்படியொரு பட்டப் பெயரா?! அட..) ரசித்தேன். சின்ன வயசு விளையாட்டும், நிஜ வாழ்வில் இறை விளையாட்டும் முரண்பட்டுப்போன கதை முடிப்பும் அழகு.
வாழ்க்கை முரண் :(
'விரல் நுனி வித்தகன்' ஆஹா !- கதை நன்றாக உள்ளது. ராஜேஷ், தன பால்ய நண்பனை என்ன செய்தான் என்றறிய ஆவல்.
LK said:படமும் கதையும் அருமை
நான் : நன்றி எல்.கே.
K.ரவிஷங்கர் said: நல்லா இருக்கு சார்.
நான் : முதன் முதலா வந்திரிக்கீங்க...என்ன சாப்பிடறீங்க?
வித்யா சுப்ரமணியம்: வாழ்க்கை சிலநேரம் இப்படித்தான். எதிர்பாராததெல்லாம் நடக்கும்!
நான் : உண்மையிலேயே சினிமாவில் நடப்பது போலத் தான் நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது.ஆனா, என்ன ஒண்ணு, இங்க பாட்டு கிடையாது..அவ்வளவு தான்!
வெங்கட் நாகராஜ்: ஆஹா, படமும் கதையும் அருமை. தில்லியில் நிறைய விரல் நுனி வித்தகிகள் இருக்கிறார்கள் : )
நான் : பலே..பிக்-பாக்கெட் அடிப்பது உள்ளதையா...உள்ளத்தையா?
மோகன்ஜி:”விரல் நுனி வித்தகன்" நல்ல பேருங்க!
நான் : எவ்வளவு ’ரிஸ்க்’கான தொழில் அது.
’அந்த’ தொழிலுக்கு மரியாதை
கொடுப்பதற்காக சொன்னேன்..ஹி..ஹி..
அது சரி..புது GST actல அதையும் ஒரு
சர்வீஸா சேர்த்து 2010-2011 BUDGET
SESSION ல SERVICE TAX போடப்
போறாங்களாம்!!
நிலாமகள் : 'சமூகத்தின் கிழிசலாய்...', விரல் நுனி வித்தகன் (திருடனுக்கு இப்படியொரு பட்டப் பெயரா?! அட..) ரசித்தேன். சின்ன வயசு விளையாட்டும், நிஜ வாழ்வில் இறை விளையாட்டும் முரண்பட்டுப்போன கதை முடிப்பும் அழகு.
நான் : முதன் முதலா வந்ததற்கு நன்றி!
திருடன் = சமுதாயத்தின் கிழிசல்!
பிச்சைக்காரன் : சமுதாயத்தின் ஒட்டுப்
போட்ட சட்டை !!
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!!
பாலாஜி சரவணா: வாழ்க்கை முரண் :(
நான் : அப்படியா ):
Lakshminarayanan :'விரல் நுனி வித்தகன்' ஆஹா !- கதை நன்றாக உள்ளது. ராஜேஷ், தன பால்ய நண்பனை என்ன செய்தான் என்றறிய ஆவல்.
நான் : தெரியலீங்களே!!!
நச்.
படத்தைப் பாத்துட்டு படபடப்போட படிச்சா...
அப்பாதுரை : நச்.
படத்தைப் பாத்துட்டு படபடப்போட படிச்சா...
நான் : சாரிங்க...உங்களை இங்க இளுக்க
வேற வளி தெரியலீங்களே, எனக்கு!
நன்றாக உள்ளது. அனைவர் கருத்துக்களையும் வழி மொழிகிறேன். விரல் நுனி வித்தகர் என்ற பட்டமளித்து எழுதிய உமது விரல் நுனிக்கு வைர மோதிரம் அணிவிக்கத்தான் ஆசை; ஆட்சி மாறி அதிசயமாக விலை மலிகிறதா என்று பார்ப்போம்.
கீர்த்தனாஞ்சலி அனைத்துக்கும் கருத்துக்கள் அனுப்பி விட்டேன்.
கதை நல்ல ஹ்யூமரஸ்!
வை.கோ:நன்றாக உள்ளது. அனைவர் கருத்துக்களையும் வழி மொழிகிறேன். விரல் நுனி வித்தகர் என்ற பட்டமளித்து எழுதிய உமது விரல் நுனிக்கு வைர மோதிரம் அணிவிக்கத்தான் ஆசை; ஆட்சி மாறி அதிசயமாக விலை மலிகிறதா என்று பார்ப்போம்.
நான் : ஆட்சி மாறுதலை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..ஒரு சுய நலம் தான்..விரல் நுனியை ஆவலுடன் பார்த்துக் கொண்டே....
ஆர்.ஆர்.ஆர்.
கே.பி.ஜனா : கதை நல்ல ஹ்யூமரஸ்!
நான் : THAN 'Q' JANA !
கதை ரொம்ப நல்லாயிருக்கு சார். எல்லாரோட கருத்துரைக்கும் ரொம்ப அழகா பதில் எழுதியிருக்கீங்க.
Post a Comment