Saturday, November 20, 2010

என்னுள் எழுந்த ஏன்கள்????



( கற்றறிந்த பெரியவர்களின் விளக்கத்திற்காக...... )

* மலையை ‘அவனா’கவும், நதியை ‘அவளா’கவும் கூறல் மரபு.பின்
அந்த நதிக்கு மட்டும் பிரம்மபுத்ரா என்கிற பெயர். ஏன்?
* பொய்யான இவ் யாக்கையை மெய் என்று கூறுகிறார்களே, அது ஏன்??
* ’ஐயம் இட்டு உண்’ என்பது முது மொழி. அவ்விடத்தில் ’இட்டு’ என்பது
சற்றே இழி நிலையைக் குறிப்பதல்லவா? ‘ விருந்தினர் போற்றுதும்..’
’அதிதி தேவோ பவ..’ என்று விருந்தினர்களை உயர்வாய் மதிக்கும் போது
அந்த ‘இட்டு’ இங்கு ஏன்???
* ‘ கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்கிறான் கம்பன். அனுமனின்
வாயிலாக ‘கண்டேன் சீதையை’ என்று சுருக்கமான சொன்ன அந்த
’சொல்லின் செல்வன்’ ’கண்டனன்...கண்களால்’ என்கிறானே. கண்களின்
வரவு அங்கு தேவை இல்லையே? அது ஏன்????

13 comments:

எல் கே said...

//ஐயம் இட்டு உண்’ //

இது அன்னதானம் வேண்டி வரும் அடியவருக்கு கொடுத்து உண். (எனக்குத் தெரிந்து)

வல்லிசிம்ஹன் said...

கண்டனன் கண்களால் கற்பினுக்கு அணியை'
என்பது அனுமனின் வாக்கு. ராமனுக்கு சந்தேகம் வரலாமெ. நீ சீதையைத்தான் பார்த்தியா. வேற யாராவதைப் பார்த்துட்டுச் சந்தேகம் வந்தால்
அதான் டபிள் பாசிடிவ் ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார்.

துளசி கோபால் said...

ஆண்கள் நதி ஒதுக்கீடு வேணுமுன்னு கடவுளை வேண்டியதால் ரெண்டு இடம் ஒதுக்கிட்டாராம். ப்ரம்மபுத்ரா & க்ருஷ்ணா

வல்லிசிம்ஹன் said...

ஐயம் இட்டு உண்ணத்தான் வேண்டும்.
உணவைத் தூக்கிக் கொடுப்பது வேறு. இலை போட்டு, உபசாரம் செய்து
உண்ணவைப்பதுதான் ''இட்டு'' என்று நான் நினைக்கிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

http://en.wikipedia.org/wiki/Brahmaputra_River#Mythology

I looked in here. just to satisfy my curiosity. thank you.

ஹ ர ணி said...

அன்புள்ள...

வணக்கம். நதிகளைப் பெயரிட்டு அழைத்தல் மரபு என்றாலும் அதன்பின் இருக்கும் ஒரு புராணத் தொன்மத்தின் அடிப்படையிலேயே அதன் பெயர் அமைகிறது.

2. உயிர் இருப்பதால்தான் அதற்கு மெய் என்று பெயர். உயிரற்றது எனில் அது பொய்தான்.

3. இடுதல்(இட,இட்டு) என்பது இழிச்சொல் அல்ல. வழங்குதல். போடுதல் எனப் பலபொருண்மைகள் உண்டு. சான்றாக சில. பெயரிடுதல்..சோறிடுதல்..நெற்றியில் பொட்டிடுதல..மாலையிடுதல்.. எனவே அது இடம்பொறுத்து பொருள் மாறும். ஔவை சரியே.

3.சீதையைக் கண்டு இராமன் முன்நிற்கும் அனுமன் முதலில் இராமனை வணங்கவில்லை. சீதை இருக்கும் திசை பக்கமே முதலில் வணங்குகிறான். இதை இராமன் உணர்ந்துகொள்கிறான். இருப்பினும் அனுமன் வாயால் அதைக் கூறவேண்டும் சீதை நலமுடனும் கற்புடனும் இருக்கிறாள் என்பதை. அதையுணர்ந்தே அனுமனும் கூறுகிறான். முதலில் கண்டேன் என்றதும் பிறகு அவள் பெயர் கூறாமல் அவள் காத்த கற்பைச் சொல்லியதும் என் கண்களாலேயே கண்டேன் என்றதும் அவள் உடல் உருவம் மாறி இருந்ததால் இராமன் சொல்லிய அடையாளங்கள் மாறிப்போக வாய்ப்புண்டு எனவே என்றும் மாறாத அவள் கண்களைக் கொண்டே அவள் நிலையாவும் அறிந்தேன் என்றும் கூறுவர். எனவே சீதையின் மாறாத கண்களும் அனுமனின் மாறாத கண்களும் இராமன் அறிந்ததல்லவா. எனவே இங்கு கண்கள் மிக முக்கியமான பங்கு வகிப்பவை.

சிந்திக்க வைத்த பதிவு. நன்றி.

ஸ்வர்ணரேக்கா said...

//பொய்யான இவ் யாக்கையை மெய் என்று கூறுகிறார்களே, அது ஏன்//

அடடா... பதில் தெரியலயே...

மற்ற பதில்கள் கேள்விபட்டிருக்கிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

பறவைகளின் அழகான் கூடுகள், சிலந்தி வலை, தேனிக்களின் தேன் கூடு முதலியன, மனிதனை விட, மிகவும் சிறப்பாக, எந்தவித இஞ்சினீரிங் படிப்பும் படிக்காமல் அமைக்கப்படுகின்றனவே ! ஆனால் மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உள்ளதாக சொல்லுகிறார்களே ! ஏன் என்று நான் உங்களைக் கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த போது, பல பேன்களை, மன்னிக்கவும், பல ஏன்களை அனுப்பி மண்டையைச் சொறிய வைத்து விட்டீர்கள்.

ப.கந்தசாமி said...

//கற்றறிந்த பெரியவர்களின்
விளக்கத்திற்காக...... )//

நான் வரலீங்க இந்த ஆட்டத்துக்கு, எனக்கு கொஞ்சம் *** கம்மீங்க.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நதிகளில் பிரம்மபுத்திர மட்டுமே ஆண் நதியாக சொல்லப் பட்டிருக்கிறது.

ரிஷபன் said...

நன்றி ஹரணி..
என்ன ஆர்.ஆர்.ஆர். தெரிஞ்சுகிட்டே கேள்வியா?!

அப்பாதுரை said...

வைகோ சொன்னது ரைடோ.
பிரமபுத்ரா என்பது ஆம்பிளை பெயர்னு நீங்க சொல்லித்தான் தெரியும். அடுத்தது சித்ரா என்பது ஆம்பிளைப்பெயர்னு சொன்னாலும் சொல்வீங்க.

நிலாமகள் said...

தங்கள் அறிவினாக்களும், அவற்றுக்கான ஹரணி ஐயாவின் தெளிவான விடைகளும் சிந்தை கிளர்த்தின. இலக்கிய நுட்பம் சுவைக்கக் கிடைத்தமை மகிழ்வூட்டிற்று.