Friday, November 19, 2010

சாரல்.....


வற்றாத காவிரியைப்
பார்க்கையிலே பரவசம் போல்,
நற்றாமரைக் குளத்தில்,
நறுமணமும் பூத்தது போல்,
கற்றாரைக் காண்கையிலே...
புலமை நம்முள் புகுந்தது போல்,
உற்றாரை உவகைக் கொள்ளும்,
உதவி செய்யும் பாங்கினைப் போல்,
குற்றால அருவி தனில்,
குளிக்குமந்த பரவசத்தை...
முற்றாத தமிழினிலே,
முயலுகின்றேன்...முடியவில்லை !!!!

11 comments:

நர்சிம் said...

நன்று

ரிஷபன் said...

சொற்றாமரைக் குளத்தில் நீந்திய அனுபவம்..

Rekha raghavan said...

சின்ன கவிதை.பெரிய கருத்து. அருமை.

ADHI VENKAT said...

அழகான கவிதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

முற்றாத(தமிழ்) = கன்னி(த்தமிழ்)

//முயலுகின்றேன் முடியவில்லை//

வயதாகிவிட்டதல்லவா தங்களுக்கு
கன்னியல்லவா அவள்
எப்படி முடியும்?

இருப்பினும் முயன்று இயற்றியுள்ள
அழகான தங்கள் கவிதை அருமை

வெங்கட் நாகராஜ் said...

கவிதை அருவி நன்று. நன்றி.

RVS said...

தமிழருவியில் நனைந்தேன். நன்றி ;-)

மனோ சாமிநாதன் said...

இனிமையான கவிதை!
தங்களின் குறிப்பைப் பார்த்த பின் திரு.அனந்த நாராயணனின் ஓவியங்களைப் பார்த்து ரசித்தேன். எல்லாமே அருமை! அவரின் வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு அன்பு நன்றி!!

Thenammai Lakshmanan said...

கற்றாரைக் காண்கையிலே...
புலமை நம்முள் புகுந்தது போல்// அருமை ஆர் ஆர் ஆர்

அப்பாதுரை said...

ரசித்தேன்

அப்பாதுரை said...

இன்னும் ரசித்தேன்
>>>சொற்றாமரைக் குளத்தில் நீந்திய அனுபவம்