
இங்கு இருப்பவர்களை விட,
இல்லாதவர்கள் தான்
தான் அதிகம் பேர்
இருக்கிறார்கள்!
சிவிகையில் பயணிப்பவரை
விட சிவிகைதூக்கிகளே
அதிகம்!
இருப்பவர்கள் தன் இருப்பைக்
காப்பாற்றிக் கொள்வதை விட,
இல்லாதவர்கள்,
இருப்பவர்கள் சொத்தை,
பகிர்ந்து கொள்ளத்
துடிக்கிறார்கள்!
ஆண்டவா......
முடிந்தால் என்னைப்
பணக்காரனாக்கு...
முடியவில்லையா..?
அட்லீஸ்ட்,
என் பக்கத்து வீட்டுக் காரரை,
என்னை விட,
ஏழையாக்கி விடு !!!!!
என்னுரை : பக்கத்து சீட், பக்கத்து பெஞ்ச்,பக்கத்து வீடு என்று compare பண்ணியே, நம் வாழ்க்கை தட்டாமாலை சுற்றுவது போல் ஆகி விட்டது. இதையே பொருளாதார வல்லுனர்கள் ' DEMONSTRATION EFFECT' என்பர். விலைவாசி உயர்வு, inflation க்கு இதுவே காரணமாம் !!
8 comments:
நல்ல எண்ணம். வளர்க!
பக்கத்து ப்லாக் சேர்த்துக்கலியா ...... ஹி,ஹி,ஹி....
ஆமா ராமமூர்த்தி சித்ரா சொன்னதுபோல பக்கத்து ப்ளாக்கை சேர்த்துக்கலியே...:)))
//ஆண்டவா......
முடிந்தால் என்னைப்
பணக்காரனாக்கு...
முடியவில்லையா..?
அட்லீஸ்ட்,
என் பக்கத்து வீட்டுக் காரரை,
என்னை விட,
ஏழையாக்கி விடு !!!!//
இப்படி தான் உள்ளது இன்றைய உலகம், நல்ல பதிவு நண்பரே உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பக்கத்து சீட், பக்கத்து பெஞ்ச்,பக்கத்து வீடு என்ற இடத்தில் 'பக்கத்து blog' என்று சேர்த்துப் படித்துக் கொள்ளவும். தவறுக்கு வருந்துகிறேன் !!
unkaLin Demostration effect Uyarvaakave therikiRathu (Vilaivaasi pola)
இன்றைய உலக நீரோட்டம்...........
நன்றாய் புரிந்திருக்கிறீங்க..............
நன்று.......
வசதியிருந்தால் நம்ம பக்கமும் வரலாம்தானே..........
பக்கத்து ப்லாக் சேர்த்துக்கலியா ...... ஹி,ஹி,ஹி....
நல்ல வேளை சேர்த்துக்கல..
Post a Comment