
எதிலுமே......
ஒளிவு, மறைவு
இல்லா
கவர்ச்சி நடிகை
ஜிகினாஸ்ரீ
வீட்டில்
ஐ.டி. ரெய்ட்..
சிக்கியது,
மறைத்து
வைக்கப் பட்ட
கறுப்புப் பணம்!!!!
*********************
தண்டச் சோறு,
வெட்டிப் பயல்
என்று,
பெற்றோர்
ஒதுக்கி வைத்த
பிள்ளைக்கு,
வேலை கிடைத்தது,
முதியோர் இல்லக்
காப்பாளராக !!!!
**********************
பசுமையான
வயல்களை,
அழித்து...
புதிதாய் நகர்
ஒன்று
எழுந்தது..
'வாடிய பயிர்
கண்டு வாடினேன்'
என்று பாடிய
வள்ளலார் பெயரில்..!!!!
***************************
7 comments:
முச்சுவை.. கனிச்சுவை..
// 'வாடிய பயிர்
கண்டு வாடினேன்'
என்று பாடிய
வள்ளலார் பெயரில்..!!!//
கலக்கல் அண்ணே.
ஒளிவு மறைவில்லாதவர் முதல் முற்றும் துறந்த வள்ளலார் வரை அருட்பாக்கள் மூன்றுமே அருமை.
கவிதை அற்புதம். வாழ்த்துக்கள்
நல்லா இருக்குங்க. கருத்துக்களுடன் அருமையான கவிதைகள்.
கவிதை அற்புதம் நல்ல கருத்து
அருமையான கவிதைகள்....வாழ்த்துக்கள்!!!
Post a Comment