ஒரு நாள் யாரோ
என்ன பாடம் சொல்லித் தந்தாரோ......
============================================================
SKULL லினை இழந்தவன் தன் இன்னுயிர் இழந்ததது போல்,
FULL லிலே விழுந்தவன் சுயப்ரக்ஞையை இழந்தது போல்,
பல்லினை இழந்தவன் தன் சொல்லிழந்து போனது போல்,
செல்லினை இழந்து இங்கு செயலிழந்து போனேனே!
ப்ளாஷ் பேக்
"ஒரு நாள் கூட இந்த மாதிரி ஆனதில்லை சார்"
என்று நான் பெருமூச்சு விட...
"பாவம் சார் நீங்க..போயும் போயும் உங்களுக்குப்
போய் இப்படியா?" என்று
ஒவ்வாருத்தனாய் பச்சாதாபப்பட...
பத்து சிவாஜி
படங்களை ஒருமிக்க பார்த்தது போல் துக்கம் தொண்டையை அடைக்க..
குட்டி சுவர்
ஒன்று கிடைத்தால் குலுங்கி குலுங்கி அழுது விடுவது போல ஒரு ஆத்திரம் வந்து
தொலைக்க...
எல்லாரும் என்னை
பார்த்துக் கொண்டே செல்லில் பேசுவது போல ஒரு ப்ரமை தட்ட….
இதில ஃப்ரெண்ட்
ஒருத்தன் என் வயற்றெரிச்சலை கொட்டிக் கொள்வது போல யாரும் எனக்கு செல் கொடுத்து
உதவக் கூடாது என்று 144 போட்டு விட..
மாஞ்சு மாஞ்சு ஸ்டேடஸ்
லைக் கமெண்ட் என்று என்னை குலவை போட,
'எப்படா சாயங்காலம்
ஆகும்' என்று வழி மேல் விழி வைத்து பார்த்து தொலைக்க…
அந்த கார்பப்ரேஷன் பஸ்ஸோ ஒவ்வொரு கிலோ மீட்டரையும்
ஒவ்வொரு மணி நேரத்தில் கடக்க...
ஒரு வழியாய் என்
ஸ்டாப் வந்து.....ஆட்டோ பிடித்து வீடு வந்து
அரக்க பரக்க ஹாலில்
இருந்த செல்லை கட்டிக் கொண்டு அரைக்கால் மணி நேரம்
அழுதேன்!