Wednesday, October 31, 2012

எழுத்து ஒரு தவம்



   
. எழுத்து ஒரு வலிமையான ஆயுதம். அதை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் .கூரிய வாளிற்காவது இரண்டு பக்க முனைகளில் தான் ஆபத்து ..
ஆனால் எழுதுகின்ற எழுத்துக்களுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் ஆபத்து வரும்...வரலாம். 
       நகைச்சுவையாக பேசுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம் ..நகைச்சுவையாகப் பேசுகிறோம் என்று யார் மனத்தையும் காயப் படுத்தி விடக் கூடாது.அதற்கு அந்த மாதிரி பேசுகிறவனுக்கு எந்த வித மான தார்மீக
உரிமையும் கிடையாது . .அது போலத் தான் எழுதுவதும். இது ஒரு வேள்வி .
இதனால் பயன் தான் கிடைக்க வேண்டும் எல்லாருக்கும்.
      எழுதுவதில் ஒரு  சிரத்தை இருக்க வேண்டும் எழுதுகிறவனிடத்தில்!
இங்கு நாம் எழுதுவது யாராவது ஒருவருக்காவது  பலன் அளிக்க வேண்டும் ..ஆயிரத்தில் ஒருவராவது நம் எழுத்தில் பலனடைந்தால் அந்த எழுத்தாளனுக்கு அதை விட வேறு மகிழ்ச்சி கிடையாது . உதாரணமாக,
குடியினால், தன் குடும்பத்தையே வீதிக்குக் கொண்டு வந்த ஒருவன் ஒரு எழுத்தாளனிடம் " சார் உங்க எழுத்து என் கண்ணத் திறந்து விட்டது . நானும் பாழும் கிணற்றிலிருந்து மீண்டு விட்டேன் ..இனி என் மனைவி, மக்கள் தான் என் உலகம் ..இனி ஒழுங்காய் இருப்பேன் சார் " என்று சொன்னால் அந்த எழுத்தாளனுக்கு ஞான பீட விருதினை விட ..ஒரு சாகித்ய அகாடமி விருதை விட ..இதுவன்றோ ஒரு பெரிய விருதாக இருக்க  முடியும்!
     எல்லா ப்ரோபஷனல்களையும் விட எழுத்தை தொழிலாக வைத்துக் கொள் பவனுக்கு  ETHICS அதிகமாக இருந்தால் தான் அந்த எழுத்தாளன் வாழ்கின்ற சமுதாயம் ஒரு மேன்பட்ட ..ஒரு நாகரீகமான சமுதாயமாக இருக்க முடியும்
என்பதை நம்புகிறவன் நான் ..
    கடைசியாக  ஒரு வார்த்தை ..
    உங்கள் எழுத்தினை உங்கள் மனைவி மற்றும் உங்கள் பெண்கள் படித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்கிற எண்ணம் உங்களுக்கு இருந்தால் போதும் ..
உங்கள் எழுத்தில் மெருகு தானாக் கூடி விடும் !
    நீங்களும் உங்களுக்குத் தெரியாமலேயே ஒரு சமுதாய சிற்பி ஆகி விடுவீர்கள் !!
     வாஸ்தவமாகவே !!!    
              

Monday, October 15, 2012

ஹல்லோ..................

அனைவருக்கும் ஒரு நற்செய்தி!

நான் 15.10.2012 முதல் ஒரு வாரத்திற்கு வலைச்சரம் மின் இதழிற்கு ஆசிரியர்
பொறுப்பு ஏற்றுக் கொண்டதால், நம் பிலாக்கிற்கு ஒரு வாரம் விடுப்பு கொடுக்கப் பட்டுள்ளது..
      இந்த வாரம் அனைவரும் என் தொல்லையிலிருந்து விடுபட்டு
சந்தோஷமாய் இருக்கவும்..
       மறுபடியும் கூறுகிறேன்...
        உங்களின்
       இந்த சந்தோஷம்
       ஒ
       ரு
     வா
         ர
        ம்
        தா..........................................................................................................................ன்!
     

Saturday, October 13, 2012

வெண்பா அல்ல மின் பா!



’இருட்டில் வருவது யாரென’க் கேட்டேன்,
’திருட்டுப் பயல்’ எனத் திமிராய் சொன்னான்.
’திரட்டுப் பால் தினம் ஏதெ’னக் கேட்டேன்,
’திரிந்து போன பாலிது’ என்றாள்.
ஓரெட்டு மணித் துளி அரசு அறிவிப்பு..
ஈரெட்டு நேரமும் இருட்டிலே வாழ்க்கை!
’மாண்டவன் திடலில் காத்திருக்கும் கோரம்..
ஆண்டவனே ஏனிந்த அவலம்?’ என்றேன்
ஆண்டவன் சற்று அருகில் வரவே,
ஆயிரம் மெகா வாட் பவர் தனைக் கேட்டேன்.
’ஐம்பது பர்செண்ட் பவர் கட் எனக்கும்!’
அர்த்த நாரியான ஈஸ்வரன் சொன்னான்!!

Wednesday, October 10, 2012

கோவில் இல்லா ஊரில்.....

ரிடையர்ட்மெண்ட் பணம் லம்ப்பாக வந்திருந்தது ராமாமிர்தத்திற்கு...
அவரின் கனவு நனவாகும் நாள் இது..
ரொம்ப நாட்களாகவே அவருக்கு ஒரு  ஆசை .....பிள்ளைகள் வளர்ப்பு..படிப்பு..என்று அவருடைய முப்பது வருட சர்வீஸும் அதில்  போய் விட, இப்போது தான் அந்த ஆசை மறுபடியும் துளிர் விட ஆரம்பித்தது..
பிள்ளைகள் எல்லாம் தலையெடுத்து நல்ல வேலைகளுக்குப் போய் விட்டார்கள்..’உன் பணத்தை நீயே வைத்துக் கொள் ’என்று பச்சைக் கொடியும் காட்டி விட,தன் மனைவி சிவகாமியிடம் தன் ஆசையை தயங்கி..தயங்கித் தெரிவித்தார்.
    அவளுக்கும் தன்னைப் போல அப்படி ஒரு  ஆசை இருந்திருக்கிறது என்பது இத்தனை வருட தாம்பத்யத்தில் இப்போது தான் தெரிந்து கொண்டது அவருள்
உறங்கிக் கிடந்த மனசாட்சியை  உறுத்த, அவள் ஆசைப் படியே செயல் பட தீர்மானித்தார்.
    மொத்தம் முப்பதைந்து லட்சம் வந்திருக்கிறது.இதைத் தவிர மாசம் சுளையாக இருபதாயிரம் ரூபாய் பென்ஷன் !
     இரண்டு பேர்களுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும்? மருத்துவ வசதி வேறு அவர் வேலை செய்த ஆஃபீசிலேயே கொடுத்து விட்டார்கள்..அதனால்
தைர்யமாய் முடிவெடுக்கலாம் என்று மனத்துள் எக்கச் சக்கமாய் உற்சாகம் கரை புரள ......
   விளம்பரங்களை பார்த்தார்...புரோக்கர்களைப் பார்த்தார்....
சிவகாமி பிடிவாதமாய் சொல்லி விட்டாள்..அவளுக்கு டபுள் பெட் ரூம்ஃப்ளாட் தான் வேண்டுமாம்..அதுவும் கோவிலுக்கு பக்கத்தில்!
   இந்த கண்டிஷன்கள் தான் பயங்கரமாய் இடித்தது..
   டபுள் பெட்ரூம் பிளாட் அதுவும் கோவிலுக்கு அருகில் என்பது எட்டாக் கனியாக இருந்தது...
   எல்லாம் சேர்த்து ஐம்பதுக்கு மேல் ஆகிறது...
   சிவகாமியிடம் சொல்லிப் பார்த்தார்...
   “இதோ பாரும்மா.. நல்லா விசாரிச்சுட்டேன்...ஐம்பத்தைந்துக்கு  ஒரு பைசா கூட யாரும் குறைக்க மாட்டேங்கிறாங்க.. நம்ம கிட்ட எல்லாம் சேர்த்தாலும் ....  முப்பது...முப்பத்தைந்து ... தானே இருக்கு..
என்ன பண்றது?”
   “அதுக்கும் ஒரு  வழி இருக்குங்க.. நம்ம பக்கத்து வீட்டு பார்வதி மாமியோட வீட்டுக் காரர் பேங்க்ல தானே இருக்கார்..”
   “ ஆமா..அதுக்கென்ன?”
   “ அவர் கடன் தரேன்னார்”
   “பென்ஷனருக்கு யாரும்மா கடன் தருவாங்க..’
   “அந்த கவலை உங்களுக்கு எதுக்கு?”
   “அதை எப்படி அடைக்கிறது?”
   “ இருபது லட்சம் பத்து வருட கடனாத் தராங்க..மாசாமாசம் இருபதாயிரம் கட்டினா போறுமாம்..’
   “ அப்ப புவ்வாவுக்கு..?”
   “ அதான் கோவில் இருக்கே..காஃபி,டிஃபன், சாப்பாடுன்னு மூணு வேளையும் அங்கேயே சாப்பிடலாமாம்...ப்ளாட்ல இருக்கிறவங்க எல்லாரும் அப்படித் தான் பண்றாங்களாம்..பிளாட் விக்கிறவங்களும் சாப்பாட்டு செலவு இவங்களுக்கு மிச்சப் படறதுன்னு தான் இந்த விலை ஏத்திட்டாங்களாம் இங்க  இருக்கிற பிளாட்டுங்களுக்கு!”
         அந்த கோவிலில் உள்ள யானை தலை ஆட்டுவதைப் போல் சரியென்று    தலை ஆட்டினார் ராமாமிர்தம்!
           வேறு வழி ?..        .