நீ............ள்........பதிவு நெ.1
வீடு நீங்கும் படலம் ரொம்ப நாளாகி விட்டது, எல்லாருமாய் டூர் போய் என்று நினைத்துக் கொண்டோம். பேசிக் கொண்டிருக்கும் போதே, என் பெண் யாருக்கோ ஃபோன் பண்ணினாள். அங்கிருந்து இரண்டு தடவை ஃபோன் வந்தது!
'என்னப்பா...போலாமா'
நான் பதில் சொல்வதற்குள், ஒரு ஃபோன் வர,
இப்படித் தான் 'க்ளிக்'காகியது, எங்கள் இனிய பயணம்.
என் குடும்பம்(நால்வர்), நண்பர் சுப்ரமணியம் குடும்பம் (மூவர்)(பேசிக்கொண்டே வந்ததில் இவர் எனக்கு உறவுக்காரர் என்பது பிறகு தெரிந்தது)
நண்பர் மோஹன் குடும்பம் (நால்வர்) என்று மொத்தம் 11 பேர் கிளம்புவதாகப் ப்ளான்!
அந்த 11 பேரும் இதோ உங்கள் முன்!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEittc0OEhyphenhyphenybUuxnbsKOH7yLkPBgyeewrENRr8cNV4wOJATTF4HVWrbvp-UPKOo6bV7Ernc75ssMgTsbQx0N3bWtzU4AtyfvaGl3X-idnyhnOyrfuZa-VAVoPXHvxTvQI6ygY8hvsHKD1E/s320/DSC00140.JPG)
நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த இனிய ஞாயிறும் வந்தது. எனக்குத் தான் கடைசி வரை ஊர் வேலை! டூர் போகும் மூடே வராமல், மசமசவென்று இருந்தேன்! ஒருவாறு, குளித்து முடித்து, துணிகளை 'அயர்ன்' செய்து கொண்டிருக்கும் போது, அம்மா 'எல்லாரும் பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு' என்று ஒரு காட்டுக்கூச்சல்! அரக்க,பரக்க ஏதோ வயிற்றிலும், வாயிலும் அடைத்துக் கொண்டு அடுத்த ஐந்தாம் நிமிடம் நாங்களும் ரெடியாகி, வாசலில் தயாராய் நின்றிருந்த ஆட்டோவில் பிரித்விராஜ் சௌஹான் ராணி ஸம்யுக்தையை தூக்கிக் கொள்வது போல் ஆளுக்கொரு லக்கேஜைத் தூக்கிக் கொண்டு பறந்தோம்!
அடுத்த அரை மணியில் பஸ் ஸ்டாப்!
எங்கள் பஸ் ஸ்டாப்பில் நாங்கள் வெயிட் பண்ண, மறுபடியும் ஒரு ஃபோன்!
' நீல நிற அரசுப் பேருந்து, இதோ உங்கள் முன்' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, இரண்டு ஜோடி கரங்கள் நட்புடன் கை ஆட்ட, பஸ்சினுள் ஏறினோம்!
எனக்குத் தான் உள்ளூர ஒரு குடைச்சல்! அவசரத்தில் ஏதாவது மறந்து வைத்து விட்டு வந்து விட்டோமோ என்று!
முழுதாய் நான்கு மணி நேரத்தை சாப்பிட்டுவிட்டு, ஈரோடு வந்தது. ஜங்ஷன் ஸ்டாப்பில் எல்லாரும் இறங்க, நான் ரொம்பவும் ஜாக்கிரதையாய் நடந்து கொள்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, இன்னொருத்தர் சூட்கஸையும் எடுக்க..அவர் அலற ..செம காமெடி!
இந்த சம்பவத்தினால் எதையோ மறந்து வைத்து விட்டு கிளம்பினோமோ என்ற குடைச்சல் போயிந்தி!
அப்பாடா..ஒரு வழியாய் ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சு!!
அது சரி, நீங்க சொல்ல வந்த விஷயத்திற்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? அடுத்த பதிவில் சொல்கிறேனே..