" இப்ப என்ன பண்றது?"
"அது தான் என் கேள்வியும் !"
"யாராவது ஒருத்தர் வீட்டிலாவது, பச்சை கொடி காட்டினா
கொஞ்சமாவது சந்தோஷமாக இருக்கும் ..இப்படி ரெண்டு
பேர் வீட்டிலுமா எதிர்ப்பார்ங்க ?"
" உனக்காவது பரவாயில்ல ..என்னை, நீ கம்ப்யூட்டர் கத்துக் கிட்டது
போதும்...பேசாம வீட்டில இருன்னு சொல்லிட்டாங்க "
"கவலை விட்டது "
"என்ன கவலை விட்டது? உனக்கு எப்ப தான் விளையாடறதுன்னு ஒரு
விவஸ்தை இல்லையா?"
"சாரிடா"
"சரி என்ன தான் முடிவு ?"
"இதோ பாரு .நம்மை பெற்றவங்க எல்லாருமே வாழ்ந்து விட்டவங்க ..
இனிமே வாழப் போறவங்க நாம் தான் ...முடிவு எடுக்க வேண்டியவங்க
நாம தான்.."
"என்ன தான் முடிவு ?"
"கோச்சுக்க மாட்டியே ..."
"சொல்லு"
"இதை விட்டா வேற வழியும் எனக்கு தெரியலே"
"பீடிகை போடாம சொல்லு "
"ஒண்ணுமில்ல .. நாம ரெண்டு பேரும் சொல்லாம, கொள்ளாம சென்னை
கிளம்பறோம் .."
"அச்சச்சோ "
"பயப்படாதே ....நாம நிச்சயம் நல்ல நிலைமைக்கு வருவோம் ..அப்ப நம்ம
இருப்பை அவங்க கிட்ட தெரியப் படுத்துவோம் .நம்ம மேல இருந்த கோபம் அப்ப குறைஞ்சு போயிடும் ..நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சிருக்கிற பரஸ்பர
நம்பிக்கையும், அன்பும் நம்ம எல்லாரையும் ஒண்ணு சேர்த்திடும் ...நீ செய்ய வேண்டிய
தெல்லாம் ஒண்ணு தான் ..'
"என்ன?"
"நீ உன் கையில் உள்ளது, கழுத்தில் உள்ள செயின் எல்லாவற்றையும்
வீட்டில் வைத்து விடு ....பணத்திற்காக நான் உன்னை விரும்பவில்லை என்பது
உன் வீட்டு மனிதர்களுக்கு தெரிய வேண்டும்..'
"சரி.."
" இந்த பரந்த உலகில் நான் படித்த படிப்பிற்கு ஒரு சின்ன வேலை கூட கிடைக்காமலா போய் விடும்? எனக்கு, உன்னை கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன் நான் ..நீ, எனக்கு கட்டிய வேட்டியுடன் மட்டும்
வந்தால் போதும் !"