
விவிலிய நூல்
கூற்றுப்படி,
அவள்
ஆணின் விலா
எலும்பிலிருந்து,
உருவான ஜீவன்
ஆனால்....
நம்முடன்
பயணிக்கும் போது....
ஆறாவது வயது.
பயத்துடன்,
கையால்,
காதைப்
பிடித்துக் கொண்டு
பேசினேன்......
'அவளுடன் பேசினால்,
காது அறுந்து விடுமாம்'
என்று அந்த வயது,
பயமுறுத்தல்கள்....
இருபதாவது வயதில்,
பார்க்கையில்,
ஒரு குறுகுறுப்பு!
அதுவே....
இருபத்தைந்தில்,
அப்பா ரிடய்ர்டாகி,
முடங்கிக் கிடக்க..
இந்த வேலை தான்
என் வாழ்வாதாரம்!!
ஆனால் ஒரு
பவுடர், ஸ்னௌக்காக,
தட்டிப் பறித்து,
விடுவாளோ?
அவளைக் கண்டவுடன்,
பயம் கலந்த வெறுப்பு!
இருபத்தியெட்டில்,
வேலைக்குப் போகும்..
இவள் கிடைத்தால்,
கொஞ்சம் சௌகர்யமாய்,
வாழ்வோமே என்கிற,
எதிர்பார்ப்பு !
முப்பத்தெட்டில்,
முதல் முதலாய்,
சிகரெட் குடித்து,
வீடு திரும்ப,
முகத்திலும்,கண்ணிலும்
புகை..கமறல்...
'என்ன எழவு இது'
என்று அவள்,
பார்த்த பார்வையில்,
பயம் கலந்த படபடப்பு !!
நாற்பத்தெட்டில்,
'என்ன வேலை வாங்குகிறாள்
இவள்..பசங்க அட்மிஷனுக்கு..
அலைய விடுகிறாளே....'
அவளைப்
பார்க்கையிலே ஒரு சலிப்பு!
அறுபத்தெட்டில்..
'பால் வாங்கிண்டு
வந்தால் தான் காஃபி..'
தீர்க்கமாய் சொன்னவளைப்
பார்க்கையிலே...
கையால் ஆகாத கோபம்!
WIDOW வை விட,
WIDOWER இங்கு,
COMPROMISE செய்து,
வாழ்வது கடினம்
என்கிற யதார்த்தம்
எண்பதில் சுட,
'இதுகள்ட்ட
ஒண்ணுமே தெரியாத,
என்னை
மாட்டி விட்டுட்டு
மஞ்சள்,குங்குமத்தோட,
போயிடாதேடீ'
கண்களில் பயத்துடன்
மன்றாடல்...
யார் சொன்னது...
அவளை WEAKER SEX என்று??
இந்த சமுதாயத்தில்
'அவன்' அல்லவோ
WEAKER SEX !!!!!!!!
8 comments:
அருமை. வாழ்த்துக்கள்.எப்படி இப்படி சிந்திக்கிறீர்கள்!
யார் சொன்னது...
அவளை WEAKER SEX என்று??
இந்த சமுதாயத்தில்
'அவன்' அல்லவோ
......... :-)
இந்த எண்ணங்களை கட்டுரையாக எழுத வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.
பள்ளிகளில் இருந்து வேலை செய்யும் இடங்கள் வரை பெண்களுக்கு சலுகைகள் கொடுத்தே சமூகம் வளர்க்கின்றது. ஆண்கள் தான் இப்போது அல்லல் படுகின்றார்கள்.
ஆண் பாவம்!!
நம் ஆண் இனத்திற்கு ஏற்பட்ட/ஏற்பட்டுவரும்/ஏற்படக்கூடிய அல்லல்களையும், அவதிகளையும், வயதுவாரியாக விலாவரியாக புட்டுப்புட்டு வைத்து விட்டீர்கள் ஐயா. இவ்வாறெல்லாம் எழுத உம்மை அனுமதித்துள்ள, உங்கள் திருமதி இவையெல்லாம் படித்துப்பார்ப்பதுண்டா?
ஸ்ட்ராங் கவிதை!
20 வரிக் கவிதையில பிரமாதமா சொல்லிட்டீங்க ராம மூர்த்தி அருமை
உடலில் மென்மை உள்ளத்தில் வலிமை - இதுவே பெண்மை
அழகான கவிதை
தூள்... சக்தி இல்லையேல் சிவம் இல்லை
Post a Comment