Saturday, April 27, 2013

TO LET!


"இன்னும் ஒரு மாசத்துல வீட்டை காலி பண்றேன்”
“சரி...எப்ப சொல்றீங்களோ அப்ப அட்வான்ஸ் தந்துடறேன்”
எனக்கும், எங்க வீட்டுக் காரருக்கும் (சாரி HOUSE OWNER க்கும்) நடந்த உரையாடல் இது..
இந்த B 305 இரண்டாவது மாடி! அதற்கு மேல் மொட்டை மாடி..அதனால் வெயில் ஏகத்துக்கு அடிக்கும் ..”கூல் பெயிண்ட் அடிச்சுத் தாங்க” என்று சொல்லிப் பார்த்தாகி விட்டது..மனுஷன் கூசாம மாசம் சுளையா எட்டாயிரம் ரூபாய் வாடகை வாங்குகிறார்..ஒரு சின்ன செளகர்யம் கூட செய்து தர மாட்டேன் என்கிறார்.செளகர்யபடா விட்டால் வீட்டை காலி செய்து கொள்ளுங்கள்..எனக்கு பத்தாயிரம் ரூபாய் வாடகைக்கு ஆள் இருக்கிறது என்று சொல்கிறார்.
பொறுத்துப் பொறுத்து பார்த்து, அது முடியாமல் போனதால் தான் மேல் கண்ட டயலாக் ஒரு நாள் நடந்தது..
“ என்ன சார்..வீடு மாற்றப் போறீங்களாமே..”
“ ஆமாம் சார்”
“ ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை போல பழகினோம்..இப்ப நீங்க வீட்டை காலி பண்ணப் போறீங்க.. நினைச்சாலே கஷ்டமா இருக்கு..
சார் ..ஒரு சின்ன ஹெல்ப்.. நீங்க வீடு பார்க்கும் போது எனக்கும் சேர்த்துப் பாருங்களேன்.. நீங்க இல்லாம எங்களுக்கும் போர் அடிக்கும்”
எனக்கோ ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த B 304 எனக்கு எதிர்த்த வீடு.அவர் வந்து ஆறு வருடங்களாகிறது..இது வரை ஒரு தடவை கூட என்னுடன் பேசியதே இல்லை..மூன்று நாட்களுக்கு ஒரு முறை , முருங்கைக் காய் சீப்பாக கிடைக்கிறதென்று ஆண்டார் வீதி சின்ன மார்க்கெட்டிலிருந்து வாங்கி வரும் ஆசாமி, எதிர்த்தாற்போல் நான் வரும் போது ஒரு நாள் கூட பேசியது கிடையாது..ஏன் தெரிந்தவர் என்கிற பாவனையில் ஒரு அசட்டு சிரிப்பு கூட கிடையாது..
இப்போது என்னவென்றால்...இந்த பேச்சு பேசுகிறார்..என்ன ஒரு ஆச்சர்யம்!
அதை விட ஆச்சர்யம் என்னவென்றால், என்னைப் பார்க்கும் போதெல்லாம் இப்போதெல்லாம் ஏதாவது பேசுகிறார்...சீனா ஊடுருவல் வரை கூட இரண்டு பேரும் பேசியாகி விட்டது... கடைசியில் “வீடு கிடைச்சாச்சா” என்று தான் எங்கள் உரையாடல் முடியும்!
இப்படியாக ஒரு மாதம் ஓடியே விட்டது..எனக்கும் வீடு கிடைத்த பாடில்லை...எங்கு விசாரித்தாலும் எக்கச் சக்கமாய் வாடகை!
ஒரு நாள் வீட்டுக் காரரைப் பார்த்து சொன்னேன்:
“ சார் ... நான் வீடு காலி பண்ண வில்லை”
“ ரொம்ப சரி.. தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பேயே மேல்!..நீங்களே இருங்க...” என்று அவரும் பெரிய மனசு பண்ணி சொல்லி விட்டார்..
பிறகு தான் தெரிந்தது அந்த பத்தாயிரம் ரூபாய் வாடகை தருவதாக சொன்னவர் வீட்டில் அரை டசனுக்கு மேலே உருப்படிகளாம்!
எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது ..
ஒன்றைத் தவிர!
அது, மூன்று நாட்களுக்கு ஒரு முறை , முருங்கைக் காய் சீப்பாக கிடைக்கிறதென்று ஆண்டார் வீதி சின்ன மார்க்கெட்டிலிருந்து வாங்கி வரும் அந்த B 304 , எதிர்த்தாற்போல் நான் வரும் போது இப்பொழுதெல்லாம் ஒரு நாள் கூட பேசுவது கிடையாது..ஏன் தெரிந்தவர் என்கிற பாவனையில் ஒரு அசட்டு சிரிப்பு கூட கிடையாது..
நான் நினைக்கிறேன்...
நான் வீடு காலி பண்ண வில்லை என்கிற விஷயம் அவர் காதுகளுக்கும் எட்டி இருக்க வேண்டும்!

11 comments:

கௌதமன் said...

நீங்க வீடு காலி பண்ணியிருந்தா முன்னூத்து நாலு, அங்கே அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவரை கொண்டு வந்து குடியேற்றி இருப்பார். வீடு கிடைத்துவிட்டது என்று நீங்க வந்து சொல்லவேண்டும் என்று அவரு கொக்கி மாட்டி வைத்திருக்கின்றார். நீங்க முழிச்சிகிட்டீங்கனு தெரிஞ்சதும், நழுவி போறாரு!

sury siva said...



வூடு காலிப்பண்ணப்போறீகளா ?

எங்கிட்டே சொல்லவேணாமா ?
எங்க ஊடு இருக்கே...
அதுலே ஜாம் ஜாம்னு
புத்ர பௌத்ராதிர்களோட‌
கொட்டம் அடிச்சுண்டு

பார்யாளோட அப்பப்ப ச்ண்டை போடறதுக்கும்
சௌகர்யமா
யாரும் பார்க்காம
தனியா ஒரு வூட்டுலே
ஹனி மூன் கொண்டாடுலாமே !!

வூட்டு வாடகையும் அய்யயோ ?
அம்புட்டு வேண்டாம்.
பாதி கொடுங்கோ..
போதும் என்ற மனமே
பொன் செய்யும் இரும்பு.

அட்வான்சா !
எதுக்கு ஸார் இதெல்லாம்.
உங்க அன்பு ஒண்ணெ போதும் ஸார்.

வூடு நட்ட நடு ஷகர்லே தான் இருக்குது
3500 ச்.அடி. தோட்டம் துரவு எல்லாம் கீது.
கிணத்துலே தண்ணி எப்பவும் கீது.
இறைச்சு ஊத்த பம்ப் செட் பக்கத்துலே கீது.

தென்ன மரம் இருக்குது.
பன மரமும் இருக்குது. பலாக்காயும் தொங்குது.
வில்வ மர பக்கத்துலே பவளமரம் பூத்திருக்கு
நந்திக்கு பூசை செய்ய நந்தியாவட்டை இருக்கு.
காம்பவுண்டு கேட்டுக்குள்ளே புள்ளையார் கோவிலிருக்கு
புள்ளையாருக்கு பூசை செய்ய சங்கு புஸ்பம் அங்கிருங்கு.
வெறுங்கையா வந்தவனுக்கு முருங்கையும் தொங்குது.
வெப்பம் தணித்திடவே வேப்ப மரம் இருக்குது.
நெல்லியும் இருக்குது. பசுமாடு சாப்பிடவே அகத்திக்கீரையும் கிது.
கொய்யா இருக்கு எலுமிச்சை இருக்குது.
அடிச்சு அடிச்சு திங்க ஒரு மாங்காயும் மேல இருக்கு.
வடுமாங்காய், ஒட்டு மாங்காய், நீல மாங்காய்,
அரிசி மாங்காய் சாப்பிடவே அம்புட்டு சனம் வருது.
கண்டபேரு காணாத போதெல்லாம்
பறிச்சுண்டு போக ஒரு
கருகப்பிலை மரம் இருக்குது.

எங்கனவா ?
தஞ்சையிலே....
பெரிய கோவில் அருகிலே....

வோணும்னா சொல்லுங்க..
ஓடி வந்து தந்துடறேன்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
www.vazhvuneri.blogspot.com

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“ ரொம்ப சரி.. தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பேயே மேல்!..நீங்களே இருங்க...” என்று அவரும் பெரிய மனசு பண்ணி சொல்லி விட்டார்..//

ஆஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! ;)
கரெக்டூஊஊஊஊஊஊஊஊஊ.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மூன்று நாட்களுக்கு ஒரு முறை , முருங்கைக் காய் சீப்பாக கிடைக்கிறதென்று ஆண்டார் வீதி சின்ன மார்க்கெட்டிலிருந்து வாங்கி வரும் அந்த B 304 //

இப்போது ஆண்டாட் வீதியிலேயே ஒரு முரட்டு முருங்கைக்காய் ரூ.10 என விற்கப்படுகிறது.

ஆனாலும் சதைப்பத்தாக, சுமார் மூன்று அடி நீளத்துக்கு உள்ளது.;)

10-12 துண்டங்கள் போடலாம்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“ ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை போல பழகினோம்..இப்ப நீங்க வீட்டை காலி பண்ணப் போறீங்க.. நினைச்சாலே கஷ்டமா இருக்கு..//

//எனக்கோ ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த B 304 எனக்கு எதிர்த்த வீடு.அவர் வந்து ஆறு வருடங்களாகிறது..இது வரை ஒரு தடவை கூட என்னுடன் பேசியதே இல்லை..//

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு ஆசாமிகள் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். [என்னையும் சேர்த்துத்தான் ] ;)))))

நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்

வல்லிசிம்ஹன் said...

இன்னிக்குதான் அந்தப் பெயிஙடைப் பற்றி படித்தேன். இப்ப அதையும்வைத்து நீங்கள் ஒரு கதையே எழுதிவிட்டீர்கள்.
கதையில் வரும் 305 ஆம் வீட்டு மனிதர்!!!
மனித சுபாவமே இப்படித்தான் போலிருக்கு.

அப்பாதுரை said...

//தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பேயே மேல்!
வீட்டுக்காரருக்கு என்ன வாஞ்சை! அடடா!

வெங்கட் நாகராஜ் said...

//தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பேயே மேல்!//

அதானே....

இராஜராஜேஸ்வரி said...

/“ ரொம்ப சரி.. தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பேயே மேல்!..நீங்களே இருங்க...” என்று அவரும் பெரிய மனசு பண்ணி சொல்லி விட்டார்..//

பெரிய மனதுக்காரர் தான் ..!

மோகன்ஜி said...

மூவார்! மூவார்!! நலம் தானே? நல்லா வீடு மாறப் பார்த்தீங்க!

/தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பேயே மேல்!/ உங்க வீட்டு ஓனர் மொபைல் எண்ணைத் தரவும்.. மனுசனுக்கு ஒரு சபாஷ் சொல்லணும்..

sury siva said...

therinja pisasu
99999 00000
theriya pisasu
00000 00000
First
to cell to naraka
prefix. 00
swarga 000
then put the correct code no.
there will be answering machine.
To proceed in English press 1
thamizhil ariya 2 ai amukkam.
hindi mein jannen ke liya 3 ko dhabayiye.

if you press the right no.
press 1 to talk to PRO Swargam
press 2 to talk to PrO naragam.
Press 0 to go back to the main menu.
Press 9 to talk to Yaman directly.

I tried once and gave up in the middle.

subbu thatha.