*
கூர் விழிப் பார்வையிலே கூழாக்கி, என்னை
ஊர் சிரிக்க வைத்து விடாதடி, பெண்ணே!
கார் மேகம் கூடி ககன நீர் விழுந்தது போல்,
வார் அறுந்த பையாய் வீழ்த்தி விட்டாயென்னை!
**
உமிழ் நீரில் உறைகின்ற கற்கண்டே! உந்தன்
குமிழ் சிரிப்பைக் காணும், தகை சால்
சான்றோர்க்கும், தமிழ் இனிதா என்ற சந்தேகம்,
தன்னாலே வந்து விடும்!
***
இழப்பதற்கு இல்லா இந்நிலையில் நானும்,
இழந்து விட்டேன் என்னை உன்னிடமே, பஞ்சம்
பிழைப்பதற்கு வந்த அசலூர் காரன் போல்,விழியால்
பிழிந்து எடுத்து விட்டாய் என்னை!
கூர் விழிப் பார்வையிலே கூழாக்கி, என்னை
ஊர் சிரிக்க வைத்து விடாதடி, பெண்ணே!
கார் மேகம் கூடி ககன நீர் விழுந்தது போல்,
வார் அறுந்த பையாய் வீழ்த்தி விட்டாயென்னை!
**
உமிழ் நீரில் உறைகின்ற கற்கண்டே! உந்தன்
குமிழ் சிரிப்பைக் காணும், தகை சால்
சான்றோர்க்கும், தமிழ் இனிதா என்ற சந்தேகம்,
தன்னாலே வந்து விடும்!
***
இழப்பதற்கு இல்லா இந்நிலையில் நானும்,
இழந்து விட்டேன் என்னை உன்னிடமே, பஞ்சம்
பிழைப்பதற்கு வந்த அசலூர் காரன் போல்,விழியால்
பிழிந்து எடுத்து விட்டாய் என்னை!
7 comments:
//இழப்பதற்கு இல்லா இந்நிலையில் நானும்,இழந்து விட்டேன் என்னை உன்னிடமே//
ஆஹா அருமை.
[அது சரி, அந்தப்பொண்ணு யார் ஸ்வாமி????? ;) ]
ரசித்தேன்.
வெண்பா(??!!)
மூவார்! காதல் நன் பா.. என்றே ரசித்தேன் நண்பா!
வெண்பா வடிவில் புதுக்கவிதை. அருமை.http://sornamithran.blogspot.com
ரசிக்க முடிகிற பா.
அன்புள்ள
சுவையாக உள்ளது.
ஆனந்தம்.
அருமை அய்யா அருமை
Post a Comment