Saturday, March 23, 2013

வழுக்கையால் விழுந்த தலை !




"விழுந்திடுத்துப்பா”
“என்னப்பா..என்ன?”
“வழுக்கை”
இடுப்பை குனித்து ஜப்பான்காரர்கள் வணக்கம் சொல்லும் வண்ணம், தன் வழுக்கை விழுந்த  தலையை வருத்தத்துடன்  காண்பித்தான் விஸ்வம்.
”இது தானா.. நான் கூட என்னவோ..ஏதோ என்று பயந்துப் போய் விட்டேன்”
“என்னப்பா இது நான் ஏதோ சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. நீ கிண்டல் பண்றியே?”
“இது ஒண்ணும் கவலைப் படுகிற விஷயம் இல்லையப்பா..எல்லாருக்கும் தான் வழுக்கை விழறது..வாஷிங்டன்,ஐஸனோவர், நிக்ஸன், டிகால், குருச்ஷேவ்...”
  ” இருப்பா..இரு... நம்ம நாட்டுத் தலயில  யாருக்கும் வழுக்கை இல்லையா..?”
 “ பொறு அப்பேன்...ஜவஹர்லால்  நேரு..ராஜாஜி, ஏன் மஹாத்மா காந்தியே கூட..”
   “ இருப்பா..இது எவ்வளவு மனசுக்கு கஷ்டமா இருக்கு?”
   “தம்பி...வருத்தப் படாதே..இதுல ரொம்ப நல்லது இருக்கு..அழுக்கு சேராம தலை பளிச்னு இருக்கும்...ஐடி கார்டை தூக்கிட்டுப் போகிறார்போல சீப்பைத் தூக்கிண்டு போக வேண்டாம்...பேன் தொல்லை இல்லை...கண்ணாடி முன்னாடி ரொம்ப நேரம் நின்னு தலை வாரிக்க வேண்டாம்..அதனால, நேரத்துல பஸ்ஸை பிடிச்சுடலாம்...”
     ”என்னவோ போ” என்றான் அலுப்புடன்!
     உடனேயே ஒரு வெண்பாவை எடுத்து விட்டேன்..அதற்குப் பிறகு தான் அடங்கினான், அவன்!
அந்த வெண்பா இதோ:

அழுக்கு,பொடுகு,பிசிக்கினால் படும் பாடில்லை
வழுக்கி விழுந்திடுமே வந்துறையும் பேன்களெல்லாம்,
அழகன்  இவனென்று வயசுப் பெண்களும்  நேசிக்கும்,
வழுக்கையால்  விழுந்த தலை!


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வெண்பா...

எதோ ஒரு விதத்தில் கில்லாடியாக உள்ளார்கள் என்பது உண்மையா...?

வை.கோபாலகிருஷ்ணன் said...

வெண்பா அருமை. பாராட்டுக்கள்.

// “தம்பி...வருத்தப் படாதே..இதுல ரொம்ப நல்லது இருக்கு..அழுக்கு சேராம தலை பளிச்னு இருக்கும்...

ஐடி கார்டை தூக்கிட்டுப் போகிறார்போல சீப்பைத் தூக்கிண்டு போக வேண்டாம்...

பேன் தொல்லை இல்லை...

கண்ணாடி முன்னாடி ரொம்ப நேரம் நின்னு தலை வாரிக்க வேண்டாம்..

அதனால, நேரத்துல பஸ்ஸை பிடிச்சுடலாம்...”//

ஆஹா, அற்புதமாக கண்டுபிடிப்பாக உள்ள்து.

இந்த பாக்யம் பெற்ற அனைவருக்கும், என் அன்பான வாழ்த்துகள்.

Unknown said...

அழுக்கு,பொடுகு,பிசிக்கினால் படும் பாடில்லை
வழுக்கி விழுந்திடுமே வந்துறையும் பேன்களெல்லாம்,
அழகன் இவனென்று வயசுப் பெண்களும் நேசிக்கும்,
வழுக்கையால் விழுந்த தலை!//

’நச்’. என் பையனுக்கு 29 வயது நடக்கிறது. இப்பவே லேசாக பின் வழுக்கை ஆரம்பித்து விட்டது. என்ன செய்வது. மணிக்கணக்காக கணினி/மடிக்கணினியிலே வேலை பார்க்கும் பிள்ளைகள் ரொம்ப பாவம். நேற்று என் மகன் அலுவலகத்தில் கீ போர்டை க்ளீன் செய்ய வந்தவர் கேட்டாராம். ’என்ன சார், கீ போர்டெல்லாம் முடி’ன்னு.

வீட்டில் கூட தலையில் முடி இருப்பதில்லை. தரையில் நிறைய இருக்கிறது.

ஒரு ஜோக். இது என் அத்தை மகன் பெண் பார்த்து விட்டு வந்ததும் ‘பெண்ணுக்கு எவ்வளவு முடி இருக்கு?’ என்ற கேள்விக்கு ‘நின்னா தோளைத் தொடும். படுத்துண்டா தரையைத் தொடும்’ என்றான்.

அப்பாதுரை said...

excellent joke Jayanthi Ramani.

G.M Balasubramaniam said...


They can not have wind in their hair...!

வெங்கட் நாகராஜ் said...

//ஐடி கார்டை தூக்கிட்டுப் போகிறார்போல சீப்பைத் தூக்கிண்டு போக வேண்டாம்..//

அட நல்ல விஷயம். என் நண்பர் பத்மநாபனுக்குச் சொல்ல வேண்டும்! :)

நல்ல நகைச்சுவை. வெண்பாவினை ரசித்தேன்!

இராஜராஜேஸ்வரி said...

நகைச்சுவை வெண்பா அருமை ..!

வழுக்கை ..
வழுக்கி வழுக்கி சிரிக்கவைத்தது ..