Saturday, March 2, 2013

ஹ..ஹ..ஹஹ்ஹ்ஹாஹ் ஹா !


பஸ்ஸில் தொங்கிக் கொண்டு தான் வந்தேன் என்று சொல்ல வேண்டும்..
அப்போது என் பின்னால் யாரோ கை தட்டி கூப்பிடுவது போல் இருந்தது ..
பார்த்தால் நண்பர். அவரது வலது பக்கம் உள்ள நபர், எழுந்திருக்க,
முயற்சிக்க எனக்கு அந்த சீட்டை கொடுக்கத் தான் நண்பர் விரும்பியிருக்கிறார்..
நானும் ஒரு வித பரபரப்புடன் அந்த சீட்டைக் கைப்பற்றி உட்கார்ந்து கொண்டேன் .
     "சார், நான் தான் உங்களுக்கு இடம் கொடுத்தேன் .."என்றார் பெருமையாய் !
    " சார் மன்னிக்கணும் ..நீங்க எனக்கு இடம் கொடுக்க வில்லை!'
      இது என்னடாது வில்லங்கம்  பிடிச்ச ஆளை பக்கத்துல உட்கார  வைத்திருக்கிறோம்  என்று நினைத்தது
போல இருந்தது அவர் பார்வை..
     இருந்தாலும், சமாளித்துக் கொண்டு கேட்டார் ..
     " எப்டி சொல்றீங்க?"
     "சார்...நான் எங்கே உட்கார்ந்திருக்கேன் ?"
     "என் பக்கத்திலே .." -
     சொல்லும் போதே பயம் தெரிந்தது!
     " உங்களுக்கு அது எந்த பக்கம் சார்?"
     " வலப் பக்கம்..."
     "அப்ப வலத்தைக் கொடுத்துட்டு, இடம் என்று சொல்றீங்களே சார் .."
என்றேன் ..
    இறங்க வேண்டிய ஸ்டாப்புக்கு இரண்டு ஸ்டாப் முன்னாடியே, எனக்கு 'இடத்தை'க்கொடுத்து விட்டு மரியாதையாய்  இறங்கிக்   கொண்டார், நண்பர்.   
உங்களுக்கு நான் ரொம்பவே இடம் கொடுத்து விட்டேன் என்று சொல்லாமல்
சொல்வது போல் இருந்தது அவர் செய்கை !  
அதே நண்பர் மறு நாள் ஆபீஸில் என் சீட்டிற்கு வந்து 'குட்மார்னிங்' என்று சொல்ல,  நானும் குட்மார்னிங் என்றேன்.
"பரசு..ஒரு விஷயம் .." 
"சொல்லுங்க.."
"நாய் கிட்ட Tiger biscuit போட்டா அது உங்களை விட்டுட்டு பிஸ்கட்டை சாப்பிடும்..டைகர் கிட்ட நாய் பிஸ்கட் போட்டா அது பிஸ்கட்டை விட்டுட்டு உங்களை சாப்பிடும்...இதுலேர்ந்து என்ன தெரியறது ?"
"ஒன்று மட்டும் தெரியறது..'
"என்ன .."
"போயும்...போயும்..சீட்டிற்கு வந்து ஒங்களுக்கு குட்மார்னிங் சொன்னேனே ..
அது தப்புன்னு தெரியறது .."
  காலை உதைத்துக் கொண்டு சென்றார் பரசு...
 எனக்கு ஏக திருப்தி ... 
  "இதே பரசுவிடம் ஒரு வாரம் முன்பு நான் போய் குட்மார்னிங் சொல்ல,
அவர் அதற்கு விழுந்து விழுந்து சிரிக்க..எதற்கு அவர் சிரிக்கிறார் என்று நான் 
வழக்கம் போல் முழிக்க ...."சாரி சார்.நீங்க ஏதோ ஜோக் சொல்றீங்களோன்னு  
 நினைச்சேன்.." என்று அவர் போட்ட மொக்கைக்கு பதில் மொக்கை தான் 
   இன்று நான் செய்தது!
 .. 
     

11 comments:

தி.தமிழ் இளங்கோ said...

சிரிப்புத்தான் வருகுதைய்யா!

”தளிர் சுரேஷ்” said...

அன்றாட வாழ்வியல் நகைச்சுவை அருமை! பகிர்வுக்கு நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...


"ஹ..ஹ..ஹஹ்ஹ்ஹாஹ் ஹா !"

அருமை ஸ்வாமீ.

நம் பழைய நண்பர் ஸ்ரீநிவாஸ கோபாலன் நினைவுக்கு வந்தார்.

சரி தானே ?

நிலாமகள் said...

கொன்னுட்டீங்க சார்

ரிஷபன் said...

குட் மார்னிங் :)

sury siva said...

// சாரி சார்.நீங்க ஏதோ ஜோக் சொல்றீங்களோன்னு
நினைச்சேன்.." //

வடிவேலு இடம் உங்களுக்கே.

சுப்பு தாத்தா.

RAMA RAVI (RAMVI) said...

//இறங்க வேண்டிய ஸ்டாப்புக்கு இரண்டு ஸ்டாப் முன்னாடியே, எனக்கு 'இடத்தை'க்கொடுத்து விட்டு மரியாதையாய் இறங்கிக் கொண்டார், நண்பர். //

ஹா..ஹா..ஹா.

Muttuvancheri S.Natarajan said...

vendaam sir! parasuvai urasa vendaam!
(periya doubt!.Neenga ukkaanthathukku appuram avarukku seatil engae idam irunthathu?)

இராஜராஜேஸ்வரி said...

அருமையான நகைச்சுவைப்பகிர்வுகள்..
பாராட்டுக்கள்..

ADHI VENKAT said...

ஹா..ஹா..ஹா...

சிவகுமாரன் said...

ஹா ஹா ஹா ஹா.
உண்மையிலேயே ஜோக்குக்கு தான் சிரிச்சேன் சார்.